கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

6, 7, 8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்...



 தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றிற்கு பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த மாதமே 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கல்வித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.


அடுத்த வாரம் பள்ளிகள் திறக்க வாய்ப்பிருக்கிறது என எதிர்பார்த்த நிலையில் தற்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்த புதிய தகவலை தெரிவித்திருக்கிறார்.


கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், நோய் தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததன் காரணமாக பொதுத் தேர்வு எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 19-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.



இதையடுத்து 9, 11-ம் வகுப்புகளுக்கும் 30 முதல் 40 சதவீதம் வரையில் பாடத்திட்டங்களை குறைத்து அறிவிப்பை வெளியிட்டதோடு, அவர்களுக்கான நேரடி வகுப்புகளும் கடந்த 8-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 


அதனை தொடர்ந்து  6,7,8 ஆகிய வகுப்புகள் எப்பொழுது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், அவர்களுக்கும் விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்க வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலும் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.


இந்நிலையில் தமிழகத்தில் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 


இது குறித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-


இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. தற்போது 98.5 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர் . 6,7,8ம் வகுப்புகளுக்கு டேப் வழங்கப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...