கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 22.11.2020 (ஞாயிறு)...

 

🌹தேவை இல்லாமல்

பேசுவதை விட

அமைதியாகவே இருந்து விடலாம்

நம் மனது புரியாத யாருக்கும் நம் வார்த்தைகளும் புரியாது.!

🌹🌹கடந்து வந்த பாதையை திரும்பி ஒருமுறை பார்த்தேன் 

அதில் வலிகளை தந்தவர்களை விட 

வாழ்க்கையை கற்றுக் கொடுத்தவர்களே அதிகம்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயற்குழுக் கூட்டம் 28.11.2020(சனிக்கிழமை) அன்று தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது.                                         

🍒🍒அரியர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் எந்த விதிமீறலும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா விளக்கம் அளித்துள்ளார். பல்கலைக்கழகங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவுரைகளே, பல்கலைக்கழகங்களே அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🍒🍒 சென்னையில் 15 மண்டலங்களிலும் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை எழிலகத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார். சென்னை தண்ணீர் தேங்கும் இடம் மிக கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

🍒🍒26.11.2020- ALL INDIA STRIKE - அன்று யாருக்கும் CASUAL LEAVE வழங்கக்கூடாது - விடுப்பு எடுப்பவர்களுக்கு No Work No Pay ஒரு நாள் ஊதிய பிடித்தம் செய்ய தலைமை செயலாளர் உத்தரவு.

🍒🍒பட்டய கணக்காளர் பயிற்சி அடுத்த மாதம் 23-ம் தேதி தொடங்குகிறது.

🍒🍒செட் தேர்வு முடிவுகள் நவ.27-ல் வெளியீடு

🍒🍒சர்வதேச காமன்வெல்த் கட்டுரைப் போட்டியில் இந்திய வம்சாவளி, இந்திய மாணவர்கள் வெற்றி

🍒🍒 நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும்; சிபிஎஸ்இ செயலாளர் தகவல்

🍒🍒புதிய பென்சன் திட்டத்தில் இதுவரை விதிகள் உருவாக்கவில்லை தமிழக அரசின் நிதித்துறை விளக்கம்

🍒🍒 தனியார் மருத்துவகல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் அறிவிப்பு

🍒🍒அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு தொடர்பான அறிவுரைகள் சார்பு : இயக்குநர் கடிதம் வெளியீடு.

🍒🍒வாடிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்த 5 அப்ளிகேஷன்களை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள் நிறுவனம்

🍒🍒பிறப்பு சான்றிதழ்களில் பெயர்களை பதிவு செய்ய 5 ஆண்டு சிறப்பு சலுகை

🍒🍒மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.க ஏற்கும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

🍒🍒உலகத்தின் மிக தொன்மையான மொழி தமிழ்

“எனக்கு தமிழ் தெரியாது.. மன்னியுங்கள்”

மத்திய அமைச்சர் அமித்ஷா

🍒🍒மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளைப் பிராந்திய மொழிகளில் எழுத அனுமதிக்க பிரதமருக்குக் கோரிக்கை

🍒🍒ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்கள்: பெற்றோர், கிராமத்தினர் மகிழ்ச்சி

🍒🍒சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவின் மீது உரிய மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

🍒🍒பள்ளிக் கல்வி நீதிமன்ற வழக்குகள் நிலுவை உரிய காலத்தில் நீதிமன்ற விதிமுறைகளை பின்பற்றி எதிர்வாதவுரை மேல்முறையீடு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தல் காலதாமதம் தவிர்த்திட அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

🍒🍒ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்களுக்கு புதிய ஊதியம் நிர்ணயம் செய்து காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை 

🍒🍒கொரோனா தடுப்பு பணிகளில் பணியாற்றி உயிர்நீத்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களில் உள்ளோருக்கு மருத்துவ படிப்பிற்கு உள்ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது

🍒🍒 கல்வி தொலைக்காட்சி - மாணவர்களுக்கு இணைய தளம் மூலம் பாடங்களை வீடியோ வடிவில் பதிவு செய்து இணைய தளம் மூலமாக கல்வி தொலைக்காட்சி மற்றும் இதர தொலைக்காட்சிகளிலும் பாடங்கள் ஒளிபரப்பு செய்தல் - சார்பு - கல்வி தொலைக்காட்சி சிறப்பு அலுவலர் அவர்களின் செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ள நிலையில் தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு

- வானிலை ஆய்வு மையம் 

🍒🍒வல்லரசு நாடுகளே ஆச்சரியம் கொள்ளும் அளவுக்கு மோடி ஆட்சி நடத்தி வருகிறார். 

