பகுதி நேர ஆசிரியர்களுக்கு 30ஆம் தேதி மாறுதல் கலந்தாய்வு
Transfer Counseling for part-time teachers on 30th December 2024
பகுதி நேர ஆசிரியர்களுக்கு 30ஆம் தேதி மாறுதல் கலந்தாய்வு
Transfer Counseling for part-time teachers on 30th December 2024
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராடிய பகுதிநேர ஆசிரியர்கள் கைது
Arrest of part-time teachers who protested insist on permanent job
சென்னை எழும்பூரில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்
2,000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்து வரும் போலீசார்
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்
கோட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற நிலையில் கைது
தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் சுமார் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பு ஊதிய அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர்.
அதன்படி வாரத்தில் 3 நாட்கள் மட்டும் அவர்கள் பணிக்கு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு முதற்கட்டமாக அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பின்னர் ரூ.7500 என்று ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கேட்டு பேல கட்ட போராட்டங்களை நடத்தினர். அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த திமுக பகுதி நேர ஆசிரியர்களுக்கு மேலும் ஊதியம் உயர்த்தி மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்தது. மேலும் ஊதியம் உயர்வு மற்றும் பணி நிரந்தரம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது.
இந்நிலையில், நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே குவிந்தனர். பின்னர் கோட்டை நோக்கி முற்றுகையில் ஈடுபட புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர். இது குறித்து பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பினர் கூறியதாவது: பகுதி நேர ஆசிரியர்களுக்கு கடந்த ஆட்சியில் ஏமாற்றம் கிடைத்தது.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய குழந்தைகளுக்கு நாங்கள் பாடம் கற்பிக்கும் நிலையில் உள்ளோம். எங்களுக்கு குறைந்த ஊதியம் தான் வழங்கப்படுகிறது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். மேலும் முதலில் எங்களுக்கு செப்டம்பர் மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். எங்களை பணிநிரந்தரம் செய்யவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
12105 பகுதி நேர பயிற்றுநர்களின் தொகுப்பூதியம் ரூ.10,000 லிருந்து ரூ.12,500 ஆக உயர்த்தி அரசாணை (நிலை) எண்: 23, நாள்: 24-01-2024 வெளியீடு...
Hike in consolidated pay of 12105 part-time instructors from Rs.10,000 to Rs.12,500 Ordinance G.O.(Ms) No: 23, Dated: 24-01-2024 Issued...
பகுதி நேர பயிற்றுனர்களின் ஊதியம் 10000 இல் இருந்து 12500 ஆக அதிகரித்து ஆணை (G.O.Ms.No.23, Dated: 24-01-2024) வெளியிடப்பட்டுள்ளது...
>>> அரசாணை (நிலை) எண்: 23, நாள்: 24-01-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு
பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2,500 ரூபாய் ஊதியம் உயர்வு - அரசாணை வெளியீடு...
10 ஆயிரம் ரூபாயில் இருந்து 12,500 ரூபாயாக உயர்த்தியது தமிழ்நாடு அரசு
நடப்பு மாதத்தில் இருந்து ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிப்பு...
பணிநிரந்தரம் செய்யக் கோரி 3 நாட்களாக நடைபெற்றுவந்த பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் - அமைச்சர், முதல்வரின் செயலாளர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக நிர்வாகிகள் அறிவிப்பு...
பிரச்சனைக்குரிய சிபிஎஸ்இ பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கரோனா நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, கருத்துரை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ''சென்னையில் மாணவிகளுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்த தனியார் பள்ளி ஆசிரியர் குறித்து, மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் துறை ரீதியான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்குக் கல்வித் துறை சார்பில், குழு அமைத்து ஓரிரு தினங்களில் விளக்கம் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளது. இதையடுத்து போலீஸாரால் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரச்சினைக்குரிய சிபிஎஸ்இ பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் குரூப்பைத் தேர்வு செய்ய பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் தேவை. பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்ற நிலையில், எப்படி மதிப்பெண் வழங்குவது என்பது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு பிளஸ் 1 சேர்க்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது தமிழக அரசு கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முழு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை, நிரந்தர ஆசிரியராக நியமனம் செய்வது குறித்து வரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். கருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்துகள் குறித்து மாநில சுகாதாரத் துறை, மத்திய அரசிடம் கேட்டுள்ளது'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பின்னர், தஞ்சாவூர் மேம்பாலம் அரசு காதுகேளாதோர் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாமினையும், அரசு இராசாமிராசுதார் மருத்துவமனையில் புதிதாகத் தொடங்கப்பட்ட கரோனா சிகிச்சை மையத்தையும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை கடந்த 2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதா நியமித்தார். ஆனாலும் நியமனம் செய்தது முதலே மே மாதம் சம்பளம் கொடுக்காமல் முந்தைய அ.தி.மு.க அரசால் மறுக்கப்பட்டது.
