கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Medicine லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Medicine லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Russia claims to have discovered a vaccine for cancer



புற்றுநோய்க்கு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு


Russia claims to have discovered a vaccine for cancer


 கேன்சர் எனப்படும் புற்றுநோய்க்கு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு


கேன்சர் எனப்படும் புற்றுநோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்திருப்பதாகவும் இது 2025 முதல் இலவசமாக சந்தையில் கிடைக்கும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. எம்ஆர்என்ஏ (mRNA) அடிப்படையிலான இந்த தடுப்பூசி, கேன்சர் நோயை குணப்படுத்தும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது.


உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுப்படி, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் புற்றுநோயால் இறக்கின்றனர். வருடங்கள் ஓடினாலும்.. பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்னும் மாறாத.. குணப்படுத்த முடியாத விஷயம் என்றால் அது கேன்சர்தான்! பல ஆய்வுகள், ஆராய்ச்சிகளுக்கு பின்பும் கேன்சருக்கு முழுமையாக மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. சில மருந்துகள் கேன்சருக்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும்.. முழுமையாக கேன்சரை குணப்படுத்தாமல் இருந்தது. இப்போது வரை கீமோதெரபிதான் கேன்சருக்கு எதிராக முக்கியமான சிகிச்சை முறையாக இருக்கிறது. புற்றுநோய்க்கு எதிராக ரஷ்யா தனது சொந்த mRNA தடுப்பூசியை உருவாக்கியுள்ளது, இது நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்து உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம். விரைவில் இவை மக்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்தார். தடுப்பூசி அல்லது தனிப்பயனாக்கப்பட்ட mRNA, கணித அடிப்படையில் மேட்ரிக்ஸ் முறைகளைப் பயன்படுத்துவதால், தற்போது தனிப்பயனாக்கப்பட்ட தடுப்பூசிகளை உருவாக்குவதற்கு அதிக நேரம் எடுக்கிறது. AI மற்றும் நியூரல் நெட்வொர்க் கம்ப்யூட்டிங் உதவியுடன், இந்த நடைமுறைகளை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்தில் உருவாக்கி விடலாம் என்று ரஷ்யாவின் தடுப்பூசி தலைவர் கூறினார். ரஷ்யாவின் இந்த அறிவிப்பு உலகளவில் புற்றுநோய் சிகிச்சை சிகிச்சை துறையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படும்.


mRNA- அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷிய சுகாதாரத்துறை கூறியுள்ளது.


சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் பேசியுள்ளார்.


புற்றுநோய்க்கு தங்கள் நாடு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. உலகளவில் பலரை ஆட்டிப்படைக்கும் கேன்சர் எனப்படும் புற்றுநோயை குணப்படுத்தப் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் mRNA- அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷிய சுகாதாரத்துறை கூறியுள்ளது.


ரஷிய விஞ்ஞானிகள் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.


அதன்படி இன்று புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கிவிட்டோம் என்றும் இந்த தடுப்பூசி 2025 முதல் சந்தைகளில் கிடைக்கும் என்றும் தடுப்பூசிகளை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாகவும் ரஷிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


 இது குறித்து ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் பேசுகையில், புற்றுநோய்க்கு எதிராக சொந்தமாக mRNA- அடிப்படையிலான அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம் என்றும் இது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என கூறியுள்ளார்.


தடுப்பூசிகளின் ஒரு வகையான mRNA [messenger RNA] தடுப்பூசி, உடலில் உள்ள mRNA molecule ஐ பிரதி எடுத்து அதிலிருந்து நோயெதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலானது. இந்நிலையில் ரஷியாவின் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால் உலகம் முழுதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அதிக பயனுடையதாக இருக்கும். 


Why does heel pain occur?



குதிகால் வலி ஏற்படுவது ஏன்?

- கு.கணேசன், மருத்துவர்


Why does heel pain occur?


தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் நின்றால் போதும், தீயை மிதித்ததுபோல் ‘சுள்’ ளென்று ஒரு வலி குதிகாலில் தொடங்கி, கால் முழுவதும் பரவும். எரிச்சலும் மதமதப்பும் கைகோத்துக்கொள்ளும். ஓர் அங்குலம்கூடக் காலை எட்டுவைத்து நடக்க முடியாது; மாடிப்படி ஏற முடியாது. அத்தனை சிரமம்!



ஆனால், இந்தச் சிரமம் எல்லாமே சில மணி நேரத்துக்குத்தான். வலியைப் பொறுத்துக்கொண்டு, நடக்கத் தொடங்கிவிட்டால், சிறிது நேரத்தில் வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். பிறகு, இவர்கள் பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, இரவில் உறங்கச் செல்லும்போது மீண்டும் குதிகாலில் வலி ஏற்படும். இந்தப் பிரச்சினைக்கு ‘பிளான்டார்ஃபேசியைட்டிஸ்’ (Plantar Fasciitis) என்று பெயர்.


என்ன காரணம்?


குதிகால் எலும்பிலிருந்து ‘பிளான்டார் அப்போநீரோசிஸ்’ (Plantar Aponeurosis) எனும் திசுக்கொத்து கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. குதிகால் எலும்பும் இந்தத் திசுக்கொத்தும் இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டாகிறது. இதனால் குதிகால் வலி ஏற்படுகிறது.


குதிகால் எலும்பும் தசைநார்களும் உராய்வதைத் தடுக்க ‘பர்சா’ (Bursa) எனும் திரவப்பை உள்ளது. இதில் அழற்சி ஏற்பட்டு வீங்கிவிட்டாலும் குதிகால் வலி வரும். இன்னும் சிலருக்குக் குதிகால் எலும்பும் திசுக்கொத்தும் சேருமிடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்ந்துவிடும். இதற்கு ‘கால்கேனியல்ஸ்பர்’ (Calcaneal Spur) என்று பெயர். இதன் காரணமாகவும் குதிகால் வலி ஏற்படுவது வழக்கம்.



சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும். இதனாலும் குதிகால் வலி வரலாம். முடக்குவாதம், தன்தடுப்பாற்றல் நோய், காசநோய், கோணலாக வளர்ந்த பாதம், தட்டைப் பாதம், எலும்பு வலுவிழப்பு நோய் போன்ற பல காரணங்களாலும் இது வரலாம்.


யாருக்கு வருகிறது?


முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இரு பாலருக்கும் இது வரலாம். ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு இந்தப் பாதிப்பு சற்று அதிகமாகவே ஏற்படுகிறது. அதிக உடல் எடை உள்ளவர்களுக்கும் இந்தப் பாதிப்பு அதிகம். அதற்காக ஒல்லியானவர்களுக்கு இது வராது என்று சொல்லமுடியாது. அப்பா, அம்மாவுக்கு இது வந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இது ஏற்படுவது உண்டு.


நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்கிறவர்கள், விளையாட்டு வீரர்கள், ராணுவத்தில் பணி செய்பவர்கள் ஆகியோருக்கு இது வருகிறது. முறைப்படி ‘வார்ம்அப்’ பயிற்சிகளைச் செய்யாமல் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டால் நாளடைவில் குதிகால் வலி வந்துவிடும்.



கரடுமுரடான தோல் செருப்புகளையும் பிளாஸ்டிக் செருப்புகளையும் அணிபவர்களுக்குக் குதிகால் வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காரணம், வாகனங்களில் ‘ஷாக் அப்சார்பர்’ வேலை செய்வதுபோல, நம் காலணிகள் செயல்பட வேண்டும். அப்போதுதான் குதிகாலுக்கு வேலைப் பளு குறையும். ஆனால், கரடுமுரடான தோல் செருப்புகளில் இந்தப் பலனை எதிர்பார்க்க முடியாது. மிருதுவான ரப்பர் செருப்புகள் ( ஹவாய் செருப்புகள் ) இதற்கு உதவும்.


இன்றைய பெண்களில் பலரும் ‘ஹைஹீல்ஸ்’ செருப்புகளை அணிகின்றனர். குதிகாலை உயரமான நிலையில் வைத்திருக்க உதவுகிற இந்தக் காலணிகள் பாதத்துக்குச் சமமான அழுத்தத்தைத் தருவதில்லை. இவற்றைக் காலில் போட்டுக்கொண்டு நடக்கும்போது, பிளான்டார் திசுக்கொத்து மிகவும் விரிந்த நிலையிலேயே நாள் முழுவதும் இருப்பதால், சீக்கிரமே அழற்சி அடைந்து குதிகால் வலியை ஏற்படுத்திவிடும்.



இன்னும் சிலர் கூம்பு வடிவ ஷூக்களை அணிகிறார்கள். இவற்றால் கால் பாத எலும்புகள் அழுத்தப்பட்டு, இடைவெளி குறைந்து, வலி தொடங்கும். சாதாரணமாக இருக்கும்போது கால் முழுவதும் வலிக்கும். நடக்கும்போது குதிகாலில் வலி அதிகமாக இருக்கும்.


நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் குதிகால் வலி, இளம் வயதிலேயே வந்து விடுகிறது. காரணம், ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறும்போது, அந்த அதீதச் சர்க்கரையானது குதிகால் எலும்பு மூட்டுகளில் தேங்கும். அப்போது அங்குள்ள திசுக்களை அது அழிக்கத் தொடங்கும். இதன் விளைவால் இவர்களுக்குக் குதிகால் வலி வரும்.



என்ன சிகிச்சை?


குதிகால் எலும்புக்கு எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், யூரிக் அமிலம், ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட சில பரிசோதனைகளைச் செய்து காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டும். ஆரம்ப நிலையிலேயே இதைக் கவனித்துவிட்டால் சிகிச்சை சுலபமாகும். மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடலாம்.


மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், நீங்களாகவே கடையில் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடாதீர்கள். இவற்றால் பக்க விளைவுகள் உண்டு. ஆரோக்கியத்துக்கு ஆபத்தும் உண்டு.


வலி நீக்கும் களிம்புகளைக் குதிகாலில் பூசலாம். அப்படியும் வலி எடுத்தால், காலையில் எழுந்த உடனேயே கால்களைத் தரையில் வைக்கக் கூடாது. கால் விரல்களைச் சிறிது நேரம் நன்றாக உள்ளே மடக்கிப் பிறகு விரியுங்கள். கெண்டைக்கால் தசைகளையும், இதுபோல் மடக்கி விரியுங்கள். இதனால் அந்தப் பகுதிக்குப் புது ரத்தம் அதிகமாகப் பாயும். குதிகாலுக்குப் போதிய ரத்த ஓட்டம் இல்லாவிட்டாலும், சிலருக்குக் குதிகால் வலி ஏற்படும். இந்த ரகத்தில் வலி ஏற்படுபவர்களுக்கு, மேற்கண்ட எளிய பயிற்சியிலேயே வலி மறைந்துவிடும்.


அதேபோலக் கீழ்க்கண்ட பயிற்சியையும் செய்யலாம். காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான தண்ணீரில் பாதத்தை ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். பிறகு, சாதாரணத் தண்ணீரில் ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். இப்படி மாறிக் மாறி குறைந்தது 20 நிமிடங்களுக்கு வைத்திருந்தால், குதிகாலுக்கு ரத்த ஓட்டம் அதிகப்படியாகக் கிடைக்கும். அப்போது வலியை உணரச் செய்கிற பொருட்கள் அங்கிருந்து விலகிவிடும். இதனால் குதிகால் வலி குறையும். இதைப் பல மாதங்களுக்குத் தொடர்ச்சியாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டும். அப்போதுதான் வலி நிரந்தரமாக விடைபெறும்.


பிசியோதெரபியும் இந்த வலியைப் போக்க உதவும். குறிப்பாக, ESWT எனும் ஒலி அலை சிகிச்சையும் IFT எனும் வலி குறுக்கீட்டு சிகிச்சையும் லேசர் சிகிச்சையும் குதிகால் வலியைப் போக்கும் சிறந்த பிசியோதெரபி சிகிச்சைகள்.


இதுபோன்ற எளிய சிகிச்சை முறைகளில் வலி சரியாகவில்லை என்றால், வலி உள்ள இடத்தில் ‘ஹைட்ரோகார்ட்டிசோன்’ (Hydrocortisone) என்ற மருந்தை ’லிக்னோகைன்’ எனும் மருந்துடன் கலந்து செலுத்தினால் வலி குறையும். எலும்பு நோய் நிபுணரின் ஆலோசனைப்படி இதைச் செய்ய வேண்டும். என்றாலும், இந்த ஊசியை ஒன்றிரண்டு முறைக்கு மேல் செலுத்தக்கூடாது. இதிலும் சில பக்கவிளைவுகள் உள்ளன. மேற்சொன்ன சிகிச்சைகளில் குதிகால் வலி குறையவில்லை என்றால், கடைசியாக அறுவை சிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது.


தடுக்க என்ன வழி?


குதிகாலில் அடிக்கடி வலி வந்து சிரமப்படுபவர்கள், தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். கரடுமுரடான பாதைகளில் நடக்கக்கூடாது. சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி, நடைப் பயிற்சி, மெல்லோட்டம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், குதிகால் வலி வருவது தடுக்கப்படும்.


குதிகால் வலி உள்ளவர்கள் இதற்கென்றே உள்ள தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சைக்கிள் ஓட்டும் பயிற்சி, குதிகால் வலிக்கு நல்லதொரு பயிற்சி. காரணம், முன் பாதத்தில் அழுத்தம் கொடுத்துப் பெடல் செய்வதால், மொத்தப் பாதத்துக்குமே ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் வலி குறையும்.


உடல் பருமன் இருந்தால் எடையைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் குதிகாலுக்குப் பாரம் குறைந்து வலி சீக்கிரத்தில் விடைபெறும்.


குதிகால் வலி ஏற்பட்டவர்கள் வெறுங்காலோடு நடக்கக்கூடாது. தெருவில் மட்டுமல்ல; வீட்டுக்குள்ளும் தான். எப்போதும் மிருதுவான ஹவாய் செருப்புகளை அணிந்து நடக்க வேண்டும்.


“எம்.சி.ஆர்.” (Micro Cellular Rubber) செருப்புகளை அணிந்து நடப்பது இன்னும் நல்லது. கரடுமுரடான செருப்புகளை மறந்தும் அணிந்துவிடக்கூடாது. நீரிழிவு நோய், ‘கவுட்’ (Gout) போன்ற நோய்கள் இருந்தால் கட்டுப்படுத்த வேண்டும்.


பாதத்துக்குச் சரியான அளவில் காலணிகளை அணிய வேண்டியது முக்கியம். அழுத்தமான ஷூக்களையும் அணியக்கூடாது. லூசான ஷூக்களையும் அணியக்கூடாது. இந்த இரண்டிலும் தீமை உள்ளது. முக்கியமாக, குதிகால் தசை நாணுக்கு அதிக உராய்வைக் கொடுத்து வலியை ஏற்படுத்த இவை துணைப் போகும்.


புகைபிடிக்கக் கூடாது. புகையிலையில் உள்ள நிகோட்டின் ரத்தக்குழாய்களைச் சுருக்கி ரத்த ஓட்டத்தைத் தடுக்கும். இயற்கையாகவே நம் குதிகால் பகுதியில் ரத்த ஓட்டம் குறைவு. இதில் புகைபிடிப்பது என்பது, எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுகிற மாதிரிதான்!


கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்


தொடர்புக்கு: gganesan95@gmail.com

Diabetics no longer need insulin injections - Chinese scientists make a marvelous discovery



 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி இனி தேவை இல்லை - சீன  விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு


சர்க்கரை நோய்க்கு நிரந்தரத் தீர்வு... சீன விஞ்ஞானிகள் அசத்தல்! 


உலக மக்களை ஆட்டிப்படைத்து வரும் கொடிய நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். மரபணு, வாழ்க்கை முறை மாற்றங்கள் என பல்வேறு காரணங்களால் ஏற்படும் இந்த நோய், இன்று லட்சக்கணக்கானோரை பாதித்துள்ளது. இந்நிலையில், சீன மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ள புதிய சிகிச்சைமுறை சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு புதிய விடியலைத் தந்துள்ளது.‌ 


அரை மணி நேர அறுவை சிகிச்சை: சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தியின் படி, 25 வயது பெண் சர்க்கரை நோயாளிக்கு அளிக்கப்பட்ட புதிய சிகிச்சை முறையானது, சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் வாய்ப்பைத் திறந்துள்ளது. இந்த சிகிச்சையில் நோயாளியின் உடலில் இருந்து சிறிதளவு தசை எடுக்கப்பட்டு, சில ரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. இந்த அரை மணி நேரம் அறுவை சிகிச்சையின் மூலம் நோயாளி இனி இன்சுலின் ஊசி போடாமல் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 



இந்த புதிய சிகிச்சைமுறை குறிப்பாக டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டைப் 1 நீரிழிவு நோயில், உடல் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாது. இதனால், இன்சுலின் ஊசி போடுவது அவசியமாகிறது. ஆனால், இந்த புதிய சிகிச்சையின் மூலம் இன்சுலின் தேவை குறைந்து வாழ்க்கைத் தரம் மேம்படும். 


சீன மருத்துவர்களின் இந்த கண்டுபிடிப்பு, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு இந்த சிகிச்சை முறை ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது. 


சீன மருத்துவ ஆராய்ச்சியில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக, இந்த சர்க்கரை நோய் சிகிச்சை முறையானது சீனாவின் மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதனால், சீன மருத்துவர்கள் சர்க்கரை நோய்க்கான எதிர்கால சிகிச்சைகளை மேலும் மாற்றி அமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என நம்பப்படுகிறது.‌ 


சீன மருத்துவர்களின் இந்த புதிய கண்டுபிடிப்பு சர்க்கரை நோய் சிகிச்சைக்கான ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி இருந்தாலும், இந்த சிகிச்சை முறையில் நீண்ட கால விளைவுகள் குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், இந்த சிகிச்சை முறையை உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களும் எளிதாக அணுகும் வகையில் செய்ய வேண்டியது அவசியமாகும். 



சமீபத்தில் சீன மருத்துவ அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் வியத்தகு சாதனை ஒன்றைப் புரிந்திருக்கிறார்கள்


முற்றிலும் இன்சுலின் சுரப்பு இல்லாத நிலையில் டைப் ஒன் நீரிழிவு நிலையில் இருந்த 25 வயது பெண்மணி ஒருவருக்கு சிகிச்சை அளித்து அவரது நீரிழிவைக் குணப்படுத்தி உள்ளனர். 


