கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆணையர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆணையர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா...

 நாடாளுமன்றத் தேர்தல் நாள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.


அவரது பதவிக் காலம் 2027ம் ஆண்டு வரை உள்ள நிலையில் பதவி விலகியுள்ளார்...




அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் - 12.12.2022 மற்றும் 13.12.2022 தேதிகளில் சென்னையில் நடைபெறுதல் - கூட்டப்பொருள் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Review meeting for all District Chief Educational Officers - to be held at Chennai on 12.12.2022 and 13.12.2022 - Agenda - Proceedings of the Commissioner of School Education)...


>>> அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் - 12.12.2022 மற்றும் 13.12.2022 தேதிகளில் சென்னையில் நடைபெறுதல் - கூட்டப்பொருள் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Review meeting for all District Chief Educational Officers - to be held at Chennai on 12.12.2022 and 13.12.2022 - Agenda - Proceedings of the Commissioner of School Education)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் / விடுதிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்கள் / காப்பாளர்கள் விவரம் கோரி ஆதி திராவிட நல ஆணையர் கடிதம் (Letter of the Adi Dravidar Welfare Commissioner seeking details of Teachers / Wardens working in Adi Dravidar Welfare Schools / Hostels for more than 3 years) ந.க.எண்: எ3/33212/2021, நாள்: 24-11-2021...



>>> ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் / விடுதிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்கள் / காப்பாளர்கள் விவரம் கோரி ஆதி திராவிட நல ஆணையர் கடிதம் (Letter of the Adi Dravidar Welfare Commissioner seeking details of Teachers / Wardens working in Adi Dravidar Welfare Schools / Hostels for more than 3 years) ந.க.எண்: எ3/33212/2021, நாள்: 24-11-2021...

மாவட்டங்களில் பணிபுரியும் பணியாளர்கள்‌ ஆணையரக அழைப்பாணை இல்லாமல்‌ வருகை புரியக் கூடாது - ADW ஆணையர்...



 ந.க.எண்‌.இ6/500 /2021 , நாள்‌.13.07.2021. 

ஆதிதிராவிடர்‌ நல ஆணையரகம்‌,

சென்னை - 5.


சுற்றறிக்கை

பொருள்‌: பணியாளர்‌ தொகுதி - ஆதிதிராவிடர்‌ நல ஆணையரகம்‌ - மாவட்டத்தில்‌ பணிபுரியும்‌ - பணியாளர்கள்‌ -ஆதிதிராவிடர்‌ நல ஆணையரகத்திற்கு வருகை புரிவது - தொடர்பாக.


மாவட்டங்களில்‌ பணிபுரியும்‌ ஆதிதிராவிடர்‌ நலத்துறை சார்ந்த அனைத்து நிலை பணியாளர்கள் (ஆசிரியர்கள்‌, காப்பாளர்கள்‌ மற்றும் அனைத்து பணியாளர்கள்‌) மற்றும்‌ சங்க நிர்வாகிகளும் எவ்வித அனுமதியும்‌ இன்றி ஆணையரகத்திற்கு வருகை புரிவதால்‌ ஆணையரகத்தில்‌ பணி நடைபெறுவதில்‌ தேக்க நிலை ஏற்படுகிறது.


எனவே, மாவட்டங்களில் பணிபுரியும் பணியாளர்கள்‌ ஆதிதிராவிடர்‌ நல ஆணையரக அழைப்பாணை இல்லாமல்‌ பிற காரணத்திற்க்காக ஆணையரகத்திற்கு வருகை புரிவதற்கு மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர் நல அலுவலர்களின்‌ அனுமதி பெற்ற பின்பே வருகை புரியுமாறு அறிவறுத்துமாறு கேட்‌டுக் கொள்ளப்படுகிறது.


எந்த வித முன்‌ அனுமதியும்‌ இன்றி ஆணையரகத்திற்கு மாவட்டப் பணியாளர்கள் வருகை புரிந்தால்‌ பணியாளர்களிடம்‌ விளக்கம்‌ கேட்குமாறு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்‌ நல அலுவலருக்கு அறிவுறுத்தப்படுகிறது. இச்சுற்றறிக்கையை மாவட்டங்களில்‌ பணிபுரியும்‌ அனைத்து நிலை பணியாளர்‌களுக்கும்‌, சுற்றறிக்கைக்கு அனுப்புமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

ஒம்‌- சோ.மதுமதி,

ஆதிதிராவிடர்‌ நல ஆணையர்



NHIS திட்டத்தில் Medical Claim Reimbursement தொடர்பான வழக்குகளின் தீர்ப்புகள் - கருவூலக் கணக்கு துறை ஆணையரின் தெளிவுரை கடிதம்...


