கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

EWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
EWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உயர் சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு (EWS Reservation) செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் (The Supreme Court dismissed the petitions seeking a review of the verdict on reservation for the upper caste poor)...

 உயர் சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு (EWS Reservation) செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் (The Supreme Court dismissed the petitions seeking a review of the verdict on reservation for the upper caste poor)...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஆண்டுக்கு ரூ. 2.50 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்தும் சட்டத்திற்கு தடை கோரி வழக்கு- ஒன்றிய அரசின் நிதி துறை, சட்டத்துறை செயலாளர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு (High Court Madurai Branch orders Union Government Finance Department, Law Department Secretaries to respond to case seeking ban on tax payment law for people with Annual income above Rs.2.50 lakhs)...



 ஆண்டுக்கு ரூ. 2.50 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்தும் சட்டத்திற்கு தடை கோரி வழக்கு- ஒன்றிய அரசின் நிதி துறை, சட்டத்துறை செயலாளர்கள் பதிலளிக்க  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு (High Court Madurai Branch orders Union Government Finance Department, Law Department Secretaries to respond to case seeking ban on tax payment law for people with Annual income above Rs.2.50 lakhs)...


₹2.50 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற சட்டத்திற்கு இடைக்கால தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு


₹8 லட்சம் வருவாய் பெறும் EWS பிரிவினர் ஏழை என்றால், இது மற்றவர்களுக்கு பொருந்தாதா - மனு


High Court Madurai Branch orders Union Government Finance Department, Law Department Secretaries to respond to case seeking ban on tax payment law for people with Annual income above Rs.2.50 lakhs... 


A case in Madurai High Court seeking an interim stay on the law requiring people with an annual income of more than ₹2.50 lakh to pay income tax. 


If EWS category earning ₹8 lakh is poor, does it not apply to others - Petition





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




முதுநிலை நீட் தேர்வுக்கு (NEET - PG) விண்ணப்பித்தவர்கள் OBC & EWS இட ஒதுக்கீடு(Reservation) கோர விரும்பினால் 16ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் - தேசிய தேர்வு வாரியம்(NBE) அறிவிப்பு...

 


முதுநிலை நீட் தேர்வுக்கு (NEET - PG) விண்ணப்பித்தவர்கள் OBC & EWS இட ஒதுக்கீடு கோர விரும்பினால் 16ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம்  - தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு...


Attention Candidates of NEET-UG and NEET-PG: It has been decided by the Government of India to implement 27% OBC reservation (Non-Creamy Layer) and 10% EWS reservation in 15% UG and 50% PG All India Quota seats (MBBS/BDS and MD/MS/MDS) (Contributed by the State/UTs).


The National Board of Examinations (NBE) said it will reopen the NEET PG 2021 registration and application form correction window for August 16 to August 20 to help candidates avail benefits of recent government decisions. The National Board of Examinations has recently extended the cut off date for completion of internship to September 30. Medical internship is one of the eligibility requirement for NEET PG and therefore, the application window will be reopened so that these new candidates can apply. 


“Desirous candidates who are completing their internship during 01.07.2021 to 30.09.2021 and are fulfilling all other criteria as prescribed in the Information Bulletin of NEET-PG 2021 can apply for NEET-PG 2021 during this window,” the NBE said.


“Such candidates shall be able to choose the preferred state for taking the examination. NBEMS shall allocate them the test city as per availability within the state chosen,” it added.


The centre has recently announced the extension of OBC and EWS quotas to all medical seats under the all India quota. Candidates who have already applied for NEET PG 2021 can edit their category status during this window.


“Candidates who are already registered for NEET-PG 2021 examination can change their category and EWS status during this window, if they desire to do so. The window will not allow change to any other information already provided in the application form,” the NBE said.


The edit and fresh application windows will be available at nbe.edu.in...



அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இந்தாண்டு முதல் மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் EWS (OC) 10% இடஒதுக்கீடு...

 


சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நடப்பு ஆண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பு பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கான முக்கிய முடிவை எடுத்துள்ளது.