குணம் என்றால் இன்சுலின் ஊசி தேவைப்படாத நிலையில் அவரது உடலில் சுயமாக இன்சுலின் உற்பத்தி மீண்டும் ஏற்படுமாறு செய்துள்ளனர். 


இதை அவர்கள் எப்படி செய்தனர்? 


வாருங்கள் காண்போம்


அந்தப் பெண்ணின் கொழுப்புத் திசுக்களில் இருந்து செல்களை எடுத்தனர்.


அத்தகைய செல்களில் உள்ள மரபணுக்களில் உயிர் வேதியியல் ரசாயனங்கள் மூலம் உரிய மாற்றங்களைச் செய்து மறு-ஆக்கத்துக்கு உட்படுத்தி அதை எதுவாகவும் உருமாறும் செல்களாக (Pluripotent stem cells) மாற்றினர்.  


பிறகு அந்த ப்ளூரி பொட்டண்ட் ஸ்டெம் செல்களை -  இன்சுலின் சுரக்கும் இயற்கையான  பீட்டா செல்களாக உருமாற்றினர். இவற்றுக்கு "ரசாயனம் மூலம் தூண்டப்பட்ட ப்ளூரி பொட்டன்ட் ஸ்டெம் செல்களில் இருந்து தோன்றிய ஐலெட் செல்கள்" என்று பெயரிட்டனர்.  


இவ்வாறு உருவாக்கப்பட்ட ஐலெட் செல்களை அந்தப் பெண்மணியின் முன் வயிற்றுப் பகுதியில் உள்ள தசையில் ஊசி மூலம் செலுத்தினர். 


இவ்வாறு ஊசி மூலம் செலுத்தியதற்கு அரை மணிநேரம் மட்டுமே எடுத்துக் கொண்டது என்பதால் அனைத்து ஊடகங்களும் அரை மணிநேரத்தில் டைப் ஒன் நீரிழிவை குணப்படுத்தியதாக பறைசாற்றினர்.


இதற்கு முன்பு இந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சியில், கணையத்தின் பீட்டா செல்களை கல்லீரலின் ரத்த நாளத்தில் சூழ்வைப்பதே முறையாக இருந்தது. எனினும் அந்த முறையில், உடலின் எதிர்ப்பு சக்தி தீவிரமாக இந்த புதிய செல்களை எதிர்த்து அழிப்பது நடந்தது. 


இந்தப் புதிய முறையான முன் வயிற்றுப் பகுதி தசையில் ஊசி மூலம் எளிதாக செலுத்தும் முயற்சி சிறப்பானதாகும். 


மேலும், நோயரிடமிருந்தே எடுக்கப்பட்ட திசுக்களை அவருக்கே செலுத்தும் போது எதிர்ப்பு சக்தியால் புதிய செல்கள் வீழ்த்தப்படும் சதவிகிதம் மிக மிகக் குறைவு. 


இது ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை என்பதால் நோயருக்கு எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் மருந்துகள் வழங்கப்பட்டதும் தெரிகிறது


இத்தகையதோர் புதிய முயற்சியை செய்த 75 நாட்களுக்குப் பிறகு அந்த நோயாளிக்கு இன்சுலின் ஊசி தேவை இல்லாமே ரத்த க்ளூகோஸ் அளவுகள் நீரிழிவு இல்லாதவருக்கு இருக்கும் நிலைக்கு வந்தது தெரிகிறது.


ஒரு வருடமாக அந்த நோயாளியை கண்காணிப்புக்கு உட்படுத்தியதில் இந்த புதிய சிகிச்சையால் வேறு பாதிப்புகள் தோன்றாமல் இருப்பதும் தெரிகிறது. 


டைப் ஒன்று நீரிழிவிற்கு உயிர் காக்கும் ஒரே மருந்தான "இன்சுலின்" கண்டறியப்பட்டு ஒரு நூற்றாண்டு கடந்திருக்கும் சூழ்நிலையில் 


நோயாளியிடம் இருந்தே எடுக்கப்பட்ட செல்களை -  தொழில்நுட்பம் மூலம் ஸ்டெம் செல்களாக மாற்றி அந்த ஸ்டெம் செல்களை - இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களாக மாற்றி 

நோயாளிக்கு ஊசி மூலம் எளிதாக செலுத்தி டைப் ஒன்று நீரிழிவில் இருந்து குணத்தை அளித்துள்ள 

டியாஜின் முதல் மத்திய மருத்துவமனை மற்றும் பெக்கிங் பல்கலைக்கழக மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்துகள். 


இந்த மருத்துவ சிகிச்சை முறையில் இன்னும் பலரைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு நீண்ட கால சாதக பாதக அம்சங்கள் ஆராயப்பட்டு 

இந்த சிகிச்சை விரைவில் உலகத்தார் அனைவருக்கும் கைகொள்ளத்தக்க விலையில் கிடைக்கும் சிகிச்சையாக மாறும் போது 


நம்மால் டைப் ஒன்று நீரிழிவு நோயர்கள் அனைவருக்கும் இன்சுலின் ஊசியிலிருந்து விடுதலை அளிக்க முடியும். 


அந்த நாள் விரைவில் வர இருக்கிறது. 


அதுவரை 

டைப் ஒன்று நீரிழிவிற்கு இன்சுலின் எனும் அருமருந்தே உயிர்காக்கும் ஒரே மருந்தாகத் தொடரும். 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


தமிழ்நாட்டைத் தாக்கும் வெப்ப அலை - எச்சரிக்கைப் பதிவு - சில மருத்துவ அறிவுரைகள் - Dr.A.B.ஃபரூக் அப்துல்லா...

 


தமிழ்நாட்டைத் தாக்கும் வெப்ப அலை 


அலர்ட் பதிவு 


சில மருத்துவ அறிவுரைகள் 


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் வெப்ப அலை மிக கொடூரமாக வீசி வருகிறது. 

கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவி வருகிறது. 

இதனால் மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகி வருகிறோம். 


இதனை எதிர்கொள்ளும் விதமாக சில மருத்துவ யோசனைகளை / அறிவுரைகளை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு. 


வெப்ப அலையால் நம் உடலுக்கு நேரும் முதல் பிரச்சனை 

நம் உடல் சூடாகுதல். இதை Hyperthermia என்கிறோம். ஆகவே, உடல் சூடாவதை தடுப்பதற்கு நாம் எடுக்கும் நடவடிக்கைகள் முதல் இடம் பிடிக்கின்றன. 


உடல் சூடாவதை தடுப்பது எப்படி? 


1. தண்ணீர்பஞ்சம் இல்லாத ஊர்களில், தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கலாம்


2. தண்ணீர் பஞ்சம் நிலவும் ஊர்களில் ,  ஒரு வேளை குளிர்ந்த நீர் குளியல் மற்றும் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கை கால் முகம் போன்றவற்றை கழுவலாம். 

இது உடலின் உஷ்ணத்தை தணிக்க உதவும்.


3. வெப்பத்தை உள்ளயே தக்க வைக்கும் உடைகளான கம்பளி / லினன் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். 

ஜீன்ஸ் அணிவதை தவிர்ப்பது நல்லது. 

பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது. 

வெப்பத்தை தக்க வைக்கும் கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது சிறந்தது. 


4. வீட்டை விட்டு வெளியே செல்லும் போது குடை / தொப்பி எடுத்துச் செல்ல வேண்டும். முடிந்த வரை , வெயில் நம் உடல் மீது நேராக படாதவாறு பார்த்துக் கொள்வது நல்லது. 


5. வெயில் தனல் அதிகமாக இருக்கும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே  செல்வதை முடிந்த வரை தவிர்க்கலாம்.  வெளியே சென்று விளையாடுவதை காலை நேரம் மற்றும் மாலை நேரத்திற்கு தள்ளி வைக்கலாம். 


அடுத்த நடவடிக்கை. 

இதை மீறியும்   சூடான நம் உடலை எப்படி குளிர் படுத்துவது என்பது.


நாம் வீட்டிற்கு உள்ளேயே இருந்தாலும்.

வெப்ப சலனம் நம்மை கட்டாயம் பிரச்சனைக்குள்ளாக்கும் 


காரணம்.. சூரியனின் வெப்பமானது மூன்று முறைகளில் நம் மீது தாக்கலாம்


ஒன்று - conduction 

இரண்டாவது - convection 

மூன்றாவது - radiation 


இதில் முதலாவதாக இருக்கும் conductionக்கு நாம் ஏற்கனவே சூடான ஒரு பொருளோடு தொடர்பில் இருந்தால் நடப்பது. அதாவது , வெயிலில் நின்ற ஒரு  பைக் மீது நாம் ஏறி உட்கார முற்படும் போது , அதன் வெப்பம் நமக்கும் பரவும். 


இதை தவிர்க்க முடிந்த வரை நிழலில் வண்டியை நிறுத்தலாம் அல்லது சீட்டில் உட்காரும் முன் நல்ல கடினமான துணியை விரித்து உட்காரலாம்


இரண்டாவது வகை

convection 

அதாவது காற்றை சூடாக்கி விட்டால் போதும். அதனுடன் தொடர்பில் இருக்கும் நமக்கும் வெப்பம் கடத்தப்படும். 

