கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஊதிய உயர்வுடன் இரண்டு குழப்பமான G.O. வெளியிட்டதால் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் தவிப்பு - அரசாணையை மீண்டும் தெளிவாக வெளியிட வேண்டுகோள்...



 அரசு பள்ளிகளில் கடந்த பத்து கல்வியாண்டாக பணியாற்றி வரும்  பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு 1.2.2021 அன்று தமிழக அரசு ஊதிய உயர்வினை அளித்து  சில நிபந்தனைகளுடன் 3அரை நாட்களில் இருந்து 3 முழுநாட்கள் பணியாற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது...  


இந்த அரசாணை அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் உடனே சென்றடைந்து விட்டது .அதன் பின்னர் மறுநாளே  2.2.2021 அன்று திருத்தத்துடன் கூடிய புதிய அரசாணை  ஒன்றை  அரசு வெளியிட்டது.


இந்த அரசாணை நிறைய பள்ளி தலைமையாசிரியர்களுக்கு இன்றுவரை சென்றடையவில்லை ... இரண்டாவதாக  வெளியிடப்பட்ட அரசாணையில் ஊதிய உயர்வுடன்  ஏற்கனவே நடைமுறையில் உள்ள  2014 ல் வெளியிடப்பட்ட  அரசாணை படி செயல்பட வேண்டும் என்ற குழப்பமான தகவல் அதில் உள்ளதால்  பகுதிநேர ஆசிரியர்கள் வாரத்திற்கு 3 அரை நாட்கள் பணியாற்ற வேண்டுமா? அல்லது 3 முழுநாட்கள்  பணியாற்ற வேண்டுமா? என்ற குழப்பத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளனர் . அதனால் பகுதிநேர ஆசிரியர்கள் வாரத்திற்கு 3அரை நாட்கள் பணியாற்ற வேண்டுமா? இல்லை 3 முழுநாட்கள் பணியாற்ற வேண்டுமா?  என அரசு தெளிவான G.O. வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Aadhaar Correction - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள்

ஆதார் திருத்தம் - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள் Aadhaar Correction - Required Documents, Terms and Limitations UIDAI (Uniq...