 NHIS திட்டத்தில் Medical Claim Reimbursement தொடர்பான வழக்குகளின் தீர்ப்புகள் - கருவூலக் கணக்கு துறை ஆணையரின் தெளிவுரை கடிதம் (Commissioner of Treasuries and Accounts Letter Rc.No.3223/ NHIS-1/ 2018, Dated: 01-06-2021...)...


>>> Click here to Download Commissioner of Treasuries and Accounts Letter Rc.No.3223/ NHIS-1/ 2018, Dated: 01-06-2021...


>>> தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான NHIS Re-Imbursement - CLAIM FORM...


>>> அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் புதிய உடல்நலக் காப்பீட்டு திட்டம் (NHIS) தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அனைத்து அரசாணைகள் & தகவல்கள் தொகுப்பு...


>>> அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீட்டில் கொரோனா சிகிச்சை மேற்கொள்வது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அனைத்து அரசாணைகள் & தகவல்கள் தொகுப்பு...



பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் அவசியம். மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் -பிரின்ஸ் கஜேந்திர பாபு...

 பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை : நாள் 17.05.2021


மாநில உரிமை காக்க! 

கல்வி உரிமை மீட்க! 

தமிழ் நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வாழ்த்தி, வரவேற்கிறோம். 


ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் நேரடியாக ஒரு கொள்கை முடிவை நடைமுறைப்படுத்த மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறை செயலாளர்களிடம் ஆலோசனை நடத்துவது  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டிப் பறிக்கப் பார்க்கிறது என்பதையும் தாண்டி, மாநில அரசைத் தேர்ந்தெடுத்த மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகும்.   அத்தகைய கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற தமிழ் நாடு அரசின் முடிவு மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முதல் படி. தமிழ் நாடு அரசின் இந்த முடிவை வாழ்த்தி வரவேற்பதுடன், தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையைப் பிற மாநில அரசுகளும் பின்பற்றி இந்திய அரசமைப்புச் சட்டம் வகுத்தளித்துள்ள மக்களாட்சி மாண்புகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் உயர்த்திப் பிடிக்க தமிழ்நாடு அரசுடன் பிற மாநில அரசுகளும் கைகோர்க்க  வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.  


மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்  மக்களின் துயர் துடைக்கும் நல்லாட்சியை  வழங்கிட  

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்" எனும் குறள் வழியில் அமைச்சர் முதல் அரசு அலுவலர்கள் வரை  ஆய்ந்தாய்ந்து மிகப் பொருத்தமான  நேர்மையானவர்களை உரிய துறைகளுக்கு அமர்த்தியுள்ளதைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பாராட்டி வரவேற்கின்றது. பொறுப்பேற்றுள்ள அனைவர் தம் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.


பள்ளிக் கல்வி ஆணையர் பணியிடம் 2019ல் உருவாக்கப்பட்ட போதே பள்ளிக் கல்வித் துறையில் அத்தகைய பணியிடம் தேவையற்றது என்ற கருத்தைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தெரிவித்தது. 


புதிய அரசு பொறுப்பேற்றவுடன் தேவையற்ற பணியிடங்களை நீக்கி விட்டு, பள்ளிகளில் கூடுதலாகத் தேவைப்படும் ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை உருவாக்கி, சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் வழங்கிடுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்த்தோம்.


எதிர்பார்ப்பிற்கு மாறாக, பள்ளிக் கல்வி இயக்குநர் பணி வகித்தவரை இடம் மாற்றி, அந்தப் பணியிடத்தை இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (IAS cadre post) வகிக்கும் பணியிடமாக மாற்றிடும் வகையில் பள்ளிக் கல்வி ஆணையர், பள்ளிக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 


இன்று வரை, கல்வியியல் செயல்பாடு கொண்டவரையே தமிழ் நாடு அரசு, பள்ளிக் கல்வி இயக்குநர் பணியில் நியமித்துள்ளது. தற்போது ஒன்றிய அரசு ஒட்டுமொத்தக் கல்வித் துறையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயலும் சூழலில், ஆட்சிப் பணி அலுவலர் (IAS) ஒருவரைப் பள்ளிக் கல்வி இயக்குநர் பொறுப்பில் நியமிப்பது, தமிழ் நாட்டின் தனித்தன்மையை இழக்கச் செய்யும். எந்த மாநிலத்தைச் சார்ந்தவரும் எதிர்காலத்தில் இப்பணியில் அமர்த்தப்படலாம். அத்தகைய நிலை உருவாக வழி செய்வது நியாயமான அணுகுமுறை அல்ல. 


கடந்த சில ஆண்டுகளாக கல்வித்துறையில் பல்வேறு குழப்பமான முடிவுகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், நிலைமையைச் சீர்படுத்திட மிகப் பொருத்தமான அலுவலராக திரு. க.நந்தகுமார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்றே கருதுகிறோம்.  மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றும் போது தனது மாவட்டத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பல வகையிலும் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். மாநிலக் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட ஒருவர் ஆட்சிப்பணி அலுவலராக இருப்பதால் அவரின் திறமையையும், அரசுப் பள்ளி மாணவர்கள் மீது அவரின் அக்கறை கொண்ட அணுகுமுறையையும் பள்ளிக் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கருதி குறிப்பிட்ட நோக்கத்திற்காக, அந்த நோக்கம் நிறைவேறும் காலம் வரை இயக்குநர் பணியிடத்தில் ஒர் ஆட்சிப் பணி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவே கருதுகிறோம்.  மீண்டும் பள்ளிக் கல்வி இயக்குநர் பணி பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். 


இயக்குநர் பணி நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தேவையற்ற விவாதமாக மாறி கல்வியை மாநிலப் பட்டியலுக்குத் திரும்ப கொண்டு வர வேண்டும் என்ற நமது அடிப்படை கோரிக்கையில் இருந்து திசை மாற அனுமதிக்கக்கூடாது. 


இந்தியாவிற்கே முன்னுதாரணமாகத் திகழும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கிட உறுதியுடன் செயல்படும் மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க மாநிலக் கல்வி ஆணையத்தை அமைத்திட விரைந்து செயல்பட வேண்டும்  என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது. 


பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

பொதுச் செயலாளர்

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை



சாதிக்க நினைக்கும் மாணவர்களுக்கு உண்மையான உத்வேகம் - பள்ளிக் கல்வித் துறை ஆணையர் திரு.க.நந்தகுமார் இ.ஆ.ப. அவர்கள்...

 சிவில் சர்வீசஸ் தேர்வில் சிறந்து விளங்க வேண்டும் என்று எப்போதும் கனவு கண்ட கே.நந்தகுமார் 2006 ஆம் ஆண்டில் தனது 26 வயதில் அகில இந்திய தரவரிசையை 30 வது இடத்தைப் பிடித்ததன் மூலம் நனவாக்கியுள்ளார். அவர்  மில்லியன் கணக்கான இந்திய மாணவர்களுக்கு ஒரு உண்மையான உத்வேகம், மேலும் சாத்தியமில்லாதது எதுவுமில்லை என்பதைக்  காட்டினார். இது அவரது கடின உழைப்பால் மட்டுமே நனவாகியது.



குடும்ப பின்னணி

கே.நந்தகுமார் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். அவரது தந்தை கருப்பண்ணன் தனது சொந்த கிராமத்தின் நெல் வயல்களில் வேலைக்குச் சென்றார், இது சரியாக அமையவில்லை, எனவே அவரது தந்தை உள்ளூர் லாரி சேவையில் சேர்ந்தார், ஒரு ‘கிளீனராக’. இரண்டு வருடங்கள் நீடித்த அந்த காலப்பகுதியில், அவர் வாகனம் ஓட்ட கற்றுக் கொண்டார் . அவரது உரிமத்தைப் பெற்றார்; பின்னர் அவருக்கு ஓட்டுநராக வேலை கிடைத்தது. அவரது தாயார் லட்சுமி, அவர் ஒரு தையல் இயந்திரத்தை வாங்குவதற்கு சிறிது தொகையை முதலீடு செய்து வீட்டிலிருந்து வேலை செயதார். அவர் ஒரு நாளைக்கு சுமார் நூறு ரூபாய் சம்பாதித்து வீட்டு செலவுகளை கவனித்துக்கொண்டார். தாய் மற்றும் தந்தை கருப்பண்ணனின் வருமானத்தில் குடும்பம் நடந்தது. நந்தகுமாருக்கு ஒரு சகோதரர் அரவிந்த்குமார் உள்ளார், அவர் பொறியியல் பட்டதாரி.