இது நாம் வீட்டினுள் இருந்தாலும் சரி , நம்மை தாக்கியே தீரும். 

பொதுவாக அடைக்கப்பட்டு நிறுத்தப்பட்ட கார் போன்ற வாகனங்களுக்குள் சென்ற உடன் தாக்கும் வெப்பம் இந்த வகை. 


நமது வீட்டின் ஜன்னல்களில் தண்ணீரில் முக்கிய துண்டுகளை காயப்போடலாம். இதன் மூலம் வீட்டினுள் வரும் காற்று சிறிது ஈரப்பதம் கலந்து வரும். 


நாம் போடும் மின்விசிறி. வெளியே இருக்கும் வெப்பக்காற்றையும் மேலே சூடான தளத்தின் காற்றையும் நம் மீது தள்ளும். 

அதனால் தான் என்ன வேகமாக ஃபேன் சுழன்றாலும் வெப்பம் தணியாமல் இருக்கும். 


கார் உபயோகிப்பவர்கள்

 கார் கண்ணாடிகளை உடனே நன்றாக திறந்து விட வேண்டும். 

ஏசியை உடனே போடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் அந்த ஏசி மெசினும் 100 டிகிரிக்கு மேல் சூடாகி இருக்கும். அதில் இருந்தும் வெப்பக் காற்றே வரும். 


மூன்றாவது Radiation 

இதற்கு காற்று போன்ற எந்த கடத்தியும் தேவையில்லை . மின் காந்த அலைகளான இந்த வெப்பம் நம்மை நேரடியாக தாக்கி நம் உடலை சூடாக்கும். 

நம் வீட்டில் கிச்சனில் உபயோகப்படுத்தும் மைக்ரோ வேவ் அவன் இந்த முறையில் தான் இயங்குகிறது. 


இந்த முறையில் சூடாகும் நம் 

உடல் எப்படி இந்த சூட்டை தானாக தணித்துக்கொள்கிறது ? 


அதற்கு காரணம் "Evapouration" எனும் தற்காப்பு முறை 


அதிகமாக உடல் சூடானால், நமது உடலில் வேர்வை அதிகமாக சுரக்கும். அந்த வேர்வை உடலை குளிர்விக்க முயற்சிக்கும்.(sweating)  மேலும் உடலுக்குள் உள்ள உஷ்ணத்தை நமது நுரையீரல் வெளியிடும் மூச்சுக்காற்று வழி அனுப்ப முயலும்(expiration) 


இப்படி நம் உடல் அதிக நீர்ச்சத்தை உபயோகித்து குளிர்விப்பதால் ஏற்படும் பிரச்சனை 

Dehydration - நீர் சத்து குறைதல்..


இதை எப்படி அறியலாம்? 


- நாக்கு வரண்டு போதல்

- சிறுநீர் அடர் மஞ்சளாக செல்லுதல்

- தசைப்பிடிப்பு 

- தலை சுற்றல்

- கை கால் தளர்வு 


போன்ற அறிகுறிகளால் அறியலாம்


இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ?


1. எளிதான வழி - தண்ணீரைப் பருகுவது.


நமது சிறுநீரகங்கள் சரியாக இயங்க குறைந்தபட்சம் ஒருவரின் எடைக்கு  கிலோ ஒன்றிற்கு முப்பது மில்லி லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு பருகி ஆக வேண்டும். 


உதாரணம் 

60 கிலோ எடை உள்ள ஒருவர் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருந்தாலும் சரி. வெயில் காலமோ குளிர்காலமோ அவர் 


60 ( கிலோ) × 30( மில்லி) = 1800 மில்லி லிட்டர் தண்ணீர் குறைந்த பட்சம் பருக வேண்டும். 


இந்த தண்ணீரின் உட்கொள்தல் அளவு அவர் செய்யும் வேலைகள் பொறுத்து அதிகமாகும். 


இன்னும் வெப்ப சலனம் நிலவும் காலங்களில் 30 மில்லி லிட்டர் என்பது 60 மில்லி லிட்டர்  அளவு குறைந்தபட்ச தேவையாக  மாறும்.


உங்கள் பள்ளி செல்லும் குழந்தையின் எடை 20 கிலோ என்றால் 

இந்த வெப்ப சலனத்தில் அவர்களின் குறைந்த பட்ச தேவை ஒரு கிலோவுக்கு 60 மில்லி லிட்டர் என்று கொண்டால் 


20 (கிலோ) * 60 ( மில்லி லிட்டர் ) = 1200 மில்லி லிட்டர். 

அதாவது 1.2 லிட்டர் கட்டாயம் பருக வேண்டும் 


வளர்ந்த ஆணும் பெண்ணும் 

பொதுவாக , 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருகுவது சிறந்தது. 


இந்த தண்ணீரை 

இளநீராக, மோராக, லஸ்ஸியாக , பழச்சாறாக எப்படி வேண்டுமானாலும் பருகலாம். 


செயற்கை குளிர்பானங்கள், ரசாயன கலர் பொடிகள் கலந்த கலவைகளை தவிர்ப்பது நல்லது. 


குளிர் நீர் பருகுவது சிறந்தது. அதிலும் ஃப்ரிட்ஜில் வைத்து கால் மணி நேரம்  முதல் அரை மணி நேரத்தில் எடுத்து பருகினால் சரியான குளிர்ச்சி இருக்கும். 


ஆற்று மணல் பரப்பி அதில் நீர் ஊற்றி அதன் மீது வைத்த

மண்பானையில் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரை ஊற்றி குளிர்வித்து குடிப்பது சிறந்தது.


மிக அதிகமான குளிர்ச்சி தரும் நீரை பருகுவது தொண்டைக்கு கேடு விளைவிக்கும்.


சரி..இப்போது வெப்ப சலனத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.


1. வெப்ப சலனத்தால் பாதிக்கப்பட்டவரை உடனே நல்ல குளிர்ச்சியான இடத்துக்கு அல்லது நிழலான பகுதிக்கு மாற்ற வேண்டும். 


2. அவரது மேலாடைகளை கழற்றி விட வேண்டும். நன்றாக உடலில் காற்று பட வேண்டும். 


3.அவரை காலை நீட்டி படுக்க வைக்க வேண்டும். 


4. காற்றாடி / மின்விசிறியை இயக்கி குளிர்விக்க வேண்டும். 


5. சுற்றி ஆட்கள் நின்று கொண்டு காற்று அவருக்கு செல்வதை தடுக்கக்கூடாது.


6. தண்ணீரில் நனைத்த துணியைக்கொண்டு உடல் முழுவதும் ஒத்தடம் கொடுக்க வேண்டும். 


7.கால்களை சிறிது உயரத்தூக்கி வைக்க வேண்டும்


8. சிறிது நினைவு திரும்பியதும் அமர வைத்து.. தண்ணீரை வழங்க வேண்டும். 


9.     911 / 108 க்கு அழைத்து உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதிக்க வேண்டும் 


இதுவே வெப்ப சலனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய முதல் உதவி. 


ஹை அலர்ட் தேவைப்படும் வகுப்பினர்

பின்வருமாறு 


1. குழந்தைகள் 

2. முதியோர்கள்

3. நீரிழிவு / ரத்த கொதிப்பு நோயாளிகள் 

4.கர்ப்பிணிகள்

5. வெயிலில் நின்று வேலை செய்யும் தொழிலாளிகள் 

6. அதிகமாக பயணம் செய்பவர்கள் 


முடிந்த வரை வெப்ப சலனத்தில் இருந்து நம்மையும் நம்மை சார்ந்தோரையும் பாதுகாப்போம் 


நிழல் தரும் மரங்களை நம்மால் இயன்ற அளவு வளர்த்து பின்வரும் சந்ததியினர் இதுபோன்ற வெப்ப சலனங்களில் நிழல் தேடி அலையாதவாறு காப்போம்


நன்றி 


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


MEFTAL மாத்திரை பயன்பாடு - எதிர்விளைவுகள் குறித்து இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை (Medicines Authority of India warns about the use of MEFTAL tablets & side effects)...

 MEFTAL மாத்திரை பயன்பாடு - எதிர்விளைவுகள் குறித்து இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை (Medicines Authority of India warns about the use of MEFTAL tablets & side effects)...



மாதவிடாய் வலி, முடக்கு வாதம் உள்ளிட்ட வலிகளுக்கு பயன்படுத்தப்படும் 'MEFTAL' வலி நிவாரணி மாத்திரைகளால் மோசமான எதிர்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மத்திய அரசு எச்சரிக்கை.


ரத்தத்தில் அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்கள் (Eosinophils) உருவாக வாய்ப்பு, தோல் எரிச்சல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மாத்திரை உட்கொண்ட 2 முதல் 8 வாரங்களுக்கு பின் தோன்ற வாய்ப்புள்ளது. 


மருத்துவர்கள் அறிவுறுத்தல் இன்றி வலி எழும்போதெல்லாம் இதனை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அரசின் மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்காணிக்கும் துறை மருத்துவர்களுக்கான  அலர்ட் வழங்கியுள்ளது.  இது குறித்த Dr. அ.ப.ஃபரூக் அப்துல்லா அவர்களின் பதிவு...


