கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்தல் 2021 - நான்கு கட்ட பயிற்சி வகுப்புகள் - தேர்தல் கமிஷன் உத்தரவு...

 


தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அனைத்து பணியாளர்களுக்கும், நான்கு கட்ட பயிற்சி அளிக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அனுப்பியுள்ள கடிதம்:தமிழகத்தில், சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்க வேண்டும்தேர்தல், ஏப்., 6ல் நடக்க உள்ளது. அதற்கு முன், தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, நான்கு கட்டமாக, பயிற்சி அளிக்க வேண்டும்.


மார்ச், 18க்குள், ஓட்டுச் சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, முதல் பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பின், மார்ச், 26க்குள் இரண்டு நாட்கள்; ஏப்ரல், 3க்குள் மூன்று நாட்கள் பயிற்சி அளிக்க வேண்டும்; ஏப்., 5ல், நான்காம் கட்ட பயிற்சி அளிக்க வேண்டும்.


வகுப்பறையில், 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மாவட்டத்தில் எவ்வளவு தேர்தல் பணியாளர்கள் தேவையோ, அவர்களுடன் கூடுதலாக, 20 சதவீத பணியாளர்களுக்கு, பயிற்சி அளிக்க வேண்டும். ஓட்டுச்சாவடியில் பின்பற்ற வேண்டிய, கொரோனா விதிமுறைகளையும், தெரியப்படுத்த வேண்டும்.


ஓட்டுச்சாவடியில் ஒவ்வொரு அலுவலர்களும், என்ன செய்ய வேண்டும் என்பதை, தனித்தனியே விளக்க வேண்டும். செயல் விளக்கம் மற்றும் விதிமுறைகள் அடங்கிய கையேடை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...