கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 14.12.2020 (திங்கள்)...


🌹கோபமோ,சோகமோ அன்பானவர்களிடம் ஒரு நாளைக்கு மேல் பேசாமல் இருக்காதீர்கள். ஏனெனில் 

மனதிற்கு பிரிவை தாங்கும் சக்தி வந்துவிட்டால் பிரிவு நிரந்தரமாகிவிடும்.!

🌹🌹வேண்டாம் என்கிற இடத்தை விட்டு வெளியே வந்துவிடுங்கள்.

இல்லையேல் முதலில் அவமதிப்பார்கள்

அடுத்தது வெறுப்பார்கள் 

அடுத்து உங்களை தவறானவன் என்ற பட்டம் சூட்டிவிடுவார்கள்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈சென்னை கல்லூரிகளில் இன்று முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு

🌈🌈அரசு அலுவலகங்களில் கடைநிலை வேலைகளில் பட்டதாரி, இன்ஜினியர்களை நியமிப்பதால் பணிகள் பாதிப்பு: ஐகோர்ட் கிளை கருத்து

🌈🌈ஆசிரியர் அல்லாத 10 புதிய கல்லூரிகள் : தேர்வை ஒத்திவைக்க ராமதாஸ் கோரிக்கை

🌈🌈1.4 கோடி பேர் எழுதும் ரெயில்வே தேர்வு வருகிற 15ந்தேதி தொடக்கம் : 1 4 லட்சம் ரயில்வே பணியாளர் போட்டித் தேர்வுக்கான அனுமதி இ-கார்டுகள் வெளியீடு.

🌈🌈பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு

🌈🌈தமிழக அரசின் கவனத்தை ஈர்த்து ஒன்றுபட்டு போராட்ட களம் காண தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்களுக்கும் CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில மையத்தின் சார்பில் அழைப்பு                                                 🌈🌈ஐஏஎஸ், ஐபிஎஸ் (IAS, IPS) தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு அரசின் இலவசப் பயிற்சி:இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

🌈🌈நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும் தான் தேர்விற்கு வினாக்கள் கேட்கப்படும்- அமைச்சர் திரு.செங்கோட்டையன்

🌈🌈தமிழகத்தில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்கள் குறித்த விவரங்களை அனுப்பி வைக்க முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. - நாளிதழ் செய்தி 

🌈🌈புதுச்சேரில் 3 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களை அரசுக்கு ஒதுக்கக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. 

🌈🌈தமிழகத்தில் உள்ள 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றுவதற்கான அரசாணையினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

🌈🌈டெல்லியில் 19-வது நாளாக நீடிக்கும்

விவசாயிகள் போராட்டம்.

🌈🌈ஆந்திராவில் பரவி வரும் வலிப்புடன் கூடிய மர்ம நோய்க்கு அரிசியில் கலந்திருந்த பூச்சிக்கொல்லிகளே காரணம் - ஆய்வு முடிவு.

🌈🌈விவசாயிகளின் போராட்டத்தில்

மாவோயிஸ்டுகள் ஊடுருவி விட்டனர்;

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடும்

குற்றச்சாட்டு.

🌈🌈மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிக்கை; சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு மருத்துவர்கள் சார்பில் வழக்கு.

🌈🌈கேரளாவில் கொரோனா தடுப்பூசிக்கு

யாரிடமும் கட்டணம் வசூலிக்கப்படாது;

இதுவே அரசின் நிலைப்பாடு என முதல்வர்

பினராயி விஜயன் அறிவிப்பு.

🌈🌈கொரோனாவால் அமெரிக்காவில் அடுத்த 3 மாதங்கள் கடினமாக இருக்கும் - உலக சுகாதார நிறுவனம்.

🌈🌈கொரோனா வைரஸ் பெருந்தொற்றினை 15 நிமிடங்களில் கண்டறிகிற உமிழ் நீர் அடிப்படையிலான ஸ்மார்ட் போன் பரிசோதனையை அமெரிக்காவில் உள்ள துலேன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

🌈🌈கொரோனா வைரஸ் காரணமாக கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான எல்லை வருகிற ஜனவரி 21ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

🌈🌈அமெரிக்காவில் முதன்முறையாக இரண்டு மிருகக்காட்சி சாலைகளில் இருந்த 3 பனிச் சிறுத்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

🌈🌈சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள்; மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள்; கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? 

பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே

- கமல்ஹாசன்

🌈🌈போலி நீட் மதிப்பெண் சான்றிதழுடன் கலந்து கொண்டதாக, பரமக்குடியை சேர்ந்த மாணவி மற்றும்  அவருடைய தந்தை மீது 5 பிரிவுகளில் சென்னை போலீசார் வழக்குப்பதிவு

🌈🌈ஜனவரியில் பொதுக்குழு, செயற்குழு கூட்டி தலைவர் விஜயகாந்த் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பார்.வருகின்ற தேர்தல் தமிழகத்தின் முக்கியமான தேர்தல்.விஜயகாந்த் முன்னர் அளவு சுறுசுறுப்பாக இல்லை, சோர்வாக உள்ளார். ஆனால் நிச்சயம் தேர்தல் பிரச்சாரத்திற்கு கண்டிப்பா வருவார்

- பிரேமலதா விஜயகாந்த்

🌈🌈2021 சட்டபேரவை தேர்தலுக்கான முதல்கட்ட பரப்புரையை மதுரையிலிருந்து தொடங்கினார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 

🌈🌈விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஒரு நாள் உண்ணாவிரதம் அறிவிப்பு; ஆம்ஆத்மி கட்சியினர், ஆதரவாளர்கள், பொதுமக்களும் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க கெஜ்ரிவால் வேண்டுகோள்

🌈🌈கொரோனா சிகிச்சை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட 4,000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

🌈🌈டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஜனவரி 18ல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

🌈🌈“வழக்குகள் மூலம் என்னை அச்சுறுத்தலாம் என்று முதலமைச்சர் நினைத்தால் அதைவிட அரசியல் அறியாமை  ஏதும் இருக்க முடியாது” - ஆ.ராசா

🌈🌈 "டிசம்பர் 17ம் தேதி வங்கக் கடலில் தமிழக கரையோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட வாய்ப்பு; அதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு!" - வானிலை ஆய்வு மையம்

🌈🌈பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவி 9 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்காக திறப்பு

🌈🌈 வீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு SBI Privilege Home Loan என்ற புதிய வீட்டுக் கடன் திட்டம் அறிமுகம்.

🌈🌈6 லட்சம் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி - தலைமை செயலக சங்கத்திற்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மனு.

🌈🌈ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நிபந்தனை ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு அரசாணை விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்ப்பு.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...