கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 15.12.2020 (செவ்வாய்)...

🌹நேருக்கு நேர் சொல்லுபவன் நண்பன்.

நாலு பேருக்கு முன் சொல்லுபவன் எதிரி.

நாம் இல்லாத போது பேசுபவனே துரோகி.!

🌹🌹மற்றவர்களிடம் இருப்பவை எல்லாம் நம்மிடம்  இருக்கின்றனவா என்று 

பார்க்கின்றோமே தவிர

நம்மிடம் இருப்பவை எத்தனை பேரிடம் இல்லை என்பதை பார்க்கத் தவறி விடுகின்றோம்.!!

🌹🌹🌹யோசிக்காமல் நாம் செய்யும் சில செயல்கள்,

ஓர் நாள் நம்மை யோசிக்கக வைக்கும் இதை ஏன் செய்தோம் என்று.!!!

அனைவருக்கும் இனிய காலலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘10,11,12 பொதுத்தேர்வு நடத்துவது பற்றி பின்னர் தான் முடிவு செய்யப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

📕📘ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்களின் சான்றிதழ்கள் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் -தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவிப்பு -TNTEU/R/DR-1/2020/989

📕📘பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அட்டவணை, மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  கூறியுள்ளார்.

📕📘PGTRB - ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் இல்லை': முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்களால் பரபரப்பு.

📕📘CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் - புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்த வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - நாள் 18.12.2020

📕📘அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த கழிவறை அமைக்க தேவையான விவரங்களை கோருதல் சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு

📕📘கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்:19,500-62,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18/12 /2020

📕📘தமிழகத்தில் அம்மா மினி கிளிக்குகள் சேவையை முதல்வர் நேற்று தொடங்கிவைத்தார். 

ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவம் சார் பணியாளர் உடன் காலை 8 -12 மணி வரையும், மாலை 4- 8 மணி வரையும் மினி கிளினிக்குகள் செயல்படும்.

📕📘சட்டப்பேரவை தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன்.

தொகுதி பின்னர் அறிவிக்கப்படும்

- கமல்ஹாசன் 

📕📘இன்று முதல் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கி தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி.

📕📘சென்னை IIT-ல் 66 மாணவர்கள் உட்பட 71 பேருக்கு கொரோனா.

Campus-ல் உள்ள Mess-ல் சாப்பிடும் போது கொரோனா பரவியதாக தகவல்.

திறக்கப்பட்ட சில நாட்களிலேயே பலருக்கும் கொரோனா பரவியதால் வளாகம் மூடல்.

விடுதிகளில் உள்ள மாணவர்களின் அறைகளுக்கே சென்று உணவு விநியோகம்.

📕📘அடிப்படை வசதிகள் இருந்தால்தான் லே-அவுட் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு 

சென்னையை தவிர்த்து மற்ற பகுதிகளில் மழைநீர் வடிகால், தார்சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதிகள் இருந்தால்தான் 

இனி ஒப்புதல் 

- தமிழக அரசு

📕📘திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளிடம் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கோரிக்கை.

📕📘தடுப்பூசி வழங்க ஆயத்தமாகி வரும் மத்திய அரசு; தடுப்பூசி வழங்குவதில் பீகாரை விட தமிழகத்திற்கு முன்னுரிமை: முன்னுரிமை பட்டியலில் 4-வது இடத்தில் தமிழகம்

📕📘மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் ஆதரிப்பதாக, அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

அந்த குழுவில் இணைந்துள்ள தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, பீகார், மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 10 விவசாய அமைப்புகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார்.

📕📘சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம். தமிழகம், புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பிரசர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு

புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு. தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை

அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு 

சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம். நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம், புதுச்சேரியில் விவசாயி சின்னம் ஒதுக்கீடு

📕📘கடந்த தேர்தலில் மக்கள் நீதி மையத்துக்கு ஒதுக்கப்பட்ட டார்ச்லைட் சின்னத்தை இந்த தேர்தலில் எம்ஜிஆர் மக்கள் கட்சி கைப்பற்றியது.

டார்ச்லைட் கேட்டு ம.நீ.ம தாமதமாக கடிதம் எழுதியதாக தகவல்.

📕📘கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐஐடி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும் 

உணவு உட்கொள்ளும் இடத்தில் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் அலட்சியம் வேண்டாம் 

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

📕📘மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட பதிவாளர் உத்தரவு.

ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்லைன் வழியில் படிக்கவும் அறிவுறுத்தல்.

மறு உத்தரவு வரும் வரை எந்த துறைகளும் செயல்பட கூடாது எனவும் உத்தரவு.

அரசின் உத்தரவை தொடர்ந்து கடந்த வாரம் உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

📕📘டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 18ம் தேதி திமுக, கூட்டணி கட்சியினர் உண்ணாநிலை போராட்டம் அறிவித்துள்ளனர்.

டிசம்பர் 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 8 முதல் மாலை 5 வரை உண்ணாவிரதம் நடைபெறும். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள், அதன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அடையாள உண்ணாவிரதம் நடத்துகின்றனர். ஜனநாயக நெறிகளை பின்பற்றி அறவழியில் விவசாய பெருமக்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளன.

📕📘சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்நோக்கு கட்டிடத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தீட்டி தோட்டத்தில் இறகு பந்தாட்ட மைதானத்திற்கு அடிக்கல் நாட்டிய ஸ்டாலின் நல உதவிகளையும் வழங்கினார்.                         

📕📘RTGS என்ற உடனடி பண பரிமாற்ற சேவை வங்கிகளில் நேற்று முதல் 24 மணி நேரமும் வழங்கப்படுகிறது

ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் பரிமாற்றம் செய்ய விரும்புவோர் இனி 24 மணி நேரமும் RTGS சேவையை பயன்படுத்தலாம்

-ரிசர்வ் வங்கி

📕📘"டெல்லியில் நாங்கள் நடத்திவரும் போராட்டத்தில் தேச விரோதிகள் இருந்தால் அவர்களை அரசு கைது செய்யலாம்!" - விவசாயிகள்                                              

📕📘கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த சென்னை மெரினா கடற்கரை நேற்று முதல் திறக்கப்பட்டது.

📕📘கர்நாடக பேருந்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் இன்று ஜந்தாவது நாளாக நீடிக்கிறது.

📕📘மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வரும் நிதியாண்டிற்கான, பட்ஜெட் குறித்து முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

👉2021 - 22 நிதியாண்டிற்கான, பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம், கணொலி மூலம் இன்று நடைபெறுகிறது. காலையில் முதல் கட்டமாக பங்குதாரர்கள் உடனும், பிற்பகல், தொழில் அதிபர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

📕📘இந்தியாவில் அடுத்த மாதம் முதல் தடுப்பூசி விநியோகம் தொடங்க சீரம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் மத்திய அரசு அனுமதி வழங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

📕📘விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

ஆம்ஆத்மி கட்சியினர், ஆதரவாளர்கள் பொதுமக்களும் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

📕📘நடந்து முடிந்த அதிபர் தேர்தல்தான், அமெரிக்க வரலாற்றுலேயே மிகவும் ஊழல் நிறைந்தவை

ட்ரம்ப்  ட்வீட்

📕📘திமுகவின்  தமிழகம் மீட்போம், 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம், சமூக வலைத்தளங்களில் ஒரு கோடி பார்வைகளை பெற்றுள்ளது.

👉இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களை காணொலி வாயிலாக பல்லாயிரக்கணக்கானோர் மட்டுமின்றி தொலைக்காட்சி வாயிலாகவும், முகநூல், ட்விட்டர், யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களின் வாயிலாகவும் இலட்சக்கணக்கான மக்கள் கண்டு வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.

👉முகநூலில் தென்னிந்திய அரசியல் தலைவர்களுள் அதிகம் பேரால் பின்தொடரப்படும் திமுக தலைவர் ஸ்டாலினின், பரப்புரைக் கூட்டம், சமூக வலைதளங்களின் வாயிலாக மட்டும் தற்போது வரை 1 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📕📘தமிழகம் முழுவதும் ப்ரீபெய்டு மின் மீட்டர் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி பேட்டி.

📕📘அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம்; ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

📕📘மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால்,

மதுரை இரண்டாவது தலைநகராக

மாற்றப்படும்; தேர்தல் பரப்புரையில்

கமல்ஹாசன் உறுதி

📕📘வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம்; தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அறிவிப்பு.

📕📘ஜெர்மனியில் அதி தீவிரம் அடைந்துவரும் கொரோனா வைரஸ் பரவல்; ஜனவரி மாதம் முழுவதும் கடைகள், வர்த்தக நிறுவனங்களை அடைக்க உத்தரவு.

📕📘ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ அறிவித்துள்ள உதவித்தொகையைப் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...