எத்தனையோ முறை கோரிக்கை வைத்து இருந்தாலும் 10 ஆண்டுகளும் மே மாதம் மட்டும் சம்பளம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படவில்லை.
இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க புதிய ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். தி.மு.க தேர்தல் அறிக்கையிலும் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என நம்பிக்கை கொடுத்துள்ளது.
ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் ஏற்கனவே பெறப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற இதற்காக தனித்துறை ஏற்படுத்தி தனி அதிகாரியை நியமித்துள்ளார் முதல்வர்.
இதிலும் கோரிக்கை மனுக்களை பகுதிநேர ஆசிரியர்கள் கொடுத்து உள்ளார்கள். எனவே கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளார்கள்.
இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியதாவது,
"கரோனா நோய் தொற்று பரவலை தடுக்க அரசு ஊரடங்கை இப்போது அறிவித்துள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் மே மாதம் சம்பளம் கொடுத்து அனைவரின் குடும்பங்களுக்கு உதவிட முதல்வர் ஸ்டாலின் அவர்களை வேண்டுகிறோம்.
பெருமனதுடன் முதல்வர் அவர்கள் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு இம்முறை மே மாதம் சம்பளத்தை வழங்கினால், இவர்களின் உணவு, வீட்டு வாடகை குறித்த கவலைகள் குறையும். ஏற்கனவே, மே மாதம் சம்பளம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி நல்ல விடியலை கொடுப்பதாக பள்ளிக்கல்விஅமைச்சர் பேட்டி ஒன்றில் பதில் சொன்னதை ஆவலாக நாங்கள் எதிர்பார்த்து வருகிறோம்" என்றார்.
அரசு பள்ளிகளில் கடந்த பத்து கல்வியாண்டாக பணியாற்றி வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு 1.2.2021 அன்று தமிழக அரசு ஊதிய உயர்வினை அளித்து சில நிபந்தனைகளுடன் 3அரை நாட்களில் இருந்து 3 முழுநாட்கள் பணியாற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது...
இந்த அரசாணை அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் உடனே சென்றடைந்து விட்டது .அதன் பின்னர் மறுநாளே 2.2.2021 அன்று திருத்தத்துடன் கூடிய புதிய அரசாணை ஒன்றை அரசு வெளியிட்டது.
இந்த அரசாணை நிறைய பள்ளி தலைமையாசிரியர்களுக்கு இன்றுவரை சென்றடையவில்லை ... இரண்டாவதாக வெளியிடப்பட்ட அரசாணையில் ஊதிய உயர்வுடன் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 2014 ல் வெளியிடப்பட்ட அரசாணை படி செயல்பட வேண்டும் என்ற குழப்பமான தகவல் அதில் உள்ளதால் பகுதிநேர ஆசிரியர்கள் வாரத்திற்கு 3 அரை நாட்கள் பணியாற்ற வேண்டுமா? அல்லது 3 முழுநாட்கள் பணியாற்ற வேண்டுமா? என்ற குழப்பத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளனர் . அதனால் பகுதிநேர ஆசிரியர்கள் வாரத்திற்கு 3அரை நாட்கள் பணியாற்ற வேண்டுமா? இல்லை 3 முழுநாட்கள் பணியாற்ற வேண்டுமா? என அரசு தெளிவான G.O. வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
பகுதிநேர பயிற்றுநர்களுக்கு (Part Time Instructors) ஊதியம் உயர்த்தி வழங்கி அரசாணைகள் 15 மற்றும் 20 வெளியீடு - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 185/ பநேப/ ஒபக/ 2021, நாள்: 09-02-2021...
பகுதி நேர பயிற்றுநர்களுக்கு (Part Time Instructors) மே மாதம் தவிர்த்த 11 மாதங்களுக்கு ரூ.10,000 ஊதியம் - திருத்தம் செய்து புதிய அரசாணை (நிலை) எண்: 20, நாள்: 02-02-2021 வெளியீடு...
>>> அரசாணை (நிலை) எண்: 20, நாள்: 02-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் - தமிழ்...