கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Employees லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Employees லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Ready to make Chief Minister Stalin the Leader of Opposition in 2026 - TNGEA



2026-ல் முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்கட்சித் தலைவராக்க தயார் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அறிக்கை


Ready to make Chief Minister Stalin the Leader of Opposition in 2026 - Tamil Nadu Government Employees Association Statement



>>> அறிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



  "2026-ல் முதல்வர் ஸ்டாலினை எதிர்கட்சித் தலைவராக்க தயார்" - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்


#MKStalin | #DMK | #TNGovt | #TNGEA


💢 முதல்வருக்கு 2026 தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசளிக்க தயார்’ - அரசு ஊழியர்கள் சங்கம்


🔥 மதுரை: “எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அதை அவருக்கு பரிசளிக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தயாராக இருக்கிறோம்” என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


🔥இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், “கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடிய இடத்திற்கெல்லாம் தேடி வந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘தேனாறும், பாலாறும் ஓடும்’ என்றவாறு தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்தார். 


🔥 2021-ல் சட்டமன்றத் தேர்தலின்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தார்.


🔥ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளாகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக, 24 மாதகால அகவிலைப்படி, ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம் ஆகியவற்றை முடக்கி, அரசு ஊழியர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்தது தான் அவரின் சாதனை.


தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்த பள்ளிக் கல்வித் துறை ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் நிதிசாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார்.


🔥 உண்மையிலேயே நிதி நிலை மோசமாக உள்ளது என்றால், நிதி நிலை சரியாகும் வரை எங்ளுக்கு ஊதியம் வேண்டாம் என்று தமிழ்நாடு முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பார்களா? அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த சிபிஎஸ் சந்தா தொகை தமிழ்நாடு அரசால் தவறுதலாக கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது.


🔥 போக்குவரத்துத்துறை ஊழியர்கள் தற்போது ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காமல் பரிதவிக்கும் நிலை அரசு ஊழியர்களுக்கும் வரப்போகிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அதை அவருக்கு பரிசளிக்க தயாராக இருக்கிறோம் என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தொடர்பான விதிகள் (Rules related to Tamil Nadu Government Employees)...



தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தொடர்பான விதிகள் (Rules related to Tamil Nadu Government Employees)...


 அரசு ஊழியர் யார்?

தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 பிரிவு.2(3)-ன் படி, ஒரு அரசு ஊழியர் என்பவர் அரசு தன் ஆட்சியின் காரியங்களை ஆற்ற பணி அல்லது பதவிக்கு அமர்த்தும் நபர் என வரையறுக்கபடுகின்றது. இது இந்திய ஆட்சிப் பணியிலிருந்து (I.A.S) கடைநிலை ஊழியர் வரை பொருந்தும்.


”Officer” என்பது அலுவலர் அதாவது அலுவல்களை செய்பவர் ஆவார். ”Minister’ என்பது செயலாற்றுப் பணியாளர், என பொருள்படும். ”அமைச்சு’ என்றால் பணி செய்தல், உதவியாயிருத்தல், கொடுத்துதவுதல் என பொருள். அதிகாரி என்றால் அரசு நிர்வாகத்தில் ஆணைகளை நடைமுறைபடுத்தும் பொறுப்பிலுள்ள அலுவலர் என பொருள். ஆக அனைத்தும் மக்களுக்கு பணி செய்யவே ஒழிய, அதிகாரி என அதிகாரம் செய்தல் சட்ட விரோதம் ஆகும்.


தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்: (Classification of Government Employees)

அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியத்தை (Grade Pay) அடிப்படையாகக் கொண்டு அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை கீழ்கண்டவாறு வகைப்படுத்துகிறது..

1. தர ஊதியம் (Grade Pay) ரூபாய் 6,600ம் அதற்கு மேலும் பெறும் அரசு அலுவலர்களை வகை l (கிரேடு) என்றும், (முன்பு A Class)

2. தர ஊதியம் ரூபாய் 4,400 முதல் 6,600க்குள் பெறும் அரசு அலுவலர்கள்/ஆசிரியர்களை வகை II (கிரேடு) என்றும், ( முன்பு B Class)

3. தர ஊதியம் ரூபாய் 4,400க்கு கீழ் பெறும் அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களை வகை III & lV (கிரேடு) என்றும் பிரிக்கப்படுகிறது. (முன்பு C & D Class).


 அரசு ஊழியர் பெறும் சம்பளம்

அடிப்படை சம்பளம்( Basic salary), பஞ்சப்படி எனும் அகவிலைப்படி(Dearness Allowances), பயணப்படி (Travelling Allowances), வீட்டுவாடகைப்படி (House rent allowance), அரசு ஊழியர் ஆரோக்கிய இன்சூரன்ஸ் திட்டம் (Govt. Employees Health Fund Scheme), வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பு (provident fund) பொங்கல் பரிசு (Pongal Gift), விழா முன்பணம்(Festival Advance), மருத்துவப்படி (Medical Allowance) விடுப்பு பணம்(Encashment of Leave) ஓய்வூதியம், இன்னும் பல


 அரசு ஊழியர்களுக்கான செலவு

மாநில அரசின் மொத்த வருவாயில் மாநில வரிவருவாய் ரூ. 99,590.13 கோடி வரி அல்லாத ஏனைய வருவாய் 12,318. கோடியில் ரூ.66,908 அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதிற்கும் செலவிடப்படுகிறது.


 அரசின் முக்கிய துறைகள்

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை, வேளாண்மை துறை,கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை

எரிசக்தி, சுற்றுச்சூழல் (ம) வனத்துறை, நிதி துறை, கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை

மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறை, உயர்கல்வி துறை,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழில் துறை, தகவல் தொழில் நுட்பவியல் துறை, தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை, சட்டத்துறை, நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை, திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொது துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, பள்ளிக் கல்வித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, சுற்றுலா,பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை, போக்குவரத்து துறை, இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, பொது (தேர்தல்கள்) துறை,பொதுப்பணி துறை. இத்தனை துறைகளில் ஊழியர்கள் உண்டு.


 தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 சொல்வது என்ன?

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடை பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்விக்கூட ஆசிரியர்கள் மற்றும், மாநில அரசிடம் ஊதியம் பெறும் சட்ட சபை உறுப்பினர்களும், அமைச்சர்களும், வாரியத்தலைவர்களும் அரசு ஊழியர்கள் ஆவார். எனவே இவர்களும் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு உட்பட்டவர்களே.


*விதி-3

எந்த அரசு ஊழியரும் வரதட்சணை கொடுக்கவோ, பெறவோ கூடாது.


*விதி-3-A

எந்த அரசு ஊழியரும் தனியார்களின் கௌரவ விழா, ஓய்வு விழா, நிறுவனங்கள், பொதுமக்கள் அவர்களுடன் புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களை அரசின் முன் அனுமதியின்றி செய்தல் கூடாது.


*விதி-5

எந்த அரசு ஊழியரும் பங்குச் சந்தையில் ஈடுபடுதல், வேறு முதலீடுகள் செய்தல், தன் சார்பாக குடும்ப உறுப்பினர்களை ஈடுபடச் செய்தல், எந்த தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபடுதல் போன்றவற்றை செய்தல் கூடாது.


*விதி-6 (4) (aa)

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி யாருக்கும் 10,000 ரூபாய்க்கு மேல் அசையும் சொத்தை குத்தகை, அடமானம், வாங்குதல், விற்றல், கொடை செய்தல், பரிமாற்றம் செய்தல் போன்றவற்றை அரசின் அனுமதியின்றி செய்தல் கூடாது.


*விதி-7

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி எந்த வியாபாரம், தொழிலில் ஈடுபடக்கூடாது.


*விதி-11

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி நாளிதழ், தொலைக்காட்சி, வானொலி பிரசுரம் போன்றவற்றில் ஈடுபடுதல் கட்டுரை வரைதல் செய்தல் கூடாது.


