கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை நீக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - மற்ற வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்...

 


சிவகங்கை அருகே சக்கந்தியில் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தியதற்கான விழா நடந்தது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, முதன்மைக் கல்வி அலுவவலர் பாலுமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவிற்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னோடியாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார். தமிழகத்தில்தான் கல்வி முறை சிறப்பாக உள்ளது எனக் கல்வியாளர்கள், மற்ற மாநிலத்தவர் தெரிவித்துள்ளனர். 742 அடல் டிங்கரிங் லேப் திட்டம் அடுத்த மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும். பள்ளிகளில் 7,500 ஸ்மார்ட் வகுப்புகள், 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை வழங்க மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் ஷூ, சாக்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும். காலத்திற்கு ஏற்ப ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை நீக்கி விட்டோம். ஏற்கனவே 7,100 பேர் உபரி ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களைக் காலிப் பணியிடங்களில் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு ரூ.1,400 கோடி நிதித் சுமை ஏற்படும்.

மேலும் சிலர் வழக்குத் தொடர்ந்துள்ளதால் ஆசிரியர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒத்துழைத்தால் பிப்.13-ம் தேதிக்குள் பட்டியல் வெளியிட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். மற்ற வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை நீக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ’’.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns