கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

12 மணிநேரம் வேலையா..? ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்குமா புதிய கொள்கை.. உண்மை என்ன...?

 


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு உள்ள புதிய Wage Code கொள்கையின் மூலம் ஊழியர்களின் வேலை நேரம், சம்பள கணக்கீட்டு, பிஎப் தொகை, கிராஜுவிட்டி ஆகியவை முக்கிய மாற்றங்களை அடைய உள்ளது. இதில் 



குறிப்பாக ஊழியர்களின் வேலை நேரத்தில் செய்யப்பட்டு உள்ள மாற்றங்கள் ஊழியர்கள் மத்தியில் அதிகளவிலான பயத்தையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.



புதிய ஊதிய குறியீடு மசோதா

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய ஊதிய குறியீடு மசோதாவில் மக்களுக்குப் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது, குறிப்பாகத் தற்போது இருக்கும் 9 மணிநேர வேலை நேரத்தை 12 மணிநேரம் உயர்த்துவது குறித்து ஊழியர்கள் மட்டத்தில் அச்சம் எழுந்துள்ளது.



4 நாட்கள் மட்டுமே வேலை

உலக நாடுகளில் பல நிறுவனங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை அமல்படுத்திப் பெரிய அளவிலான வர்த்தக மாற்றத்தைச் செய்துள்ளது. இது ஊழியர்களுக்கும் சரி, நிறுவனங்களுக்கும் சரி அதிகளவிலான லாபம் அளிப்பதாக ஆய்வுகள் கூறும் நிலையில், இந்தியாவிலும் இதுபோன்ற முறையை அமல்படுத்த நிறுவனங்களுக்கு இந்தப் புதிய ஊதிய குறியீடு மசோதா மூலம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.



12 மணிநேரம் வேலைக்கு அனுமதி

தற்போது நடைமுறையில் தினமும் 9 மணிநேரம் வேலை என்பதில் எவ்விதமான மாற்றமும் இல்லை, ஆனால் ஒரு நிறுவனம் விரும்பினால் ஒரு நாளுக்கு 12மணிநேரம் ஊழியர்களைப் பணியில் அமர்த்தலாம். அப்படி அமர்த்து போதும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலைநாட்களாக இருக்க வேண்டும் என்பதையும் இந்த மசோதாவில் தெளிவுபடுத்தியுள்ளது.



ஊழியர்களுக்குச் சாதகமானது

இதன் மூலம் நிறுவனங்களுக்குக் கூடுதலாகத் தினமும் 3 மணிநேரம் ஊழியர்களின் பணிகளைப் பெற முடியும், அதேநேரத்தில் ஊழியர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை பெற முடியும். இதனால் ஊழியர்களின் Work Life Balance மேம்படும்.



30 நிமிடம் இடைவேளை கட்டாயம்

இதே ஊதிய குறியீடு மசோதா கொள்கையில் ஊழியர்களின் நலனுக்காக 5 மணி நேரத்திற்குக் கட்டாயம் 30 நிமிடம் இடைவேளை அளிக்க வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் 5 மணிநேரத்திற்கும் அதிகமான தொடர் வேலை செய்யும் முறையைத் தடை செய்துள்ளது.



ஓவர்டைம் கணக்கீடு

மேலும் தற்போது நடைமுறையில் 15 முதல் 30 நிமிடத்திற்குள் கூடுதலாக வேலை செய்தால் ஓவர்டைம் கணக்கிடப்படாது. 30 நிமிடத்திற்கு அதிகமாக வேலை செய்தால் மட்டுமே கூடுதல் பணிநேரம் கணக்கிடப்படும்.



இப்புதிய ஊதியக் குறியீடு மசோதாவில் 15 நிமிடத்திற்கு அதிகமாக ஒரு நிமிடம் பணியாற்றினாலே 30 நிமிடத்திற்கான ஓவர்டைம் கணக்கிடப்பட வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.



அடிப்படை சம்பள கணக்கீடு

மேலும் ஒரு ஊழியரின் மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமான தொகையை அடிப்படை சம்பளமாகக் கணக்கிடப்பட வேண்டும் எனப் புதிய உத்தரவை புதிய ஊதிய குறியீடு மசோதாவில் அறிவிக்கப்பட்டு உள்ளது.



Take Home Salary அளவு குறையும்

இந்தச் சம்பள கணக்கீட்டு முறையில் ஏற்பட்டு உள்ள மாற்றத்தால் ஊழியர்களுக்கான பிஎப் மற்றும் கிராஜுவிட்டி ஆகியவை அதிகரிக்கும். இது ஓய்வுபெற்றும் போது பெரிய அளவில் உதவும், ஆனால் அதேவேளையில் பிஎப் மற்றும் கிராஜுவிட்டிக்கு அதிகப் பணம் பிடித்தம் செய்யப்படுவதால் டேக் ஹோம் சேலரி அளவீட்டில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும்.



ஏப்ரல் 1 முதல் அமலாக்கம்

இப்புதிய கொள்கை மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட வேண்டும், ஆனால் மாநில அரசுகளும், நிறுவனங்களும் முழுமையாகத் தயாராக நிலையிலும், கொரோனா பாதிப்பால் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ள சூழ்நிலையிலும் கால தாமதம் ஆகி வருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.3.2 - Updated on 31-07-2025

  தற்போது TNSED Schools  App-ல் Health and wellbeing - Students health screening module changes பதிவு செய்வதற்கான  புதிய அப்டேட் வெளியாகியுள...