அரசின் மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்காணிக்கும் துறை மருத்துவர்களுக்கான  அலர்ட் வழங்கியுள்ளது.  இது போன்ற அலர்ட்களை தொடர்ந்து வழங்குவது இத்துறையின் பணியாகும். 


சமீபத்தில் வந்துள்ள அலர்ட் 

"மெஃபினமிக் ஆசிட்" எனும் மருந்தினால் "ட்ரெஸ் (DRESS) எனும் பக்கவிளைவு அரிதினும் அரிதாக ஏற்படுவதாகவும் 

இந்த மருந்தை பரிந்துரைக்கும் போது 

இது குறித்த எச்சரிக்கை உணர்வு தேவை என்பதற்காக வழங்கியுள்ள அலர்ட்டாகும். 


மெஃபினாமிக் ஆசிட் மருந்தினால் DRESS ( DRUG REACTIONS WITH ESINOPHILIA & SYSTEMIC SYMPTOMS) எனும் பக்கவிளைவு ஏற்படும் என்பது இன்று புதிதாக அறியும் தகவல் அன்று. 


ஏற்கனவே அறிவியல் பூர்வமான ஆய்வுகளிலும் இந்த மருந்தினால் 

இதே பக்க விளைவு அரிதாக உண்டாகலாம் என்பது நிரூபணமாகியுள்ளது. 


இந்த மருந்தை உட்கொள்பவர்களுக்கு அரிதினும் அரிதாக 

- கடுமையான காய்ச்சல் 

- உடல் முழுவதும் படை 

- சோர்வு 

- முக வீக்கம் 

இத்துடன்  முறையான சிகிச்சை அளிக்காவிடில் சிறுநீரகம் , கல்லீரல் போன்ற உறுப்புகள் செயலிழப்பும் ஏற்படலாம். 


இவர்களுக்கு ரத்த வெள்ளை அணுக்களில் ஈசினோஃபில்ஸ் அதிகமாக இருக்கும் 

ரத்த தட்டணுக்கள் குறையும் 

கல்லீரல் நொதிகளின் அளவுகள் கூடும் 


இந்த பக்கவிளைவு ஏற்பட்டிருப்பதை அடையாளம் கண்டால் உடனடியாக மாத்திரையை நிறுத்தி விட்டு அதற்குரிய சிகிச்சையை பெற வேண்டும். 


இத்தகைய பக்கவிளைவுகள் 

பத்து மில்லியனில் ஒருவருக்கு ஏற்படும் அரிதினும் அரிதான பக்கவிளைவாகும். 


மெஃபினமிக் ஆசிட் என்பது உடல் வலி போக்கும் மாத்திரையாகும். 

இதை மருத்துவப் பரிந்துரையில்லாமல் தொடர்ச்சியாக உட்கொண்டு வருவது தவறு. 


எனினும் 

மருத்துவ காரணங்களுக்காக 


- அதீத மாதவிடாய் கால வலி 

- குழந்தைகளில் ஏற்படும் அதீத காய்ச்சல் 

 ஆகியவற்றுக்காக மருத்துவ பரிந்துரையின் பேரில் உட்கொள்ளலாம். 


அதீத காய்ச்சலுக்கு மெஃபினமிக் ஆசிட் + பாராசிட்டமால் கலந்த சிரப்கள், ப்ரூஃபென் சிரப்கள் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. 


எனினும் சாதாரண காய்ச்சலுக்கு 

பாராசிட்டமால் + குளிர் நீர் ஒத்தடம் போதுமானது. 


அனைத்து காய்ச்சலுக்கும் மெஃபினமிக் ஆசிட் / ப்ரூஃபன் அவசியமற்றது.


குழந்தைகளுக்கு காய்ச்சல் அடித்தால் மருத்துவர் பரிந்துரைக்காமல் சுயமாக  மெஃபினமிக் ஆசிட் / ப்ரூஃபென் போன்ற வலி நிவாரணிகள் கலந்த சிரப்களை பெற்றோர்கள் கொடுக்கும் போக்கு தவறானது. 


பெண்களில் பலர் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு இந்த மெஃபினமிக் ஆசிட் கலந்த மாத்திரையை உட்கொண்டு வருகிறார்கள். 


இது சரியா? 


பொதுவாக மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு கர்ப்ப பைகளின் தசைகள் சுருங்குவதால் வலி ஏற்படும். 


கர்ப்ப பை தசைகள் சுருங்குவதால் தான் கர்ப்ப பையின் உள்பக்க சுவரான எண்டோமெட்ரியம் உரிந்து மாதவிடாய் கால உதிரப்போக்காக வெளியேறுகிறது. 


எனவே தாங்கிக் கொள்ளக் கூடிய பிணிக்கு எந்த மாத்திரையும் தேவையில்லை. 


- அடிவயிறு மசாஜ் 

- வெந்நீர் ஒத்தடம் 

- ஓய்வு  போன்றவை போதுமானது. 


அனைவருக்கும் மாத்திரை மூலம் சிகிச்சை தேவையற்றது. 


எனினும் பெண்களில் சிலருக்கு 

இந்தப் பிணி தாங்கிக் கொள்ள இயலாத அளவு மிக அதிகமாக இருக்கும். 


இவர்களுக்கு கர்ப்ப பை தசை சுருங்கி இருப்பதைத் தாண்டி இறுகிப் போகும். இதை கர்ப்ப பை தசை இறுக்கம் என்கிறோம்


இந்த நிலையில் ஏற்படும் அதீத பிணியைக் குறைக்க 

டைசைக்ளோமின் எனும் மாத்திரை பயன்படுகிறது 

இத்துடன் கூட மெஃபினமிக் ஆசிட் எனும் பிணி மாத்திரையும் இணைத்து தரப்படுகிறது. 


இந்த மாத்திரையை மருத்துவ பரிந்துரையின் பேரில் அதீத பிணி இருக்கும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் மட்டும் உட்கொண்டு வருவதில்  பிரச்சனை இல்லை. 

அச்சப்படத் தேவையில்லை. 


இன்னும் இத்தகைய அதீத மாதவிடாய் கால வலிக்கான காரணங்களை மருத்துவரிடம் கலந்தாலோசித்து கண்டறிய வேண்டும். 

அதுவே சரியான வழிமுறையாகும். 


சிலருக்கு எண்டோமெட்ரியோசிஸ் எனும் பிரச்சனை இருக்கலாம்

 சிலருக்கு கர்ப்பபை ஃபைப்ராய்டு இருக்கலாம். 

இன்னும் சிலருக்கு பிசிஓஎஸ் இருக்கலாம் 

இத்தகைய ஹார்மோன் சார்ந்த காரணங்களை கண்டறிந்து குணப்படுத்தினால் வலியும் குறையக்கூடும்.  


 அதீத வலிக்கு வலி நிவாரணி அவசியம் தான் ஆனால் இதைக் காரணமாகக் கொண்டு ஒரு தூக்கம் போட்டால் குணமாகும் 

சாதாரண தலைவலி முதல் தாங்கக் கூடிய மாதவிடாய் வலிக்கும் வலி நிவாரணியின் துணையை நாடுவது தவறு. 


காரணம் 

எந்த மருந்தும் தேவைக்கு உபயோகிப்பதே சிறந்தது. 

நாம் உண்ணும் அனைத்து மருந்துகளிலும் அதற்குரிய பக்க விளைவுகள் உண்டு. 


எனவே 

கட்டாயம் மருந்து தேவையா?  என்பதை உறுதி செய்து 

மருத்துவரிடம் சென்று காட்டி சிகிச்சை பெற்று பரிந்துரையின் படி மருந்து உட்கொள்வதே சிறந்தது.  


மற்றபடி இந்த அலர்ட் என்பதற்கு பொது மக்கள் அதீத அச்சம் கொள்ளத் தேவையில்லை. 


இந்த மாத்திரையை அதீத மாதவிடாய் கால வலிக்காக (DYSMENORRHOEA) மருத்துவ பரிந்துரையின் பேரில் உட்கொண்டு வரும் சகோதரிகள் அச்சப்படத் தேவையில்லை.


எச்சரிக்கை உணர்வு போதுமானது. 


நன்றி 


Dr. அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை



தந்தையைப் போல் தனக்கும் பக்கவாத பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒரு மாத்திரை கேட்டவருக்கு ஆறு மாத்திரைகள் பரிந்துரைத்ததாக பதிவிட்ட மருத்துவர் - வைரலாகும் செய்தி (The doctor posted that he prescribed six pills to a person who asked for a pill to prevent him from having a stroke like his father - viral news)...

தந்தையைப் போல் தனக்கும் பக்கவாத பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒரு மாத்திரை கேட்டவருக்கு ஆறு மாத்திரைகள் பரிந்துரைத்ததாக பதிவிட்ட மருத்துவர் - வைரலாகும் செய்தி (The doctor posted that he prescribed six pills to a person who asked for a pill to prevent him from having a stroke like his father - viral news)...


 பக்கவாதத்தைத் தடுக்க ஆஸ்பிரின் மாத்திரையை நான் பரிந்துரைக்க வேண்டும் என்று 35 வயதான அவர் இன்று என்னிடம் ஆலோசனை கேட்டார்.

