கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் வருகிற ஜனவரி 31ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்...


 தமிழகத்தில் வருகிற 31-ஆம் தேதி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் கடந்த 17-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணி காரணமாக, போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது.


இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வருகிற 31-ஆம் தேதி, 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகளில் முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும், அன்றைய தினம் பயணத்தில் இருக்கும் குழந்தைகளுக்காக, பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையங்களிலும் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகத்தில் உள்ள 70.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கலைத்திருவிழா 2025 EMIS வலைதளத்தில் பதிவு செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது

 கலைத்திருவிழா 2025 EMIS வலைதளத்தில் பதிவு செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது Kalai Thiruvizha 2025 Entry Option Enabled In EMIS Web Portal ப...