கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அடுத்த தேர்தலில் 'ரிமோட் ஓட்டிங்' முறை அறிமுகம்...

 அடுத்த நாடாளுமன்ற தேர்தலில், 'ரிமோட் ஓட்டிங்'முறை அறிமுகப்படுத்தப்படும்,'' என, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நம்பிக்கை தெரிவித்தார். 



டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசியதாவது: தேர்தலில் ஓட்டளிக்கும் முறையில், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளோம். இந்த தொழில்நுட்பத்தை, சென்னை, ஐ.ஐ.டி., யுடன் இணைந்து, ஆய்வு செய்து வருகிறோம். 


Remote Voting எனப்படும், இந்த புதிய தொழில்நுட்பம் வாயிலாக, தேர்தலின்போது, தங்கள் தொகுதியில் உள்ள ஓட்டுச் சாவடிக்கு நேரில் செல்லாமல், வாக்காளர்களால் ஓட்டளிக்க இயலும். நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும், அங்கு, அதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்துக்குச் சென்று, வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம். 


 இந்த புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கான சோதனை முயற்சி, இன்னும், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் துவங்க உள்ளது. நாடாளுமன்றத்துக்கு, 2024ல் நடக்கும் தேர்தலில், ரிமோட் ஓட்டிங் முறையை அறிமுகப் படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடி, வாக்காளர்களால் ஓட்டளிக்க முடியாது. 


 தேர்தலின்போது, இதற்காக அமைக்கப்படும் சிறப்பு மையத்திற்கு நேரில் சென்று, ஓட்டளிக்க வேண்டும். அந்த மையத்தில், 'பயோமெட்ரிக்' சாதனங்களும், 'வெப் கேமரா'வும் இருக்கும். அதன் வாயிலாக, வாக்காளர்களின் அடையாளம் உறுதி செய்யப்படும். அதன்பின், அவர்கள் ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...