*விதி-12

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி பொதுவிழாவில் நடந்த விசயங்களை, கருத்தை சொல்லக் கூடாது. அரசின் கொள்கைகள், அரசு பரிபாலனம், அரசின் மற்ற அரசுகளுடனான உறவுகள் பற்றி பேசுதல் கூடாது. அலுவலகம் சாராத கூட்டங்களில் கலந்து கொள்ளுதல், தலைமை ஏற்றல் கூடாது.


*விதி-14

எந்த அரசு ஊழியரும் தன் குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் ஈடுபடுதலை தடுக்க வேண்டும்.


*விதி-14-A

எந்த அரசு ஊழியரும் மதம், இனம், இடம், பிறந்த இடம், குடியிருப்பு, மொழி, ஜாதி சம்மந்தமான எந்த அமைப்பிலும் உறுப்பினராகவோ, சம்மந்தப்பட்டோ இருத்தல் கூடாது.


*விதி-17

எந்த அரசு ஊழியரும் நெருங்கிய சொந்தங்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியவோ, தன் பணி சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தில் பணியமர்ந்திருப்பதையோ அனுமதிக்கக் கூடாது.


*விதி-20

எந்த அரசு ஊழியரும் முழுமனதுடன், முழு ஈடுபாட்டுடன் பணியில் இருக்க வேண்டும்.


*விதி-20-B

எந்த அரசு ஊழியரும் பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொந்திரவு கொடுத்தல், பாலியல் ஆசையை முன்மொழிதல், தொடுதல், கேட்டல், வேண்டல், சைகை, ஆபாசப்படம் காட்டுதல் போன்ற தேவையற்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது.


*பிரிவு-21

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி அலுவலக நேரத்தில் அல்லது அலுவலின் போது குடித்திருக்கக் கூடாது.


*இதையெல்லாம் ஊழியர்கள் கடைபிடிக்கிறார்களா?

*அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா! சட்டம் சொல்வதென்ன?

அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 19(1)(c) அமைப்புகள் மற்றும் சங்கங்கள் வைத்துக் கொள்ள உரிமை அளிக்கிறது.


ஆனால் ஷரத்து 19(4) இன் படி ”இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு அல்லது பொது ஒழுங்கு அல்லது ஒழுக்கத்தின் மீது அக்கறை கொண்டு, சொல்லப்பட்ட உரிமையில் நியாயமான கட்டுப்பாட்டை விதிக்கக் கூடிய நடைமுறையிலுள்ள சட்டம் எதையுமோ அரசு இயற்றிய உட்கூறுகள் பாதிக்கக் கூடாது.


இதை P.N.Ramasamy Vs The Commissioner of Coimbatore AIR 1968 (Masdras) 383 Per Ramakrishna J.- என்ற வழக்கில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.


O.K.Ghosh Vs.E.X.Joseph, AIR 1963 SC 812 என்ற வழக்கில் சங்கங்கள் அமைப்புகளுக்கு உரிமை கொடுக்கப்பட்ட உரிமை ஒரு உத்திரவாதமான உரிமை என கொள்ள முடியாது, தகுந்த காரணங்கள் இருப்பின் அவை திரும்பப் பெறப்படும் என் தீர்ப்பளித்துள்ளது.


தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 விதி-16 இன் படி எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி சங்கத்தில் அமைப்பில் உறுப்பினராக இருக்கக் கூடாது. விதி-22-A இன் படி அலுவலக நேரத்தில், அலுவலக வளாகத்தில் ஊர்வலம் கூட்டங்கள் நடத்தகூடாதென சொல்லப்பட்டுள்ளது.


மேலும் All India Bank Employees’s Association Vs. National Industrial Tribunal என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம், “ வேலைநிறுத்தம் என்பது அரசியலமைப்பு சட்டம் ஷரத்து-19-இன் படி அடிப்படை உரிமையில்லை, ஊழியர்கள் தங்கள் கோரிக்கையை குறிப்பிட்ட எல்லைக்குள் வெளிப்படுத்தலாம் எனவும், தங்கள் குறைகளை வேலைநிறுத்தல் என்ற உரிமையை கோரமுடியாது எனவும் தீர்ப்பளித்தது.


மேலும், ஊழியர்கள், அலுவலர்கள் வரும் நேரம், செல்லும் நேரம், அலுவலர்கள் கள ஆய்வு செல்லும் இடம் நேரம்,என அனைத்து பணிகளைக் குறிப்பிடும் மாவட்ட அலுவல கையேடு(District Office Manual), அரசு ஊழியர் நடத்தை விதிகள்(the tamil nadu government servants' conduct rules, 1973), தமிழ்நாடு அரசு சார்நிலை ஊழியர்கள் பணி விதிகள்(tamilnadu government subordinate service rules) என ஒவ்வொரு துறைக்கும் உள்ள பணிவிதிகளை அனைவரும் தெரிந்து அதன்படி நடந்தால் அரசு இயந்திரம் சிறக்கும்


 நடத்தை விதிகள்

தமிழக அரசு அலுவலர்களுக்கான சட்ட விதிமுறைகள், அரசாணைகளுடன் குறிப்புகள்


*நடத்தை விதிகள் என்றால் என்ன?

அரசுப் பணியாளர்களுக்காக அரசு உருவாக்கியுள்ளநடைமுறைகள் மற்றும் விதிகளை அவர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
சொத்து வாங்குதல், விற்றல், நிதி ஆதாரங்கள் உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசுக்கு முறைப்படி தெரிவித்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை பணிபுரிபவர்கள் கடைபிடிப்பதற்காக தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள், 1976 உருவாக்கப்பட்டது.இந்த விதிகள் அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும்.

தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதி 2(5) &  (6) ன் கீழ்க்கண்டவர்கள் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவார்கள். தந்தை , வளர்ப்பு தந்தை , தாய் , வளர்ப்பு தாய் , கணவன், மனைவி , மகன் , வளர்ப்பு மகன், மகள் , வளர்ப்பு மகள், சகோதரன், சகோதரி, மனைவியின் தாய்,  மற்றும் தந்தை/கணவரின் தாய் மற்றும் தந்தை/சகோதரனின் மனைவி, சகோதரியின் கணவர், மகளின் கணவர், மகனின் மனைவி, இந்த உறவுமுறைகள் அனைத்தும் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியரின் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்படுவர். 


உயர்கல்வி பெறுவது தொடர்பான அரசாணைகள்…

1) G.O.MS.200 P&AR dt 19.4.96

     உயர்கல்வி பயில அனுமதி கோரிய அரசு ஊழியரின் விண்ணப்பத்தின் மீது 15 நாட்களுக்குள் துறைத்தலைவா் அனுமதிதராவிட்டால், அனுமதி அளித்ததாக கருதி மேல்படிப்பை தொடரலாம்.

2) GOVT Leter no 14735/s/10/ dt 08.042010

        தகுதிகாண் பருவத்தில் உள்ள அரசுஊழியர் தகுதிகாண் பருவத்திற்குரிய
அனைத்து தகுதிகளையும் பெற்றும் துறைதலைவரால் தகுதி பெற்றநாளிலிருந்து
ஆறுமாதத்திற்குள் தகுதிகாண் பருவம் நிறைவு செய்து ஆணைகள் பிறப்பிக்கப்பட வில்லை என்றால், தகுதிகாண் பருவம் அதுவாகவே நிறைவடைந்ததாக அந்த அரசுப்பணியாளா் கருதிகொள்ளலாம்.

3) G.O.MS.NO1988/Public(service-N)dept dt 04.4.75
             துறைத்தலைவரால் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு அலுவலருக்கு மேல்முறையீடு செய்த ஒரு அரசுஊழியரின்  விண்ணப்பத்தின் மீது ஆறு மாதத்திற்குள் மேல்முறையீட்டு அலுவலா் இறுதி ஆணை பிறப்பிக்கவேண்டும்.

