கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் 10% இட ஒதுக்கீடு, நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்...

 தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.




தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஏப்ரல்.,10 அன்று காணொலி வாயிலாக நீட் தேர்வு தொடர்பாக கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு மற்றும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை செயலாளர் சாந்தி மலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதில் தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பான நிலைப்பாடு குறித்து சில தெளிவான விஷயங்களை முன்வைத்தனர்.



அதில் தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குத் தேவை என்றும் வலியுறுத்தினர். மேலும், தமிழக அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரக்கூடிய இட ஒதுக்கீட்டு முறையை தொடர்ந்து கடைபிடிப்போம் எனவும், பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த வாய்ப்பில்லை என்பது உள்ளிட்ட விஷயங்களை விளக்கியுள்ளனர். இது குறித்த தெளிவான எழுத்துப்பூர்வமான அறிக்கையை ஒரு வாரத்தில் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...