கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10% இட ஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
10% இட ஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உயர் சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு (EWS Reservation) செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் (The Supreme Court dismissed the petitions seeking a review of the verdict on reservation for the upper caste poor)...

 உயர் சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு (EWS Reservation) செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் (The Supreme Court dismissed the petitions seeking a review of the verdict on reservation for the upper caste poor)...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தமிழகத்தில் 10% இட ஒதுக்கீடு, நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்...

 தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.




தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஏப்ரல்.,10 அன்று காணொலி வாயிலாக நீட் தேர்வு தொடர்பாக கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு மற்றும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை செயலாளர் சாந்தி மலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதில் தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பான நிலைப்பாடு குறித்து சில தெளிவான விஷயங்களை முன்வைத்தனர்.



அதில் தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குத் தேவை என்றும் வலியுறுத்தினர். மேலும், தமிழக அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரக்கூடிய இட ஒதுக்கீட்டு முறையை தொடர்ந்து கடைபிடிப்போம் எனவும், பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த வாய்ப்பில்லை என்பது உள்ளிட்ட விஷயங்களை விளக்கியுள்ளனர். இது குறித்த தெளிவான எழுத்துப்பூர்வமான அறிக்கையை ஒரு வாரத்தில் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளனர்.

மாணவர் சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு (EWS) 10% இடஒதுக்கீடு...



 அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்புக்கான மாணவர்சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கும் 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். பாடப் பிரிவுகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடப்பு கல்விஆண்டில் தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. 


இதனால்,எம்.டெக். பிரிவில் உயிரி தொழில்நுட்பவியல், கணக்கீட்டு தொழில்நுட்பம் ஆகிய 2 படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்துவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.


இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடத்துவதாக அண்ணா பல்கலைக்கழகம் உறுதியளித்தது. 


இந்நிலையில், எம்.டெக். படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் 49.5 சதவீதத்துடன், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கும் (EWS) 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, உயிரி தொழில்நுட்ப வியல் பிரிவில் 3 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதேநேரம், கணக்கீட்டு தொழில்நுட்பம் பிரிவில் தகுதியான மாணவர்கள் (EWS பிரிவு) யாரும் இல்லாததால் அதில்இடங்கள் எதுவும் ஒதுக்கப்பட வில்லை.


விதிமீறல்

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் கூறும்போது, “மத்திய அரசு கொண்டுவந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை கல்வி நிறுவனங்களில் அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு கொள்கை ரீதியாக முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில், மாநில பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடத்துவது விதிமீறல்.


தமிழகத்தில் மிகவும் குறை வான எண்ணிக்கையில் இருக்கிற, இடஒதுக்கீட்டில் வராத பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பிற பிரிவு மாணவர்களின் வாய்ப்பை பறிக்கும். இதை தமிழக அரசு உடனே கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்றனர்.


இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக மூத்த அதிகாரிகளிடம் கேட்டபோது, “மத்திய அரசின் இட ஒதுக்கீடு விதிமுறைப்படிதான், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வருகிறது. எனவே, இதில் விதிமீறல் எதுவும் இல்லை” என்றனர்.

🍁🍁🍁 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசு முடிவு...

 


புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார். மேலும் புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns