கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

New Regime லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
New Regime லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Income Tax | Rebate | Marginal Relief : New Regimeன் பலன்கள் என்னென்ன? யாருக்கு?

 

Income Tax | Rebate | Marginal Relief : New Regimeன் பலன்கள் என்னென்ன? யாருக்கு?


✍🏼செல்வ.ரஞ்சித் குமார்


நடப்பு (2025-26) நிதியாண்டில், New Regimeல் எதுவரை வரி உண்டு, Rebate, Marginal Relief எனும் வரித் தள்ளுபடிகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை இப்பதிவில் வரிசைக்கிரமமாகத் தெரிந்து கொள்வோம்.



Total Gross Income :


Pay + DA + All other Allowances + EL Surrender + Any Pay Arrear = Total Gross Income.


(கூடுதலாக Savings & Investmentற்கான வட்டி ITRன் போது தானாகவே வருமானக் கணக்கில் சேர்க்கப்படும்)



Net Taxable Income :


இந்த Total Gross Incomeல் இருந்து,


1. மாற்றுத்திறனாளி போக்குவரத்துப் படி

2. Standard Deduction Rs.75,000/- 


உள்ளிட்டவற்றைக் கழித்துவரும் தொகையே Net Taxable Income. இத்தொகை 10ன் முழுமையாக்கப்பட்டு வரிவிதிப்புக் கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும்.



Tax Slab :


Net Taxable Incomeற்கு 2025-26 நிதியாண்டில் பின்வருமாறு வரி விதிக்கப்படுகிறது.


Rs.4,00,000 வரை                    - வரியில்லை

Rs.4,00,001 to Rs.8,00,000     - 5%

Rs.8,00,001 to Rs.12,00,000   - 10%

Rs.12,00,001 to Rs.16,00,000 - 15%

Rs.16,00,001 to Rs.20,00,000 - 20%

Rs.20,00,001 to Rs.24,00,000 - 25%

Rs.24,00,000க்கு மேல்           - 30%



Rebate :


Net Taxable Income  Rs.12,00,000/-க்குள் இருப்பின் அதற்குண்டான வருமானவரி U/S.87Aன் கீழ் தள்ளுபடி செய்யப்படும்.


அதாவது Net Taxable Income Rs.12,00,000/- எனில்,

முதல் 4,00,000 × 0% = 0

2வது  4,00,000 × 5% = 20,000

3வது  4,00,000 × 10% = 40,000

என்று மொத்தமாக Rs.60,000/- வரி வரும். இந்தத் தொகையை Rebate ஆகக் கழிப்பதன் மூலம் வரி சுழியமாக்கப்படும். இவ்வாறுதான் 12 இலட்சம் வரை Tax இல்லை என்று கூறப்படுகிறது.



Marginal Relief :


Net Taxable Income மேற்படி Rebate வரம்பைவிட ரூ.10 கூடி Rs.12,00,010/- என்று வருமானால்  Rebate கிடையாது என்பதால் அணற்கான வரியாக Rs.60,002/-ஐ செலுத்தியாக வேண்டும். Marginல இருந்து வெறும் 10 ரூவா கூடுனது குத்தமா? என்று தோன்றலாம். இக்குறையைப் போக்கத்தான் கடந்த 3 ஆண்டுகளாக Marginal Relief என்ற முறை நடைமுறையில் உள்ளது.


இதன்படி, Tax Marginஆன ரூ.12,00,000/-ஐவிடக் கூடுதலாக எவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளோமோ அதை மட்டும் வரியாகக் கட்டினால் போதும். மீதத்தொகை U/S.87Aன் கீழ் Marginal Relief என்று கழிக்கப்பட்டுவிடும்.


உதாரணமாக Net Taxable Income Rs.12,00,010/- என்றால், 12 இலட்சத்தைவிடக் கூடுதலாக உள்ள அந்த 10 ரூபாயை மட்டும் அப்படியே வரியாகக் (+ 4% Cess) கட்டிக் கொள்ளலாம்.


இந்த Marginal Relief முறை என்பது Net Taxable Income Rs.12,70,580/- வரை பயன்படுத்தப்படும்.


இதற்கு மேலான தொகை, அதாவது Net Taxable Income Rs.12,70,590/- எனில் இந்தக் கூடுதல் தொகையும், வழக்கமான கணக்கீட்டிற்கான வரியும் கிட்டத்தட்ட சமமாக வந்துவிடும். அதாவது,

Rs.4,00,000 =   0% = 0

Rs.4,00,000 =   5% = 20,000

Rs.4,00,000 = 10% = 40,000

Rs.70,590.   = 15% = 10,589

மொத்த வரி          = 70,589


எனவே, Rs.12,70,580/-ற்கு மேலான தொகைக்கு Marginal Reliefன் தேவை இருக்காது.



