கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்காக 500 "ஆன்-லைன்' உதவி மையங்கள்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வசதியாக, மாநிலம் முழுவதும், உதவி மையங்கள் அமைக்கப் பட்டு உள்ளன. சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, இந்தியன் வங்கி கிளையில் அமைக்கப்பட்டுள்ள, "ஆன்-லைன்' உதவி மையத்தை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ், நேற்று காலை திறந்து வைத்தார்.

அனைத்து இடங்களிலும்... : பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மூன்று கணினிகளுடன் கூடிய வசதிகள், இந்த மையத்தில் ஏற்படுத்தப் பட்டு உள்ளன. இதேபோல், மாநிலம் முழுவதும், 500 "ஆன்-லைன்' உதவி மையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன; பல இடங்களில் அமைக்கப் பட்டு விட்டன. சென்னையில், அம்பத்தூர், ஆவடி கேம்ப், பார்க் டவுன் உள்ளிட்ட, ஒன்பது தபால் நிலையங்களிலும்; அண்ணாநகர், புரசைவாக்கம், துறைமுகம், ஆயிரம் விளக்கு, தி.நகர், மயிலாப்பூர் ஆகிய ஆறு இடங்களில் உள்ள இந்தியன் வங்கி கிளைகளிலும், "ஆன்-லைன்' உதவி மையங்கள் அமைக்கப் பட்டு விட்டன. மேலும், 25க்கும் மேற்பட்ட இடங்களில், மையங்கள் அமைக்க திட்டமிடப் பட்டு உள்ளது.

40 ஆயிரம் பேர் பதிவு : தற்போது, குரூப்-4 தேர்வை அறிவித்துள்ளோம். இத்தேர்வுகள் உட்பட, இனி நடைபெறும் அனைத்து தேர்வுகளுக்கும், "ஆன்-லைன்' மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுகளுக்கு இதுவரை, 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தேர்வாணைய இணையதளத்தில், தேர்வர்கள் தங்கள் பெயரை நிரந்தர பதிவாக செய்துகொள்ளலாம் என, ஏற்கனவே அறிவித்தோம். இதுவரை, 40 ஆயிரம் பேர் இதில் பதிவு செய்துள்ளனர். இப்பதிவு, ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். ஒருமுறை பதிவு செய்துவிட்டால், ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனியாக பதிவு செய்யத் தேவையில்லை. ஆனால், நிரந்தர பதிவு எண்ணை குறிப்பிட்டு, எழுதப்போகும் தேர்வுக்குரிய தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்; விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

சென்னையில் 24 மையம் : நிரந்தர பதிவு செய்யாதவர்கள், இணையதளம் மூலம் பெறப்படும் செலுத்துச் சீட்டை பயன்படுத்தி, 820 தபால் நிலையங்களிலும்; 805 இந்தியன் வங்கி கிளைகளிலும், விண்ணப்பக் கட்டணமாக 50 ரூபாயும்; தேர்வுக் கட்டணமாக 75 ரூபாயும் செலுத்த வேண்டும். இதுவரை, 104 மையங்களில் நடந்த தேர்வாணையத்தின் தேர்வுகள், இனி, 245 மையங்களில் நடைபெறும். சென்னையில், 24 மையங்களில் தேர்வுகள் நடக்கும். இவ்வாறு நடராஜ் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2024-2025 Final Answer Key

  NMMS 2024-2025 Final Key Answer Released by DGE >>> Click Here to Download...