கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>குரூப்- 4 தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க நூதன முறை : டி.என்.பி.எஸ்.சி

குரூப்- 4 தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், அறைக்கு, 20 பேர் வீதம் ஆண், பெண் தேர்வர் கலந்து தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே வயதுள்ளோர் அருகருகே அமர தடை என பல நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எடுத்துள்ளது.
குரூப்- 4 நிலையில், 10 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப, ஜூலை 7ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வை நடத்துகிறது. இத்தேர்வை, 12 லட்சத்து 34 ஆயிரத்து 238 பேர் எழுதுகின்றனர். குரூப்- 8 தேர்வை, 3 லட்சத்து 53 ஆயிரத்து 561 பேர் எழுதுகின்றனர். ஒரே நிலையில் நடக்கும் இரு தேர்வையும் சேர்த்து, 15 லட்சத்து 87 ஆயிரத்து 799 பேர் எழுதுகின்றனர். தேர்வாணையம் இதுவரை நடத்திய தேர்வுகளில், அதிகபட்ச தேர்வர்கள் பங்கேற்பது, இதுவே முதல் முறை.
தேர்வர் எண்ணிக்கை அதிகரிப்பால், தேர்வு மையங்களும் முதல் முறையாக, 4,250 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும், 15 முதல் 20 அறைகளில் தேர்வுகள் நடக்கும். குரூப்- 4 தேர்வு, காலையிலும்; குரூப்௮ தேர்வு (இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் பணியிடம்), பிற்பகலிலும் நடக்கிறது.
இரு தேர்வுமே, 300 மதிப்பெண்களுக்கு நடக்கும். 200 கேள்விகளுக்கு, தலா ஒன்றரை மதிப்பெண் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. "அப்ஜக்டிவ்&' முறையில் தேர்வு நடக்கிறது. தேர்வுப் பணியில், ஆசிரியர், அரசு ஊழியர் என, ஒரு லட்சம் பேர் ஈடுபடுகின்றனர்.
அதிகமானோர் பங்கேற்கும் தேர்வை முதல் முறையாக, டி.என்.பி.எஸ்.சி., நடத்துவதால், தேர்வில் எவ்வித முறைகேடுகளும் நடக்கக் கூடாது என்பதற்காக, பல்வேறு புதிய யுக்திகளை செயல்படுத்துகிறது. தேர்வு எழுதும் அறை ஒன்றில், 20 பேருக்கு மேல் இருக்காதபடி, தேர்வாணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு ஆண் தேர்வருக்குப் பின், ஒரு பெண் தேர்வர் அமரவும்; ஒரே வயதுடையோர் அருகருகே அமராமல், வயது வித்தியாசத்துடன் கூடிய தேர்வர் கலந்து எழுதவும், தேர்வாணையம் ஏற்பாடு செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஒரே "பின்கோடு&' உடைய தேர்வர், ஒரே அறையில் அமர்வதையும், தேர்வாணையம் தடுத்துள்ளது. மொத்த தேர்வு மையங்களில், முறைகேடுகள் நடக்கும் பகுதிகளாக கருதப்படும் 400 மையங்களை, "வெப்-கேமரா, லேப்-டாப்&' மூலம், முழுநேரமும் கண்காணிக்கவும்; மற்றவைகளில், மையத்திற்கு இரண்டு கேமராமேன்கள் வீதம், "வீடியோ&' எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், வருவாய் கோட்ட அதிகாரிகள், இணை இயக்குனர் நிலையிலான அதிகாரிகள், தேர்வை பார்வையிடுவர் என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், இந்த அதிகாரிகளின் கீழ், தாலுகாவிற்கு, இரு தனி பறக்கும் படை குழுக்கள் வீதம், 440 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

08-01-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்:மருந்து குறள...