Marginal Relief Formula :


12 இலட்சத்துக்கு மேலே வரும் தொகையைக் கட்டினால் போதுமென்றால், அதற்கென ஒரு கணக்கீடு இருக்க வேண்டுமல்லவா? இருக்கிறது.


Marginal Relief = Actual Tax - Tax margin Excess Income


இந்த Marginal Reliefஐக் கண்டுபிடித்து அதை மொத்த வரியில் கழித்துவிட்டால் கட்ட வேண்டிய வரி கிடைத்துவிடும்.


உதாரணமாக Net Taxable Income Rs.12,10,000/- எனில்,


Rs.12,10,000/-ற்கான Actual Tax = 61,500


12Lஐ விடக் கூடுதல் வருமானம் = Rs.10,000


ஃ Marginal Relief (61,500 - 10,000) = Rs.51,500


ஆக, Net Taxable Income Rs.12,10,000/-க்கான நிகர வருமான வரி என்பது,

= Actual Tax - Marginal Relief

= 61,500 - 51,500

= Rs.10,000/-



>>> Income Tax Calculation Statement 2025-2026 (PDF)...



>>> Best Dash Cam details...


களஞ்சியம் செயலியில் பழைய அல்லது புதிய முறையில் வருமான‌வரி பிடித்தம் தேர்வு செய்யும் முறை

 

களஞ்சியம் செயலியில் பழைய அல்லது புதிய முறையில் வருமான‌வரி பிடித்தம் தேர்வு செய்யும் முறை


How to choose old or new regime income tax deduction method in the Kalanjiyam app



🌹அனைவருக்கும் வணக்கம்...


களஞ்சியம் செயலி வழியே வருமான‌வரி பிடித்தம் செய்யும் பழைய அல்லது புதிய முறை தேர்வு செய்தல் தொடர்பாக...


🌹தாங்கள் களஞ்சியம் வழியே தேர்ந்தெடுக்கப்பட்ட முறை( Old or New) என்பது IFHRMS -ல் மாதம் தோறும் பிடித்தம் செய்வதற்காக மட்டுமே...*


1.New Regime தேர்ந்தெடுத்தால்‌ App -ல் மட்டும் select செய்தால் போதுமானது... இம்முறையில் துல்லியமாக கணக்கீடு செய்து பிப்ரவரி 2026 வரை பிரித்து சம தவணைகளாக வரும்....


2. Old Regime App-ல் தேர்ந்தெடுத்தால் தவறாது https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/ இணையதளத்திற்கு சென்று INCOME TAX Self declaration செய்ய வேண்டும்... அதில் நீங்கள் கழிக்க கூடிய அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்...


உதாரணமாக: Housing loan, LIC, PLI & NPS... அப்பொழுது தான் சரியான தொகையை பிடித்தம் செய்யும்...


நன்றி...


Deduction / Exemption on Income Tax Allowed in New Tax Regime


வருமான வரியில் புதிய வரி முறையை தேர்ந்தெடுத்தவர்களுக்கான அனுமதிக்கப்படும் வரி விலக்குகள்


Deduction / Exemption on Income Tax Allowed in New Tax Regime - Standing Army Pay Commission Section Advisory No : 16 / 2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



வருமான வரி - NEW TAX REGIME - வரம்புகள் மாற்றம்...

வருமான வரி - NEW TAX REGIME - வரம்புகள் மாற்றம்...


Standard deduction at 75000 vs 50000 earlier 


Tax rates changed in New Tax regime 


0-3lakh - Nil 

3-7 lakh -5% 

7-10 lakh -10%

10-12 lakh -15%

12- 15lakh -20% 

Above 15Lakh -30% 



Capital Gains Tax:


Short Term now 20% 

(instead of 15%)


Long term now 12.5%

(instead of 10%)







IFHRMSல் பழைய அல்லது புதிய வரிவிதிப்பு முறையை மாற்றிக்கொள்ள வாய்ப்பு...



IFHRMSல் பழைய அல்லது புதிய வரிவிதிப்பு முறையை மாற்றிக்கொள்ள வாய்ப்பு...


IFHRMSல் வரிப்பிடித்தம் செய்ய முன்னர் தாங்கள் தேர்வு செய்துள்ள வரிவிதிப்பு முறையில் (Old Regime / New Regime) ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறிக்கொள்ளும் வசதி தற்போது அளிக்கப்பட்டுள்ளது.