4) G.O.MS.112 P&AR
       அசையா சொத்து வாங்க அனுமதி கோரி விண்ணப்பித்த அரசு ஊழியரின் விண்ணப்பத்தின்மீது ஆறுமாதத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும். அவ்வாரு ஆறுமாதத்திற்குள் துறைத்தலைவா் அனுமதி அளிக்கவில்லை, என்றால் அனுமதி பெற்றதாக கருதப்படும்.


அரசு ஊழியர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.1லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு ரேஷன் பொருள் கிடையாது என்பது போன்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என தமிழ்நாடு அரசு விளக்கம்(Government of Tamilnadu interprets reports that Government employees and those with an annual income of more than Rs 1 lakh do not have rations are completely untrue) செய்தி வெளியீடு எண்: 879, நாள்: 13-10-2021...



 அரசு ஊழியர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.1லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு ரேஷன் பொருள் கிடையாது என்பது போன்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என தமிழ்நாடு அரசு விளக்கம்(Government of Tamilnadu interprets reports that Government employees and those with an annual income of more than Rs 1 lakh do not have rations are completely untrue) செய்தி வெளியீடு எண்: 879, நாள்: 13-10-2021...


>>> செய்தி வெளியீடு எண்: 879, நாள்: 13-10-2021...



12 மணிநேரம் வேலையா..? ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்குமா புதிய கொள்கை.. உண்மை என்ன...?

 


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு உள்ள புதிய Wage Code கொள்கையின் மூலம் ஊழியர்களின் வேலை நேரம், சம்பள கணக்கீட்டு, பிஎப் தொகை, கிராஜுவிட்டி ஆகியவை முக்கிய மாற்றங்களை அடைய உள்ளது. இதில் 



குறிப்பாக ஊழியர்களின் வேலை நேரத்தில் செய்யப்பட்டு உள்ள மாற்றங்கள் ஊழியர்கள் மத்தியில் அதிகளவிலான பயத்தையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.



புதிய ஊதிய குறியீடு மசோதா

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய ஊதிய குறியீடு மசோதாவில் மக்களுக்குப் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது, குறிப்பாகத் தற்போது இருக்கும் 9 மணிநேர வேலை நேரத்தை 12 மணிநேரம் உயர்த்துவது குறித்து ஊழியர்கள் மட்டத்தில் அச்சம் எழுந்துள்ளது.



4 நாட்கள் மட்டுமே வேலை

உலக நாடுகளில் பல நிறுவனங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை அமல்படுத்திப் பெரிய அளவிலான வர்த்தக மாற்றத்தைச் செய்துள்ளது. இது ஊழியர்களுக்கும் சரி, நிறுவனங்களுக்கும் சரி அதிகளவிலான லாபம் அளிப்பதாக ஆய்வுகள் கூறும் நிலையில், இந்தியாவிலும் இதுபோன்ற முறையை அமல்படுத்த நிறுவனங்களுக்கு இந்தப் புதிய ஊதிய குறியீடு மசோதா மூலம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.



12 மணிநேரம் வேலைக்கு அனுமதி

தற்போது நடைமுறையில் தினமும் 9 மணிநேரம் வேலை என்பதில் எவ்விதமான மாற்றமும் இல்லை, ஆனால் ஒரு நிறுவனம் விரும்பினால் ஒரு நாளுக்கு 12மணிநேரம் ஊழியர்களைப் பணியில் அமர்த்தலாம். அப்படி அமர்த்து போதும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலைநாட்களாக இருக்க வேண்டும் என்பதையும் இந்த மசோதாவில் தெளிவுபடுத்தியுள்ளது.



