கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

RTI - CPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலை பற்றிய 13 புதிய தகவல்கள்...

 


RTI - 13.01.2021 நிலவரப்படி CPS வல்லுநர் குழு பற்றிய 13 புதிய தகவல்கள்...

நிதித்துறை கடித எண்:  51368/ நிதி(PGC-1) / 2020, நாள்: 13-01-2021...

தகவல் பகிர்வு : 

அ.சி.ஜெயப்பிரகாஷ்.


* ✅CPS வல்லுநர் குழுவின் அறிக்கை 119 பக்கங்களை கொண்டது என   RTI கடித தகவல்


*✅ CPS வல்லுநர் குழு தனது அறிக்கையினை, மாண்புமிகு  தமிழக முதலமைச்சர் அய்யா அவர்களிடம் 27.11.2018 அன்று சமர்ப்பித்தது.


*✅மேலும் அந்த அறிக்கையானது மொத்தம் 119 பக்கங்களை கொண்டது என RTIயில் பதில் வழங்கப்பட்டுள்ளது.


  *✅ CPS வல்லுநர் குழுவானது, சங்கங்களின் கருத்து கேட்பு கூட்டம் 22.09.16 அன்று நடந்ததே கடைசியாகும். அதற்கு பின்னர் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை.


*✅ அக்குழுவின் உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடைசியாக 30.04.2018 அன்றும், 2006 முதல் இன்று வரை 11 முறை  ஆலோசனை கூட்டத்தையும் நடத்தியுள்ளது. அதன் பின்னர் எந்தவொரு கூட்டமும் நடத்தவில்லை.


 *✅ மேலும் 33 அரசு ஊழியர் சங்கங்களிடமும், 24 ஆசிரியர் சங்கங்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது.


*✅ CPSயை இரத்து செய்ய வலியுறுத்தி இன்று வரை 4012 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.


CPS வல்லுநர் குழுவுக்கு தமிழக அரசின் செலவு விவரம்


*✅ CPS வல்லுநர் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு அமர்வுப் படியும் & வாகனப் படியும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது என RTI ல் தகவல் பெறப்பட்டுள்ளது.


*✅ தமிழக அரசால் இக்குழுவிற்கு   ரூ.40,000/- செலவு செய்யப்பட்டுள்ளது என   நிதித் துறையிடமிருந்து பதில் வழங்கப்பட்டுள்ளது.


>>> நிதித்துறை கடித எண்:  51368/ நிதி(PGC-1) / 2020, நாள்: 13-01-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...