வரிவிதிப்பு முறையை மாற்ற விரும்புவோர்


 https://www.karuvoolam.tn.gov.in 


என்ற முகவரியில் Login செய்யவும். பின்னர்


Employee Self Service


🔽🔽🔽


 Income Tax Declaration


🔽🔽🔽


 Self Service


🔽🔽🔽


IT Declaration (self)


என்ற வரிசையில் Click செய்தால், நீங்கள் தற்போதுள்ள வரிவிதிப்பு முறையில் இருந்து மாற்று முறைக்கு மாற,


Swap ........ to ........ Regime


என்ற Button இருக்கும். அதனை Click செய்து மாற்று வரிவிதிப்பு முறைக்கு மாறிக்கொள்ளலாம். ஒரு நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே இவ்வாறு மாற இயலும்.


*குறிப்பு :*


இம்மாத ஊதியத்திற்கான Centralized Payroll Run செய்யப்பட்டுவிட்டதால், நீங்கள் செய்யும் *மாற்றம் இம்மாத ஊதியத்திலேயே வெளிப்பட Mark For Recalculation செய்திட அலுவலகத்தில் உடன் தெரிவிக்கவும்.* இல்லையேல் அடுத்த மாதத்திலிருந்து தான் ஊதியத்தில் மாறும்.....


புதிய வருமான வரிமுறையில் உச்சவரம்பு உயர்வு - நிதி மசோதா திருத்தத்தில் அறிவிப்பு (Increase in ceiling of Income Tax New Regime - Notification in Finance Bill Amendment)...

 புதிய வருமான வரிமுறையில் உச்சவரம்பு உயர்வு - நிதி மசோதா திருத்தத்தில் அறிவிப்பு (Increase in ceiling of Income Tax New Regime - Notification in Finance Bill Amendment)...


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி மசோதாவுடன் 64 திருத்தங்களையும் தாக்கல் செய்தார். அவற்றில் ஒரு திருத்தம் , வருமானவரி திட்டத்தின் புதிய வரிவிதிப்பு முறையை தேர்வு செய்பவர்களுக்கு சலுகை அளிக்கிறது. 



புதிய வரிவிதிப்பு முறையில் , ரூ .7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது. ஆனால் , கூடுதலாக ரூ .100 வருமானம் இருந்தால் , அதாவது ரூ .7 லட்சத்து 100 வருமானம் வந்தால் , ரூ .25 ஆயிரத்து 10 வருமான வரி செலுத்த வேண்டும். 


எனவே , கூடுதலாக ரூ .100 வருமானத்துக்கு ரூ .25 ஆயிரத்து 10 வரி செலுத்த வேண்டி உள்ளது. இந்த திருத்தத்தில் , ரூ .7 லட்சத்துக்கு சற்று கூடுதலாக வருமானம் உள்ளவர்களுக்கு வரிச்சலுகை அளிக்கும்வகையில் , ரூ .7 லட்சத்து 27 ஆயிரத்து 700 வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


🍁🍁🍁 2020-2021ஆம் நிதியாண்டில் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டி இருக்கும்..? பழைய முறை - புதிய முறை எதை தேர்ந்தெடுப்பது - ஒரு ஒப்பீடு...

 2020 - 2021ஆம் நிதியாண்டில் நாம் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதை அறிந்து கொள்ளவும், வருமானவரி கணக்கீடு செய்ய பழைய முறையை தேர்ந்தெடுப்பதா அல்லது புதிய முறையை தேர்ந்தெடுப்பதா என்பதை உறுதி செய்து கொள்ளவும் வருமான வரித்துறை இணையதளத்தில் புதிய வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் வருமான வரியை செலுத்துபவரது வயது, அவரது ஆண்டு வருமானம், சேமிப்பு ஆகியவற்றை உள்ளீடு செய்தால் பழைய முறையின்படி அவர் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும், புதிய முறையின்படி அவர் எவ்வாறு வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும் நொடிப்பொழுதில் கணக்கீடு செய்து காண்பிக்கப்படுகிறது. இதன் மூலம் நாம் பழைய முறையை தேர்ந்தெடுப்பது அல்லது புதிய முறையை தேர்ந்தெடுப்பது - எது சிறந்தது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

சுருக்கமாக கூறினால் வீட்டுக் கடன், ஆயுள் காப்பீடு, சேமநல நிதி, பங்கேற்பு ஓய்வூதிய திட்ட நிதி சேமிப்பு கொண்டவர்களுக்கு பழைய முறையும், எவ்வித சேமிப்பும் இல்லாதவர்களுக்கு புதிய முறையில் பலனளிக்கும்.

வருமானவரித் துறையின் இணையதளம் முகவரி...

https://www.incometaxindiaefiling.gov.in/Tax_Calculator/

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்