அரவிந்த் மற்றும்  நந்தகுமார் இருவரும், எங்களின் பெற்றோர் “கடவுள்கள்”. "எங்கள் தந்தை மிகவும் கடின உழைப்பாளி மற்றும் மிகவும் சிக்கனமானவர் என்பதால் நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்று  கூறுகின்றனர்.


கல்வி பின்னணி


க.நந்தகுமார் தனது பள்ளிப்படிப்பை நாமக்கல் அரசு தெற்கு பள்ளியில் இருந்து முடித்தார், பயிற்று மொழி தமிழ் மொழியாகும். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் பொள்ளாச்சி மஹாலிங்கம் கல்லூரியில் பொறியியல் படித்து முடித்தார்.


பொருளாதார பிரச்சினை மற்றும் வீட்டை நடத்துவதற்கு அவர் தனது தந்தைக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு காரணமாக கோவையில் தனியார் நிறுவனத்தில்  இந்த காலகட்டத்தில் அவர் பணிபுரிந்தார், பின்னர் இரவு நேரங்களில் படித்தார், மன மற்றும் உடல் உழைப்பின் விளைவாக தீவிர சோர்வு ஏற்பட்டது . இது அவரது படிப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது, மேலும் அவர் இந்திய நிர்வாக சேவை தேர்வுகளில் கவனம் செலுத்த இயலாமல் போனது.


க.நந்தகுமார் பொருளாதார சவால்கள் எதிர்கொண்டபோதிலும், இறுதியாக  பொறியியல் நிறுவனத்தில் தனது வேலையை விட்டு விலக முடிவு செய்தார்.


விருப்பத் தாள்

தமிழை தனது மொழி ஊடகமாகக் கொண்டு, க.நந்தகுமார் புவியியல் மற்றும் தமிழ் இலக்கியங்களை தனது விருப்பத் தாளாகக் கொண்டிருந்தார். அவர் தனது பள்ளி நாட்கள் முழுவதும் இந்த கல்வி ஊடகத்தில் இருந்ததால், அவர் தமிழுடன் பற்றுதலாக இருந்தார். 

க.நந்தகுமார் கூறுகிறார், “இது இலக்கண மற்றும் தொடரியல் பிழைகள் குறித்த தேவையற்ற பயத்தைத் தணித்து, எழுத்தின் சாரத்தில் கவனம் செலுத்த அனுமதித்தது”.


க. நந்தகுமாரின் முயற்சிகள்

க.நந்தகுமார் யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு முதல் முறையாக எழுதியபோது அவர் தோல்வியடைந்தார். அவரது இரண்டாவது முயற்சியில், அவர் 350வது இடத்தை பெற்றார். க.நந்தகுமாருக்கு இந்திய ரயில் போக்குவரத்து அமைப்பு (ஐ.ஆர்.டி.எஸ்) பணி வழங்கப்பட்டது. இந்த வேலையை அவரால் புறக்கணிக்க முடியவில்லை, ஏனெனில் அது ரயில்வே துறை பணி. ஐ.ஏ.எஸ் பற்றி கனவு காணும் போது அவர் ஒரு நாள் வெற்றி பெறுவார் என்று நம்பினார். எனவே அவர் ரயில்வேயில் சேர்ந்தார், தேவையான பயிற்சியைத் தொடங்கினார். 


இரவுகளில், பெரும் முயற்சி செய்து மீண்டும் படித்தார். மீண்டும் அவர் புதிய நம்பிக்கையுடனும் மிகுந்த ஆர்வத்துடனும் படித்தார், அவர் தனது மூன்றாவது முயற்சியில் 30 வது இடத்தைப் பெற்றார்.


தயாரிப்பு உத்தி

"வெற்றிக்கு எந்த ரகசியமும் இல்லை, ஏனெனில் அது  கடின உழைப்பு தவிர வேறு ஒன்றும் இல்லை", 

க. நந்தகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து குழுக்களாகப் படிப்பார். சிவில் சர்வீசஸ் தொடர்பான புத்தகங்களைத் தேடி நண்பர்கள் ஒன்றாகச் சென்று கடைகளில் வாங்கி வந்து அவை குறித்து விவாதிப்பர். செய்தித்தாள்களை மிகுந்த கவனத்துடன் படித்தார். நடப்பு விவகாரங்களைப் பொறுத்தவரை, நண்பர்கள் அவரிடம் கடந்த ஒரு வருடத்தைப் பற்றி கேள்விகளைக் கேட்பார்கள், எனவே அவர் நிறைய செய்தித்தாள்களைப் படித்தார்.


இளம் ஆர்வலர்களுக்கான அவரது உதவிக்குறிப்புகள்

  • வெற்றிக்கு ரகசியம் இல்லை.
  • வலுவான உறுதியுடனும் பொறுமையுடனும் அர்ப்பணிப்புடன் இருங்கள்.
  • செய்தித்தாளை தவறாமல் படித்து, முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.


நன்றி : Syskool

திரு.க.நந்தகுமார் இ.ஆ.ப. அவர்கள் பள்ளிக்கல்வித்துறை ஆணையராக நியமனம்...

 G.O.Rt.No: 2027, Dated: 14-05-2021...

Mr.K.Nandakumar IAS appointed as the Commissioner of School Education ...

பள்ளிக்கல்வி ஆணையராக க.நந்தகுமார் IAS நியமனம்...



🔴TNPSC செயலாளராக இருந்த நந்தகுமார் பள்ளிக்கல்வித்துறை ஆணையராக நியமனம்...


>>> Click here to Download G.O.Rt.No: 2027, Dated: 14-05-2021...




அடுத்த தேர்தலில் 'ரிமோட் ஓட்டிங்' முறை அறிமுகம்...

 அடுத்த நாடாளுமன்ற தேர்தலில், 'ரிமோட் ஓட்டிங்'முறை அறிமுகப்படுத்தப்படும்,'' என, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நம்பிக்கை தெரிவித்தார். 



டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசியதாவது: தேர்தலில் ஓட்டளிக்கும் முறையில், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளோம். இந்த தொழில்நுட்பத்தை, சென்னை, ஐ.ஐ.டி., யுடன் இணைந்து, ஆய்வு செய்து வருகிறோம். 


Remote Voting எனப்படும், இந்த புதிய தொழில்நுட்பம் வாயிலாக, தேர்தலின்போது, தங்கள் தொகுதியில் உள்ள ஓட்டுச் சாவடிக்கு நேரில் செல்லாமல், வாக்காளர்களால் ஓட்டளிக்க இயலும். நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும், அங்கு, அதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்துக்குச் சென்று, வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம். 


 இந்த புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கான சோதனை முயற்சி, இன்னும், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் துவங்க உள்ளது. நாடாளுமன்றத்துக்கு, 2024ல் நடக்கும் தேர்தலில், ரிமோட் ஓட்டிங் முறையை அறிமுகப் படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடி, வாக்காளர்களால் ஓட்டளிக்க முடியாது. 


 தேர்தலின்போது, இதற்காக அமைக்கப்படும் சிறப்பு மையத்திற்கு நேரில் சென்று, ஓட்டளிக்க வேண்டும். அந்த மையத்தில், 'பயோமெட்ரிக்' சாதனங்களும், 'வெப் கேமரா'வும் இருக்கும். அதன் வாயிலாக, வாக்காளர்களின் அடையாளம் உறுதி செய்யப்படும். அதன்பின், அவர்கள் ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

வாக்குச்சாவடி மையங்களில் கேமரா பொருத்தும் பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட தேதிகளில் பள்ளிகள் திறந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பியுள்ள சுற்றறிக்கை...

 வாக்குச்சாவடி மையங்களில் கேமரா பொருத்தும் பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட தேதிகளில் பள்ளிகள் திறந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பியுள்ள சுற்றறிக்கை...



>>> Click here to Download Chief Electoral Officer Letter No.761/ Ele-II/ 2021-11, Dated: 17-03-2021...


தேர்தல் பணிக்கான அலுவலர்கள் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில் PO-1 விரலில் மை வைக்கும் பணியையும், PO-2 Control Unit பணியையும் கூடுதலாக பார்க்க வேண்டியது குறித்த தேர்தல் ஆணையத்தின் கடித நகல்...

 தேர்தல் பணிக்கான அலுவலர்கள் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில் PO-1 விரலில் மை வைக்கும் பணியையும், PO-2 Control Unit பணியையும் கூடுதலாக பார்க்க வேண்டியது குறித்த தேர்தல் ஆணையத்தின் கடித நகல்...

Chief Electoral Officer Letter No.7000/ 2020-39, Dated: 12-03-2021 & Under Secretary of Election Commission of India Letter No.464/ TN-LA/ 2021 / SS-I (Inst)/ 393, Dated: 11-03-2021...

>>> Click here to Download Chief Electoral Officer Letter & Under Secretary of Election Commission of India Letter...


தேர்தல் நாளன்று வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறை...



 கொரோனா பரவலை தடுக்க, தேர்தல் அன்று ஓட்டளிக்க வரும் அனைவருக்கும், கையுறை வழங்கப்படும். வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளருடன் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.


அவர் அளித்த பேட்டி:

தமிழக சட்டசபை தேர்தல், ஏப்ரல், 6ல் நடக்க உள்ளது. சட்டசபை தொகுதிகளிலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியிலும், வரும், 12ம் தேதி மனு தாக்கல் துவங்குகிறது; 19ம் தேதி நிறைவடையும். கொரோனா தொற்று பரவலை தடுக்க, பல்வேறு புதிய விதிமுறைகளை, தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தி உள்ளது. வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளருடன் இருவர் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவர். தமிழகத்தில், ஜனவரி, 20 வரை, 68 ஆயிரத்து, 324 ஓட்டுச்சாவடிகள் இருந்தன.


கொரோனா பரவல் காரணமாக, ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை, 88 ஆயிரத்து, 937ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் பணியாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மொத்தம், நான்கு லட்சத்து, 79 ஆயிரத்து, 892 பேர், தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் முடிந்து, ஓட்டு எண்ணிக்கை, 76 மையங்களில், மே, 2ல் நடக்க உள்ளது. பதற்றமான ஓட்டுச்சாவடிகள் உட்பட, 50 சதவீத ஓட்டுச்சாவடிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. பணப்பட்டுவாடாவை தடுக்க, வாகன சோதனை நடத்த, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், மூன்று பறக்கும் படை, மூன்று நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


அந்த வாகனங்கள் எங்கு செல்கின்றன என்பதை கண்காணிக்க, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது. தேர்தல் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள், அந்தந்த மாவட்ட எஸ்.டி.டி., கோடு எண்ணுடன், '1950'ல் தொடர்பு கொள்ளலாம். இந்த தொலைபேசி எண், 24 மணி நேரமும் பயன்பாட்டில் இருக்கும். அனைத்து தொலைபேசி பேச்சுகளும், பதிவு செய்யப்படும். யார் புகார் தெரிவித்தாலும், சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், 1800 4252 1950 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளது. இந்த எண்ணும், 24 மணி நேரம் பயன்பாட்டில் இருக்கும்.


புகார்களை பெற, 25 பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். தேர்தல் அன்று, ஓட்டுச்சாவடியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும். ஓட்டுப்போட வரும் அனைவரும், முக கவசம் அணிந்து வர வேண்டும். ஓட்டுப்போட வரும் அனைவருக்கும் கையுறை வழங்கப்படும். அதை அணிந்து தான் ஓட்டளிக்க வேண்டும். வாக்காளர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படும். காய்ச்சல் இருந்தால், அவர்கள் மருத்துவர் சான்றிதழ் பெற்ற பின், கடைசி ஒரு மணி நேரம், உரிய பாதுகாப்பு உடைகள் அணிந்து, ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவர். பாதுகாப்பு உடைகளை, தேர்தல் கமிஷன் வழங்கும். இவ்வாறு, சத்யபிரதா சாஹு கூறினார்.


ரூ.23.75 கோடி பறிமுதல்

தமிழகத்தில், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, நேற்றுமுன்தினம் வரை, மொத்தம், 32.03 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், 23.75 கோடி ரூபாய் ரொக்கம். மேலும், 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம்; 77 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 129 கிலோ வெள்ளி; 21.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 

தமிழில், 'சி விஜில்' 

பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, 'CVIGIL' என்ற மொபைல் செயலியை, தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலியை, ஆங்கிலம், ஹிந்தி தெரிந்தோர் மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது. ஓரிரு நாளில், தமிழிலும் பயன்படுத்த வழி வகை செய்யப்படும் என, சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers are important for the development of the country - nuclear scientist pride

 ஆசிரியர்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள் - அணு விஞ்ஞானி பெருமிதம் Teachers are important for the development of the country -...