இதுதொடர்பாக கடந்த 26ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த பிரச்சினைக்கு ஒரு பயனுள்ள தீர்வை அளிக்க சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, இந்த முடிவு அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, எம்.பி.பி.எஸ், எம்.டி, எம்.எஸ், டிப்ளமோ, பிடிஎஸ், எம்டிஎஸ் படிப்புகளில் நடப்பு கல்வியாண்டு முதல் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த முடிவால் ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை மருத்துவப் படிப்பில் கிட்டத்தட்ட 1,500 இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், முதுகலை பட்டப்படிப்பில் 2,500 இதரபிற்படுத்தப்பட்ட மாணவர்களும், இளங்கலை மருத்துவப் படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 550 முன்னேறிய வகுப்பு மாணவர்களும், முதுகலைப் பட்டப்படிப்பில் சுமார் 1,000 பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பு மாணவர்களும் பலன் பெற உள்ளனர்.


இதனால், மொத்தமாக கிட்டதட்ட 5,550 மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் பின்தங்கிய பிரிவினருக்கும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய, முன்னேறிய வகுப்பு பிரிவினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



தமிழகத்தில் 10% இட ஒதுக்கீடு, நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்...

 தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.




தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஏப்ரல்.,10 அன்று காணொலி வாயிலாக நீட் தேர்வு தொடர்பாக கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு மற்றும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை செயலாளர் சாந்தி மலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதில் தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பான நிலைப்பாடு குறித்து சில தெளிவான விஷயங்களை முன்வைத்தனர்.



அதில் தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குத் தேவை என்றும் வலியுறுத்தினர். மேலும், தமிழக அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரக்கூடிய இட ஒதுக்கீட்டு முறையை தொடர்ந்து கடைபிடிப்போம் எனவும், பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த வாய்ப்பில்லை என்பது உள்ளிட்ட விஷயங்களை விளக்கியுள்ளனர். இது குறித்த தெளிவான எழுத்துப்பூர்வமான அறிக்கையை ஒரு வாரத்தில் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளனர்.

மாணவர் சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு (EWS) 10% இடஒதுக்கீடு...



 அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்புக்கான மாணவர்சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கும் 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். பாடப் பிரிவுகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடப்பு கல்விஆண்டில் தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. 


இதனால்,எம்.டெக். பிரிவில் உயிரி தொழில்நுட்பவியல், கணக்கீட்டு தொழில்நுட்பம் ஆகிய 2 படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்துவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.


இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடத்துவதாக அண்ணா பல்கலைக்கழகம் உறுதியளித்தது. 


இந்நிலையில், எம்.டெக். படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் 49.5 சதவீதத்துடன், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கும் (EWS) 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, உயிரி தொழில்நுட்ப வியல் பிரிவில் 3 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதேநேரம், கணக்கீட்டு தொழில்நுட்பம் பிரிவில் தகுதியான மாணவர்கள் (EWS பிரிவு) யாரும் இல்லாததால் அதில்இடங்கள் எதுவும் ஒதுக்கப்பட வில்லை.


விதிமீறல்

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் கூறும்போது, “மத்திய அரசு கொண்டுவந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை கல்வி நிறுவனங்களில் அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு கொள்கை ரீதியாக முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில், மாநில பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடத்துவது விதிமீறல்.


தமிழகத்தில் மிகவும் குறை வான எண்ணிக்கையில் இருக்கிற, இடஒதுக்கீட்டில் வராத பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பிற பிரிவு மாணவர்களின் வாய்ப்பை பறிக்கும். இதை தமிழக அரசு உடனே கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்றனர்.


இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக மூத்த அதிகாரிகளிடம் கேட்டபோது, “மத்திய அரசின் இட ஒதுக்கீடு விதிமுறைப்படிதான், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வருகிறது. எனவே, இதில் விதிமீறல் எதுவும் இல்லை” என்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள்  - தமிழ்...