 60 வயதான அவரது தந்தை சமீபத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார், மேலும் எதிர்காலத்தில் அவருக்கு பக்கவாதம் வருவதற்கான அதிக ஆபத்து குறித்து அவர் கவலைப்பட்டார்.

 ஒரு மாத்திரைக்கு (ஆஸ்பிரின்) பதிலாக, நான் "6 மாத்திரைகள்" (எனது மருந்துச் சீட்டின் பரிந்துரைகள் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது) பரிந்துரைத்தேன்.


35-yr old consulted me today, as he wanted me to prescribe aspirin pill to prevent stroke. 

His father aged 60 had recently suffered from stroke (paralysis), and he was concerned about his higher risk of getting stroke in future. 

Instead of one pill (aspirin), I prescribed "6 pills" (mentioned in the recommendations section of my prescription).


Recommendation:

1. Regular sleep : 7 - 8 hours / night

2. Brisk walking / running : 30 - 40 minutes / day

3. Healthy diet : Avoid soft drinks, sugar, ultra processed packaged food, Reduce carb intake

 Increase Fruits (within limits) & vegetables, nuts (handful / day) 

Increase poultry, fish, eggs

4. Reduce working hours (from current 13 - 14 hours to 8 - 9 hours / day 

5. Reduce stress 

6. complete abstinence from alcohol 

(review after 3 months)


பரிந்துரை: 

1. வழக்கமான தூக்கம் : 7 - 8 மணிநேரம் / இரவு 

2. விறுவிறுப்பான நடை / ஓட்டம் : 30 - 40 நிமிடங்கள் / நாள் 

3. ஆரோக்கியமான உணவு : குளிர்பானங்கள், சர்க்கரை,  பதப்படுத்தப்பட்ட  உணவு, கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் குறைத்தல் 

பழங்கள் (வரம்புக்குள்) & காய்கறிகள், கொட்டைகள் (கைப்பிடி / நாள்) கோழி, மீன், முட்டைகளை அதிகரிக்கவும் 

4. வேலை நேரத்தைக் குறைத்தல் (தற்போதைய 13 - 14 மணிநேரத்திலிருந்து 8 - 9 மணிநேரம் / நாள் வரை 

5. மன அழுத்தத்தைக் குறைக்கவும் 

6. முழு மதுவிலக்கு

 (3 மாதங்களுக்குப் பிறகு மதிப்பாய்வு)








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலி - இந்திய நிறுவனத்திடம் விசாரிக்க உலக சுகாதார அமைப்பு உத்தரவு (66 children died after drinking cough medicine in Gambia - WHO orders to investigate Indian agency)...




 காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலி - இந்திய நிறுவனத்திடம் விசாரிக்க உலக சுகாதார அமைப்பு உத்தரவு (66 children died after drinking cough medicine in Gambia - WHO orders to investigate Indian agency)...



ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான நிலையில் இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தின் தயாரிப்புகள் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




 ஹரியாணாவின் சோனிபட்டை சேர்ந்த மெய்டென் மருந்தியல் நிறுவனம் தயாரித்த அந்த மருந்துகள் நச்சு மற்றும் இறப்புக்கு காரணமான ரசாயனங்களைக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.




கெட்டுபோன மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவைத் தவிர வேறு சில நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகியிருக்கலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இது குறித்து உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறுகையில், காம்பியாவில் குழந்தைகள் இறப்புடன் 4 இருமல் மருந்துகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று அறியப்படுகிறது. இந்த குறிப்பிட்ட 4 மருந்துகளால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த சிறு குழந்தைகளின் உயிரிழப்பு நெஞ்சைப் பிளக்கும் அளவுக்கு வேதனை தருகிறது. அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவிக்கிறேன். சந்தேகத்துக்குரிய 4 இருமல் மருந்துகள் குறித்தும் இந்தியாவின் மெய்டன் ஃபார்மாசுட்டிக்கல்ஸ் லிமிடட் நிறுவனத்திடமும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடமும் விசாரணை மேற்கொண்டுள்ளோம் என்றார்.




சர்ச்சைக்குரிய 4 மருந்துகள்: ப்ரோமேதசைன் ஓரல் சல்யூஷன், கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மேக்காஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்டு சிரப் ஆகிய 4 மருந்துகள் தான் தற்போது விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளன. இதுவரை இந்த 4 மருந்துகளின் தயாரிப்பு நிறுவனமானது உலக சுகாதார நிறுவனத்திற்கு இவற்றின் பாதுகாப்பு தன்மை மற்றும் தரம் பற்றி எதுவும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது இவற்றில் ஏற்றுக்கொள்ளத்தக்கதைவிட அதிகளவில் டை எத்தலீன் க்ளைக்கால் மற்றும் எத்திலீன் க்ளைக்கால் ஆகியன உள்ளது தெரியவந்துள்ளது. 


இவ்விரு வேதியியல் பொருள்களை மனிதர்கள் பயன்படுத்தும் போது உயிரிழிப்புக்கு காரணமாகும் என அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

இந்த மருந்துகளில் உள்ள மூலப் பொருட்கள் மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவையே. இதனால் அடிவயிற்று வலி, வாந்தி, வயிற்றோட்டம், சிறுநீர் கழிப்பதில் சிக்கல், தலைவலி, மனநிலையில் குழப்பம், சிறுநீரக பாதிப்பு ஆகியன ஏற்படலாம்.



காம்பியா நாட்டு சுகாதார அமைச்சகமானது கடந்த மாதம் பாராசிட்டமால் சிரப் பயன்பாட்டைத் தவிர்க்கக் கூறியிருந்தது. அப்போது அங்கு 28 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் இப்போது இருமல் மருந்தால் 68 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.



இந்தியாவின் மத்திய மருந்துகள் தரம் கட்டுப்பாட்டு அமைப்பு அனுப்பிய தகவலின்படி சம்பந்தப்பட்ட நிறுவனம் மாசுபட்ட மருந்துகளையே காம்பியாவுக்கு ஏற்றுமதி செய்திருப்பது உறுதியாகியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த மருந்துகள் அனைத்துமே சட்டவிரோத கள்ளச் சந்தை மூலம் காம்பியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் உள்நாட்டு, உலகச் சந்தையிலும் புழக்கத்தில் விடப்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கின்றது. மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப எண்ணெய்யின் பயன்கள் (Medicinal Benefits of Neem Seed Oil)...




மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப எண்ணெய்யின் பயன்கள் (Medicinal Benefits of Neem Seed Oil)...


வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை  தினமும் முகத்தில் தடவி வர தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை பெறலாம்.


தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிரங்குகளை வேப்ப எண்ணெய் போக்கும்.


குளிர்காலங்களில் ஏற்படும் தோல் வெடிப்பை வேப்ப எண்ணெய் சரிசெய்யும்.


காயம் ஏற்பட்ட இடத்தில் வேப்ப எண்ணெய் தடவினால் சீக்கரம் காயம் சரியாகும்.


வேப்ப எண்ணெய்யில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் கிருமி தோற்று ஏற்படுவதை தடுக்கிறது.





 

வேப்ப எண்ணெய் தினமும் பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.


படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றை வேப்ப எண்ணெய் மருந்தாக பயன்படுகிறது.


தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.


தினமும் வேப்ப எண்ணெய்யை தலையில் தடவினால் அடர்த்தியான கூந்தலைப் பெறலாம்.


வேப்ப எண்ணெய் அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுப் புண்ணுக்கு உகந்தது.


வேப்ப எண்ணெய் புற்று நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.


வேப்ப எண்ணெய்யை உடலில் தடவி படுத்தால் கொசு தொல்லையில் இருந்து விடுபடலாம். வேப்ப எண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் கொசுகள் வீட்டை விட்டு ஓடிவிடும்.


சில சொட்டு வேப்ப எண்ணெய்யை நீர் சேமித்து வைக்கும் தொட்டியில் தெளித்தால் கொசு புழுக்கள் உருவாவதை தடுக்கலாம்.


சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் நம் நாட்டின் பாரம்பரியமான மரம், செடி, கொடிகளை கொண்டே பல மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்திருக்கின்றனர். “வேப்ப எண்ணெய்” வேப்ப மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மகத்துவங்கள் நிறைந்த எண்ணெய் ஆகும்.


வேப்ப எண்ணையில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் கரட்டினாய்டு சத்துகள் அதிகம் இருக்கின்றன. வேப்ப எண்ணையை வாரத்திற்கு ஒரு முறை தோலில் நன்கு தடவிய பின்பு குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.


காயங்கள், தழும்புகள் உடலில் அடிபடும் போது ரத்த காயங்கள் ஏற்படுகின்றன. இந்த ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை வேப்ப எண்ணெய் கொண்டுள்ளது. காயங்களில் கிருமி தோற்று ஏற்படுவதையும் தடுத்து, காயங்களை சீக்கிரம் ஆற்றுகிறது.


