நாளை 22-02-2025 NMMS தேர்வினை எழுதவுள்ள மாணவர்களுக்கான முக்கியக் குறிப்புகள்
Important notes for students who are going to write NMMS exam tomorrow 22-02-2025
🔹 மாணவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையம் சென்று விடுங்கள். பதற்றம் தவிர்க்கலாம். காலை 8.30 - 9.00
🔸 9.15 தேர்வறைக்கு செல்லுதல்
🔹 9.30- 11.00 : MAT
🔹11.00 - 11. 30 இடைவேளை
🔹 11. 30 - 1.00 : SAT
🔸 தேர்வு முடிந்தவுடன் கவனமாக OMR தாளினை தேர்வறை கண்காணிப்பாளரிடம் வழங்கிய பின் - இரு வினாத்தாள்களையும் எடுத்து கொண்டு வெளியே வரலாம்.
🔹 OMR தாளில் விடைக்கான பகுதியில் சரியாக வட்டமாக Shade செய்யவும்.
🔸 கணினி மதிப்பீடு என்பதால் - இரு விடையை Shade செய்தாலோ - அல்லது ஒயிட்னர் மூலம் அழித்து வேறு ஒரு விடை Shade செய்தாலோ அது தவறாக எடுத்து கொள்ளப்படும். மதிப்பெண் கிடைக்காது.
🔹 OMR தாளில் பெயர் - புகைப்படம் விவரம் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது.
செய்ய வேண்டியவை - உங்கள் கையெழுத்து இடுதல் மற்றும் அறை கண்காணிப்பாளரிடம் Present shade செய்து கையெழுத்து பெறுதல் மட்டுமே.
🔹 வினாத்தாளில் உட்பகுதிகளில் குறித்தல் கூடாது. இறுதி இரு பக்கம் Rough work செய்து பார்க்க வெள்ளைத் தாள் இணைக்கபட்டுள்ளது. அதில் செய்து பார்க்கலாம்.
🔸 OMR தாளினை கருப்பு பால் பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்தி shade செய்ய வேண்டும்.
🔹 பொதுவாக செய்யும் தவறு : 5 வது கேள்வி தெரியாததால் Shade செய்யாமல் விட்டிருப்போம். 6வது கேள்வி எழுதும் போது 5வது கேள்வியில் shade செய்வோம்.
இது அடுத்து வரும் அனைத்து வினாக்களும் தவறாக Shade செய்யும் வாய்ப்பினை உருவாக்கும்.
அதனை தவிர்க்க குறிக்கப்படாத வினாவிற்கான விடையின் மீது அளவுகோல் / ஹால் டிக்கெட் வைத்து மறைத்துவிடலாம்.
🔸எனவே ஒவ்வொரு வினாவிற்கும் விடையளிக்கும் போது வினா எண் பார்த்து shade செய்யவும்.
🔹 180 வினாக்கள் - 180 நிமிடங்கள். ஒரு வினாவிற்கு 1 நிமிடம். நீண்ட நேரம் ஒரே வினாவை தீர்வு காணாமல் அடுத்த கேள்விக்கு செல்லவும்.
🔸 MAT பகுதி விடையளிக்கும் போது அனைத்து வகையிலும் யோசிக்க முயற்சிக்கவும்.
சிறந்த முறையில் தேர்வு எழுதி - வாழ்வின் முன்னேற்ற படியின் முதல் படியாக இந்த தேர்வின் அனுபவத்தை ஏற்று பயணிக்க வாழ்த்துகள்.
NMMS : தேர்வறையில் மாணவர்களுக்கு சில Tips...
வினாத்தாளில் கடைசி பக்கத்தில் (Rough work) எழுத வேண்டியவை
🔸 ஆங்கில ALPHABET சார்ந்த வினாக்கள் அதிகம் இடம் பெறுவதால்
ABCDE... எழுதி 1234...
ZXYWV ... எழுதி 1234...
🔸 8 திசைகள்
🔸 வர்க்க எண்கள் 20 வரை
1² = 1
2² = 4
3² = 9
4² = 16
5² = 25
6² = 36
7² = 49
8² = 64
9² = 81
10² = 100
11² = 121
12² = 144
13² = 169
14² = 196
15² = 225
16² = 256
17² = 289
18² = 324
19² = 361
20² = 400
🔸கன எண்கள் 10 வரை
1³ = 1
2³ = 8
3³ = 27
4³ = 64
5³ = 125
6³ = 216
7³ = 343
8³ = 512
9³ = 729
10³ = 1000
🔸பகா எண்கள் 100 வரை
2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97
நினைவில் கொள்க :
🔸 காலம் கணக்குகள்
🔸BIDMAS
🔸 இரு எண் கூடுதல் மூன்றாவது எண்
🔹 மூன்று எண் கூடுதல் நான்காவது எண்
🔸 முதல் எண் - மூன்றாவது எண்
இரண்டாம் எண் - நான்காம் எண் தொடர்பு
🔹 வரிசை கணக்குகளில் இடது , வலது
🔸 கடிகார திசை - கடிகார எதிர் திசை
🔸 வர்க்கம் + 1 / வர்க்கம் - 1
🔹 கனம் + 1 / கனம் - 1
🔸 இரு எண் பெருக்கல் மூன்றாவது எண்
🔹 எண்களின் மடங்கு எ. கா. x 3 , x 4
🔸 எண்களின் அடுக்கு
எ. கா. 2 x 2 , 2 x 2 x 2 , ...
🔹பகா எண்ணின் கூடுதல்
🔸 எண்கள் / எழுத்துகளின் கண்ணாடி பிம்பங்கள்
கவனம் தேவை
🔹 SAT கூற்று, காரணம் கேள்விகள்
🔸 பொருத்துக விடைகள் எ. கா
i-a, ii -C , iii - d , iv_ b
🔹 தவறான கூற்று எது ? கேள்வியை சரியாக கவனிக்காமல் சரியான 3ல் ஒன்றை டிக் செய்வது
🔸 இயன்றவரை சிந்தித்து விடை தரவும்
🔹 இறுதி 10 நிமிடத்தில் விடுபட்ட அனைத்து வினாக்களுக்கான விடைகளையும் shade செய்யவும்.
🔸 Minus மதிப்பெண் இல்லை. எனவே அனைத்து கேள்வியும் விடை தருவது அவசியம்.
🔹 ஒவ்வொரு மதிப்பெண்ணும் அவசியம்.
எதிர்கால போட்டி தேர்வுகளுக்கு விதையாக இத்தேர்வு அமையட்டும்.
அன்பும் வாழ்த்துகளும்💐💐💐💐