கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்த அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்...

 


பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் தேர்வு தொடர்பான இயக்குநர் அறிவுரைகள் 26-12-2020...

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) அனைத்து வட்டார அளவில் (Block Level) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு தேதி:21.02.2021. இத்தேர்விற்கான வெற்று விண்ணப்பங்களை 28.12.2020 முதல் 08.01.2021 வரை இத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க தகுதியுடையோர் 
 மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் (அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்) 2020-2021 கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர் அவர்தம் பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1.50,000/-(ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்)-க்கு மிகாமல் இருந்தால் மட்டுமே இத்தேர்வு எழுத தகுதியுடையவர் ஆவார்.

விண்ணப்பிக்கும் முறை
1. NMMS- தேர்விற்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய தேர்வர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும் தலைமையாசிரியர்கள் தேவையான வெற்று விண்ணப்பங்களை 28.12.2020 முதல் 08.01.2021 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் வெற்று விண்ணப்பங்களை நடப்புக் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் தகுதியுடைய மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்தல் வேண்டும்.

புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வர்கள் தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50/- உடன் 08.01.2021 க்குள் ஒப்படைத்தல் வேண்டும்.

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 08-01-2021

தேர்வு நடைபெறும் நாள்: 21-02-2021

>>> எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்த அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்வு - 2020-2021 - விண்ணப்பம் (Application) - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...