கொரோனா அச்சுறுத்தலை போக்க அல்லும் பகலும் மோடி பாடுபடுகிறார். அவருக்கு தமிழக அரசு என்றும் துணை நிற்கும்

- முதல்வர் பழனிசாமி

🍒🍒கொரோனா தடுப்புப் பணியில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது

- மத்திய அமைச்சர் அமித்ஷா

🍒🍒தர்மபுரி , விருதுநகர் மாவட்டங்களில் மெகா டெக்ஸ்டைல் பூங்கா அமைக்க வேண்டும்.

தமிழ்நாடு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க வேண்டும் 

- முதல்வர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடம் கோரிக்கை

🍒🍒பெருந்தொற்று பரவல் தடுப்பு விதிகளுக்கு புறம்பாக சென்னையில் கூட்டத்தை சந்தித்த அமித் ஷாவை ஏன் போலீசார் கைது செய்யவில்லை? - நாகையில் காவல்துறையின் அனுமதியின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

🍒🍒பேரறிவாளன் விடுதலை விவகாரம் அவருக்கும், ஆளுநருக்கும் இடையேயானது

இதில் முடிவு எடுக்க வேண்டியவர் ஆளுநர் மட்டுமே.

இதில் சிபிஐக்கு எந்த தொடர்பும் கிடையாது: உச்சநீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் பதில் மனு தாக்கல்

🍒🍒கொரோனா குறித்து மருத்துவ நிபுணர்

குழுவுடன் பிரதமர் நேற்று முக்கிய ஆலோசனை;

கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும்

கொள்முதல் குறித்து கருத்துகேட்பு.

🍒🍒உலகில் மக்களுக்கு சுகாதார சேவைகள் எளிதில் கிடைக்கச் செய்யும் நடவடிக்கைளில்  இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

🍒🍒தொற்றைக் கட்டுப்படுத்துவதில் ஜி -20 நாடுகள் ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

🍒🍒டெல்லியில் மூன்றாவது கொரோனா அலை உருவாவதைத் தடுக்க மத்திய அரசும் கெஜ்ரிவால் தலைமையிலான அரசும் கடுமையாகப் போராடி வருகின்றன.

🍒🍒கார்ப்ரேட் வரி துஷ்பிரயோகம் மற்றும் தனியார் வரி ஏய்ப்பு காரணமாக உலக நாடுகள் ஆண்டிற்கு, 31 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

🍒🍒ஏர் இந்தியா விமானங்கள் தங்கள் பிராந்தியத்திற்கு வர 14 நாட்களுக்கு, ஹாங்காங் 5வது முறையாக தடை விதித்துள்ளது.

🍒🍒கொரோனாவிற்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் – அஸ்ட்ராசெனிகா என்ற பிரிட்டிஷ் நிறுவனம் மற்றும் இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்டுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டு வருகிறது.

🍒🍒ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட்டை இலங்கை கிரிக்கெட் வாரியம் நடத்தவிருக்கிறது. எனினும் இந்தத் தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட முன்னணி வீரர்கள் விலகி வருவது உள்ளிட்ட பிரச்னைகள் போட்டி அமைப்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

🍒🍒கடைசி 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலி விளையாடாதது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக இருக்கும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பாா்டா் தெரிவித்துள்ளாா்.

🍒🍒சமூக வலைத்தளத்தில் தனிநபர் மீது அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை, அபராதம்.

👉கேரள அரசின்  சட்டத்திருத்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்

🍒🍒EVM மெஷின் இருக்கும் வரை தேர்தல்களில் போட்டியிடமாட்டேன்

நடிகர் இயக்குநர் டி.ராஜேந்தர்

🍒🍒திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது

கூட்டணியில் கடந்த முறை 5 தொகுதியில் போட்டியிட்டோம்

கூட்டணியில் பேரம் பேசமாட்டோம். நாங்கள் கொள்கை ரீதியாக கூட்டணி வைத்துள்ளோம்

அபுபக்கர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...