ஊழியர்களுக்குச் சாதகமானது

இதன் மூலம் நிறுவனங்களுக்குக் கூடுதலாகத் தினமும் 3 மணிநேரம் ஊழியர்களின் பணிகளைப் பெற முடியும், அதேநேரத்தில் ஊழியர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை பெற முடியும். இதனால் ஊழியர்களின் Work Life Balance மேம்படும்.



30 நிமிடம் இடைவேளை கட்டாயம்

இதே ஊதிய குறியீடு மசோதா கொள்கையில் ஊழியர்களின் நலனுக்காக 5 மணி நேரத்திற்குக் கட்டாயம் 30 நிமிடம் இடைவேளை அளிக்க வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் 5 மணிநேரத்திற்கும் அதிகமான தொடர் வேலை செய்யும் முறையைத் தடை செய்துள்ளது.



ஓவர்டைம் கணக்கீடு

மேலும் தற்போது நடைமுறையில் 15 முதல் 30 நிமிடத்திற்குள் கூடுதலாக வேலை செய்தால் ஓவர்டைம் கணக்கிடப்படாது. 30 நிமிடத்திற்கு அதிகமாக வேலை செய்தால் மட்டுமே கூடுதல் பணிநேரம் கணக்கிடப்படும்.



இப்புதிய ஊதியக் குறியீடு மசோதாவில் 15 நிமிடத்திற்கு அதிகமாக ஒரு நிமிடம் பணியாற்றினாலே 30 நிமிடத்திற்கான ஓவர்டைம் கணக்கிடப்பட வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.



அடிப்படை சம்பள கணக்கீடு

மேலும் ஒரு ஊழியரின் மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமான தொகையை அடிப்படை சம்பளமாகக் கணக்கிடப்பட வேண்டும் எனப் புதிய உத்தரவை புதிய ஊதிய குறியீடு மசோதாவில் அறிவிக்கப்பட்டு உள்ளது.



Take Home Salary அளவு குறையும்

இந்தச் சம்பள கணக்கீட்டு முறையில் ஏற்பட்டு உள்ள மாற்றத்தால் ஊழியர்களுக்கான பிஎப் மற்றும் கிராஜுவிட்டி ஆகியவை அதிகரிக்கும். இது ஓய்வுபெற்றும் போது பெரிய அளவில் உதவும், ஆனால் அதேவேளையில் பிஎப் மற்றும் கிராஜுவிட்டிக்கு அதிகப் பணம் பிடித்தம் செய்யப்படுவதால் டேக் ஹோம் சேலரி அளவீட்டில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும்.



ஏப்ரல் 1 முதல் அமலாக்கம்

இப்புதிய கொள்கை மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட வேண்டும், ஆனால் மாநில அரசுகளும், நிறுவனங்களும் முழுமையாகத் தயாராக நிலையிலும், கொரோனா பாதிப்பால் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ள சூழ்நிலையிலும் கால தாமதம் ஆகி வருகிறது.


தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு...

 


தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


காலமுறை ஊதியம் பெற்று வரும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் குறைந்தபட்சமாக 2556 ரூபாயும், அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாயும் சம்பள விகிதங்களில் கூடுதலாக பெறுவார்கள்.


அதே போன்று கட்டுனர்கள் குறைந்தபட்சமாக 2337 ரூபாயும், அதிகபட்சமாக 3500 ரூபாயும் கூடுதலாக பெறுவார்கள்.


ரேஷன் கடைகளில் புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு தொகுப்பு ஊதியத்தையும் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.


ஊதிய உயர்வின் மூலம் 23 ஆயிரத்து 793 பேர் பயன்பெறுவார்கள் என்றும், 19 முதல் 24 சதவீதம் வரை கூடுதல் நிதிப்பயன் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


>>>  ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு - அரசாணை எண்: 24, நாள்: 22-02-2021...


அரசாணை எண்: 24, நாள்: 22-02-2021 - ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தமிழக அரசு அறிவிப்பு...

 


G.O.No: 24, Dated: 22-02-2021 - Pay Fixation to Ration Shop Employees...

>>> அரசாணை எண்: 24, நாள்: 22-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...