 

பாத நோய்கள் மழைக்காலங்களில் சேற்றில் இருக்கும் கிருமிகளின் தொற்று சிலருக்கு ஏற்படுவதால் சேற்றுபுண்கள் ஏற்படுகின்றன. ஷூ காலணிகள் அதிகம் உபயோகிப்பவர்களுக்கு பாதங்களில் கிருமி தொற்று ஏற்பட்டு படர் தாமரை போன்றவை ஏற்படுகின்றன. இவற்றை சீக்கிரம் குணமாக்க தினமும் சிறிது வேப்ப எண்ணையை மேற்கூறிய இடங்களில் தடவி வந்தால் போதும். 

 


மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. இதை உடலுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான புற்று நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறைகிறது.


 

தோலில் இருக்கும் செல்களில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களாலும், பரம்பரை காரணத்தாலும் சிலருக்கு சோரியாசிஸ் எனப்படும் நோய் ஏற்படுகிறது. இக்குறைபாட்டை குறைப்பதில் வேப்ப எண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது. இரவில் படுக்கும் முன் வேப்ப எண்ணெயை தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து பின்பற்றி வந்தால் சொரியாசிஸ் பிரச்சனையை குணப்படுத்தலாம்.

 

வேப்ப எண்ணெயுடன் தூய தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்த்து கொண்டு உறங்குவதால், கொசுக்கடி மற்றும் பூச்சி கடிகளிலிருந்து இருந்து தப்பிக்கலாம்.

 

சைனஸ் தொல்லை நீங்க தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வேப்ப எண்ணெயின் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள் (Diseases caused by increased bile)...



பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள் (Diseases caused by increased bile)...


பித்தம் சிறிது எண்ணெய்ப்பசையுடன் கூடியது, செயலில் கூர்மையானது, சூடானது, லேசானது, துர்நாற்றமுடையது, இளகும் தன்மையுடையது, நீர்த்தது ஆகிய குணங்களைக் கொண்டது. தொப்புள், இரைப்பை, வியர்வை, நிணநீர், இரத்தம், கண்கள், தோல் இவற்றை இருப்பிடமாகக் கொண்டுள்ளது. உடலுக்குப் பித்தம் பல நன்மைகளைச் செய்கிறது.


உண்ட உணவை சீரணிக்கச் செய்தல், உடலுக்குத் தேவையான வெப்பம், விருப்பம், பசி, தாகம், ஒளி, தெளிவு, பார்வை, நினைவாற்றல், திறமை, மென்மை போன்ற நல்ல செயல்களைச் செய்து உடலைப்பாதுகாக்கிறது.


தன் நிலையிலிருந்து பித்தம் சீற்றம் கொண்டு உடலில் அதிகரித்து விட்டால் - தோலில் மஞ்சள் நிறம் உண்டாகுதல், சோர்வு, புலன்களுக்கு வலுவின்மை, உடலில் சக்திக்குறைவு, குளிர்ச்சியில் விருப்பம், எரிச்சல், வாயில் கசப்புச்சுவையை ஏற்படுத்துதல், நாவறட்சி, மூர்ச்சை, தூக்கம் குறைதல், கோபம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. பித்தம் ஐந்து வகையான பிரிவுகளைக் கொண்டது. அவை: -


1 பாசகம்: இரைப்பை, சீரணப்பை இவற்றின் நடுவில் இருந்து கொண்டு ஐம்பெரும்பூதங்களால் ஆக்கப்பட்டிருந்தாலும், இதனிடம் நெருப்பின் குணம் அதிகமாக இருப்பதாலும், நீரின் குணங்கள் குறைவாக இருப்பதாலும், தன் திரவகுணத்தை விட்டுவிட்டு தன்னைச் சார்ந்த வாயு, ஈரத்தன்மை இவற்றின் காரணமாக உடலுக்கு உதவி புரிகிறது.


அதாவது உடலுக்குச் சூட்டையும், உணவை செரிக்கவும் செய்கிறது. அதனால் இதற்கு `அக்னி 'என்று அழைக்கப்படுகிறது. உணவை செரிக்கச் செய்து அதிலிருந்து சத்தான பகுதியையும், தேவையற்ற மலத்தையும் பிரிக்கிறது. மற்ற இடங்களிலுள்ள பித்தங்களுக்குத் தன்னிருக்கையிலிருந்து கொண்டே, ஊட்டமளிக்கிறது.


2 ரஞ்சக பித்தம்: இது இரைப்பையை உறைவிடமாகக் கொண்டு அங்குள்ள உணவின் நீர்ச்சத்தான பகுதிக்கு செந்நிறத்தை அளிக்கிறது.


3 ஸாதக பித்தம்: இது இதயத்தை தங்கு மிடமாகக் கொண்டு அறிவு, நுண்ணறிவு, தந்நிறைவு, செயல்படுவதில் ஊக்கம் இவைகளைத் தந்து தனக்கு விருப்பமான புலப்பொருள் அடைதல், செயல் இவற்றின் ஈடுபாட்டினால் அதை நிறைவேற்றிக் கொள்ளுதல் ஆகியவற்றைச் செய்கிறது.


4 ஆலோசக பித்தம்: இது கண்களில் தங்கி அவற்றிற்குப் பார்க்கும் சக்தியை அளிக்கிறது.


5 ப்ராஜக பித்தம்: சருமத்தை உறைவிடமாகக் கொண்டு சருமத்திற்கு ஒருவித ஒளியைக் கொடுத்து அதை நன்கு விளங்கச் செய்வதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இது எண்ணெய் குளியல், நீராடுதல், மேற்பூச்சு இவற்றைப் பக்குவப்படுத்தி ஊட்டமளித்து ஒளியை வெளிப்படுத்துகிறது.


காரம், புளி, உப்புச்சுவை, புலால் உணவு வகைகளில் மீன், கோழி, நண்டு வகையறா, எண்ணெய்யில் பொரித்த உணவு வகைகள், காபி, டீ, பேல்பூரி, பாணிப்பூரி, சமோஸா, பாஸ்தா, நூடுல்ஸ், சிப்ஸ், குளிர்பானங்கள், கையேந்தி பவனில் விற்கப்படும் சூப், சுண்டல், மதுபானம், பாக்கு, சிகரெட், குட்கா போன்றவை பித்தத்தைத் தூண்டி விட்டு, அதன் சீற்றத்திற்குக் காரணமாகி சுமார் 40 வகையான பித்த நோய்களை ஏற்படுத்துகின்றன. அவை: வருமாறு: -


உடல் முழுவதும் நெருப்பின் அருகில் உள்ளது போன்ற வியர்வையுடன் கூடிய எரிச்சல். உடலில் ஒரு பகுதியில் வியர்வை ஏற்படாமல் உஷ்ணம் தோன்றுதல், உடலில் காட்டுத் தீ போன்ற எரிச்சல், கண் முதலிய பொறிகளில் எரிச்சல், முகம், உதடுகள்,


வாயின் மேல் பாகம் இவற்றில் எரிச்சல், உடலின் உள் எரிச்சல், தோலில் தோன்றும் எரிச்சல், தோளில் எரிச்சல், புகைவது போல ஏப்பம் விடுதல், புளித்த ஏப்பம், கடுமையான உஷ்ணம், அதிகமாக வியர்த்தல், உடல் நாற்றம், புலன்களின் அழற்சி, இரத்தம் கருத்து நீற்றுப் போதல், மாமிசம் கருநிறமடைந்து கெட்ட நாற்றம் வீசுதல்,


தோல், அதனுள் உள்ள மாமிசம் இவற்றின் பிளவு, தோலின் உள்ளும், புறமும் வெடிப்பு, இரத்தக்கட்டி, எரிச்சலுள்ள இரத்தக் கொப்புளம், தோலின் மேல் உண்டாகும் வட்டமான தடிப்பு, இரத்த பித்தம், உடலிலோ, மலத்திலோ பச்சை நிறம் ஏற்படுதல், உடலில் மஞ்சள் நிறம் தோன்றுதல், ரத்தம் நீல நிறமாக மாறுதல்,


கக்கம், தோல், விலா இவற்றில் தோன்றும் வேதனையளிக்கும் கொப்புளம், மஞ்சள் காமாலை, வாயில் கசப்புச் சுவை, வாயில் இரத்தத்தின் நாற்றம், வாயில் கெட்ட நாற்றம், தாகம் அதிகரித்தல், உணவில் போதும் என்ற எண்ணம் தோன்றாமை, வாய் வேக்காடு, தொண்டைக்குள் வேக்காடு, கண் நோய், மலத்துவாரத்தில் வேக்காடு,


ஆண் குறியில் வேக்காடு, உயிருக்கு ஆதாரமான இரத்தம் வெளிவருதல், இருண்டு போதல், கண், சிறுநீர், மலம் இவை பசுமை கலந்த மஞ்சள் நிறமாகுதல், பித்தம் தன்னுடைய இயற்கையான அளவிலிருந்து குறைந்து விட்டால் செயலற்றிருப்பது, குளிர்ச்சி, விட்டு விட்டு ஏற்படும் உடல் வலி, குத்தல், சுவையின்மை, அசீரணம்,


உடலில் சொரசொரப்பு, நடுக்கம், பளு, நகம், கண் இவை வெளுத்துப் போதல் போன்றவை உடலில் காணும். பித்தத்தின் சீற்றத்தினால் ஏற்படும் உபாதைகளை நீக்க - கசப்பான மூலிகை நெய் மருந்தை அருந்தச் செய்தல், பேதி மருந்துகளால் பித்தத்தை மலம் வழியாகக் கழியச் செய்தல், இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல்,


வெட்டிவேர், விளாமிச்சைவேர், கரும்புவேர் போட்டு ஊறிய பானைத் தண்ணீரை குடிக்கப் பயன்படுத்துதல், குளிர்ந்த நீரில் குளித்தல், நெற்றியில் தூய சந்தனத்தை இட்டுக் கொள்ளுதல், காதிற்கு இனிமையாகவும், மிருதுவாகவும், மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியதுமான இன்னிசை, அன்பான வார்த்தைகளை கேட்டல்,


பழைய அரிசி, கோதுமை, பச்சைப்பயறு, சர்க்கரை, தேன், புடலை, நெல்லிக்காய், திராட்சை போன்றவை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது. வயிறு நிறையச் சாப்பிடுதல், தயிர், மசாலாப் பொருட்கள், புலால் உணவு, எண்ணெய், எதிர்காற்று, மதுபானம், பகலுறக்கம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.


B.Sc., (Nursing), B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர 25-10-2021 முதல் 10-11-2021 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு...

 B.Sc., (Nursing), B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர 25-10-2021 முதல் 10-11-2021 வரை tnhealth.tn.gov.in அல்லது tnmedicalselection.org ஆகிய வலைதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம் - மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு...



கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு மருந்து - மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரை...

 கருப்பு பூஞ்சைத் தொற்று பாதிப்புக்கு Amphotericin - B என்னும் மருந்தைப் பயன்படுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பரிந்துரை...



தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ கரோனா தடுப்பு மருந்து: டிஆர்டிஓ கண்டுபிடித்த 2DG மருந்து அடுத்த வாரம் அறிமுகம்...

 தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கரோனா தடுப்பு மருந்தை அடுத்த வாரத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.



சிறிய பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் 2டிஜி கரோனா தடுப்பு மருந்தைத் தண்ணீரில் கலந்து நோயாளிகள் குடிக்கலாம். இதன் மூலம் ஆக்சிஜன் உதவியோடு இருக்கும் கரோனா நோயாளிகள் விரைவில் அதிலிருந்து மீள முடியும். கரோனாவிலிருந்து விடுபட முடியும்.


முதல் கட்டமாக 10 ஆயிரம் டோஸ் பவுடர் மருந்துகளை வெளியிடுவதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.


டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) ஆகியவற்றின் கலவையில், டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.


சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிகுலர் பயாலாஜி (சிசிஎம்பி) உதவியுடன் டிஆர்டிஓ மற்றும் ஐஎன்எம்ஏஎஸ் அமைப்பினர் ஆய்வில் இறங்கினர். இந்த ஆய்வில் மருந்தின் மூலக்கூறுகள் கரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டன.


இந்த முடிவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு மே மாதம் மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு, 2-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.



இதைத் தொடர்ந்து டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம், டிஆர்டிஓ ஆகியவை இணைந்து கிளினிக்கல் பரிசோதனையை கரோனா நோயாளிகள் மீது நடத்தினர். 2-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை இந்தியாவில் 6 மருத்துவமனைகளில் நடந்து வெற்றியாக அமைந்ததையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-வது கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை 2020 டிசம்பர் முதல் 2021 மார்ச் வரை 27 கோவிட் மருத்துவமனைகளில் உள்ள 220 கரோனா நோயாளிகள் மீது பரிசோதிக்கப்பட்டது.


இந்த 3-வது கிளினிக்கல் பரிசோதனையில் பெறப்பட்ட முடிவுகள் அனைத்தும் டிசிஜிஐ அமைப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் டிஆர்டிஓ கண்டுபிடித்த 2-டிஜி மருந்து கரோனா நோயாளிகளுக்கு சிறப்பாகச் செயல்படுகிறது, ஆக்சிஜனை நம்பி இருக்கும் நோயாளிகளுக்கு நல்ல பலன் அளிக்கிறது, ஆக்சிஜனைச் சார்ந்து இருக்கும் நோயாளிகள் விரைவில் இல்லாமல் மீள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, கடந்த 1-ம் தேதி டிஆர்டிஓ தயாரித்த 2-டிஜி மருந்தை அவசர காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள டிசிஜிஐ அனுமதி அளித்துள்ளது. இந்த மருந்து பவுடர் வடிவில் இருப்பதால், தண்ணீரில் கலந்து குடிக்க முடியும். இந்த மருந்து உடலில் சென்று வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கிறது.


இந்த மருந்து குறித்து டிஆர்டிஓ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “டிஆர்டிஓ அமைப்பு தயாரித்த பவுடர் வடிவ கரோனா தடுப்பு மருந்து 2டிஜி மருந்து அடுத்த வாரம் முறைப்படி அறிமுகமாகிறது. தண்ணீர் கலந்து குடிக்கும் இந்த பவுடர் வடிவ மருந்து முதல் கட்டமாக 10 ஆயிரம் டோஸ்கள் வெளியிடப்பட்டு கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும்.


இதற்கான உற்பத்தியில் மருந்து நிறுவனங்கள் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்த மருந்தை டிஆர்டிஓ விஞ்ஞானி டாக்டர் அனந்த் நாராயண் பாட் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்தனர்” எனத் தெரிவித்தார்.

டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய மருந்து - கொரோனா பாதிப்பை குணப்படுத்தும்; அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி...

 



இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆர்டிஓ) அமைப்பு உருவாக்கிய கொரோனா மருந்துக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கென குறிப்பிட்ட எந்த மருந்தும் தற்போது நடைமுறையில் இல்லை. அதிகம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் விரைவில் குணமாக ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், டிஆர்டிஓவின் ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் (ஐ.என்.எம்.ஏ.எஸ்) மற்றும் ஐதராபாத்தின் டாக்டர் ரெட்டியின் ஆய்வகத்துடன் இணைந்து 2 டியோக்ஸிடி குளுக்கோஸ் (2டிஜி) என்ற மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருந்து பவுடர் போன்றது. இதை தண்ணீரில் கலந்து குடித்தால் போதும். 




2 கட்ட ஆய்வுகள் முடிந்த நிலையில், இந்த மருந்தை பெற்ற நோயாளிகள் விரைவில் குணமடைவது நிரூபணமாகி உள்ளது. இதன் 3வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து 2DG மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையரகம் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை தந்துள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சக அறிக்கையில், ‘‘மே 1ம் தேதி முதல் அதிக மற்றும் நடுத்தர பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கு 2டிஜி மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை எளிதாக தயாரிக்க முடியும் என்பதால் அதிகளவில் விநியோகிக்க எளிதானது. இது வைரஸ் உற்பத்தியை கட்டுப்படுத்தி, உடலில் ஆற்றலை ஊக்குவிக்கிறது’’ என கூறப்பட்டுள்ளது.


தடுப்பூசி, ரெம்டிசிவிர் மருந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

 தடுப்பூசி, ரெம்டிசிவிர் மருந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



 வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுவது தொடர்பாக செய்தித்தாள்களில் வந்த செய்தி தொடர்பாகவும் ரெம்டிசிவிர் பற்றாக்குறை தொடர்பான செய்திகளையும் தாமாக முன்வந்து ஐகோர்ட் வழக்கு எடுத்துக்கொண்டது. முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில், ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை, தடுப்பு மருந்து பற்றாக்குறை இல்லை என்று விளக்கம் அளித்தார். இருப்பினும், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.



தொடர்ந்து, வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. ரெம்டிசிவிர் மருந்து பற்றாக்குறை இல்லை என்று விளக்கம் அளித்தார். மேலும், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகியும் விளக்கம் அளித்தார். தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர்கள் பலர் ஆஜராகி, அடுக்கு அடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தனர்.



மத்திய அரசு தரப்பில், வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவது குறித்து தமிழக அரசுடன் ஆலோசனை நடத்திதான் நடவடிக்கை எடுத்தோம். இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரிசீலனை செய்ய உள்ளோம் என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தடுப்பூசி, ரெம்டிசிவிர் மருந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார். மேலும், மே 1 மற்றும் 2ம் தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை ஏப்ரல் 28ம் தேதி வெளியிடலாம். வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும், இதில் சமரசம் செய்ய கூடாது. வாக்கு எண்ணிக்கை தொடர்புடைய வாகனங்களை மட்டும் 2 நாட்களில் அனுமதிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.

தமிழகத்தில் வருகிற ஜனவரி 31ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்...


 தமிழகத்தில் வருகிற 31-ஆம் தேதி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் கடந்த 17-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணி காரணமாக, போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது.


இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வருகிற 31-ஆம் தேதி, 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகளில் முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும், அன்றைய தினம் பயணத்தில் இருக்கும் குழந்தைகளுக்காக, பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையங்களிலும் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகத்தில் உள்ள 70.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Our next calender year 2025 is a mathematical wonder

 நமது அடுத்த நாட்காட்டி ஆண்டு 2025 ஒரு கணித அதிசயம் சுவாரஸ்யமான 2025  1) 2025, ஒரு முழு வர்க்க எண்  2) இது இரண்டு வர்க்கங்களின் பெருக்கற்பலன...