கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Workings Hours லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Workings Hours லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதுச்சேரியில்‌ அரசுப் பள்ளிகளுக்கான நேரம் மாற்றம் - 15-07-2024 முதல் நடைமுறை...



புதுச்சேரியில்‌ அரசுப் பள்ளிகளுக்கான நேரம் மாற்றம் - வருகிற‌ 15ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது...


புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. 


இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் நேரங்களை மாற்றி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.


அதன்படி, காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12.25 மணிக்கு இடைவேளை விடப்படுகிறது. 


அதன் பிறகு 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை பள்ளிகள் செயல்பட உள்ளன.


இந்த புதிய நடைமுறை வருகிற 15ம் தேதி காமராஜர் பிறந்தநாள் அன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐஐடி மாணவர்களுக்கு வகுப்பறை நேரம் குறைப்பு...


ஐ.ஐ.டி., IIT மாணவர்களுக்கு வகுப்பறை நேரம் குறைப்பு...




சமீபத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள் 195 / 210 நாட்களிலிருந்து 220 நாட்கள் என அதிகரித்து அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது...


பள்ளிக்கல்வி - தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர்கள் - பள்ளிகளில் உதவியாளர் / இளநிலை உதவியாளரின் பணி நேரத்தை பள்ளி வேலை நேரத்திற்கு தகுந்தாற்போல மாற்றி அமைத்து (காலை 09.00 மணி முதல் மாலை 04.45 வரை) பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 019420/ அ4/ இ3/ 2023, நாள்: 09-05-2023 (School Education - Tamilnadu Ministerial Staff - The working hours of Assistant / Junior Assistant in Schools have been adjusted to suit the School working hours (09.00 AM to 04.45 PM) - Proceedings of the Commissioner of School Education Rc.No: 019420/ A4/ E3/ 2023, Dated: 09- 05-2023)...


>>> பள்ளிக்கல்வி - தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர்கள் - பள்ளிகளில் உதவியாளர் / இளநிலை உதவியாளரின் பணி நேரத்தை பள்ளி வேலை நேரத்திற்கு தகுந்தாற்போல மாற்றி அமைத்து (காலை 09.00  மணி முதல் மாலை 04.45 வரை) பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 019420/ அ4/ இ3/ 2023, நாள்: 09-05-2023 (School Education - Tamilnadu Ministerial Staff - The working hours of Assistant / Junior Assistant in Schools have been adjusted to suit the School working hours (09.00 AM to 04.45 PM) - Proceedings of the Commissioner of School Education Rc.No: 019420/ A4/ E3/ 2023, Dated: 09- 05-2023)...



>>> திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Proceedings of Trichirappalli CEO)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நியாயவிலை கடைகள் செயல்படும் நேரம் மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு (Ration shops working hours change - Government of Tamil Nadu order)...



தமிழகம் முழுதும் நியாயவிலை கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக 2.30 மணி நேரம் நியாய விலை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தழிகம் முழுதும் நியாய விலை கடைகள் நேரத்தை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிறத்துள்ளது. அதன்படி அரசு பிறப்பித்த உத்தரவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரையிலும், இதர பகுதிகளில் காலை 9 மணி முதல் 1 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையிலும் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதற்கு முன்பு சென்னை மற்றும் புறநகரில் காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை செயல்பட்டு வந்த நியாய விலை இனி மேற்கண்ட நேரங்களில் செயல்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு, பெரும்பாலான நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு கடை செயல்படும் நேரம் குறித்த விவரங்கள் முழுமையாக தெரியவில்லை என்றும், கடை ஊழியர்கள் கடை திறக்கும் நேரம், கடைகளை திறந்து செயல்படுத்த வேண்டிய நெறிமுறைகளை குறித்த பயிற்சி அளிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நியாய விலைக்கடைகள் வேலை நேரம் குறித்த தகவல்களை குடும்ப அட்டைதாரர்கள் பார்க்கும் வண்ணம் நியாய விலைக் கடை முன்பு காட்சி படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளி வேலை நேரம் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டிய நேரம் - தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) - கரூர் மாவட்டக் கல்வி அலுவலரின் பதில் கடிதம் (School Working Hours and Teachers' Attendance time at School - Right to Information Act - Reply Letter from Karur District Educational Officer) ஓ.மு.எண்: 6488/அ1/2021, நாள்: 15-12-2021...



உயர்நிலை - மேல்நிலை பள்ளிகளின் வேலை நேரத்தை உள்ளூர் சூழலை பொறுத்து மாற்றிக் கொள்ளலாம்....


ஆசிரியர்கள் காலை 9.15 க்கு முன்பும்,

தலைமை ஆசிரியர்கள் 9.00 மணிக்குள்ளும்,

உடற்கல்வி ஆசிரியர்கள் 8.45 மணிக்குள்ளும் பள்ளிக்கு வருகை தர வேண்டும்..


>>> பள்ளி வேலை நேரம் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டிய நேரம் - தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) - கரூர் மாவட்டக் கல்வி அலுவலரின் பதில் கடிதம் (School Working Hours and Teachers' Attendance time at School - Right to Information Act - Reply Letter from Karur District Educational Officer) ஓ.மு.எண்: 6488/அ1/2021, நாள்: 15-12-2021...

தமிழகத்தில் நாளை (24-05-2021) முதல் வங்கிகள் செயல்பாடுகளில் மாற்றம் - மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு...



 தமிழகத்தில் 24-05-2021 முதல் வங்கிகள் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 வரை மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படும் - மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு...


Business Hours of the Banks in Tamilnadu.(24.05.2021 to 30.05.2021)...


>>> Click here to Download State Level Banker's Committee - Tamilnadu Announcement...


12 மணிநேரம் வேலையா..? ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்குமா புதிய கொள்கை.. உண்மை என்ன...?

 


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு உள்ள புதிய Wage Code கொள்கையின் மூலம் ஊழியர்களின் வேலை நேரம், சம்பள கணக்கீட்டு, பிஎப் தொகை, கிராஜுவிட்டி ஆகியவை முக்கிய மாற்றங்களை அடைய உள்ளது. இதில் 



குறிப்பாக ஊழியர்களின் வேலை நேரத்தில் செய்யப்பட்டு உள்ள மாற்றங்கள் ஊழியர்கள் மத்தியில் அதிகளவிலான பயத்தையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.



புதிய ஊதிய குறியீடு மசோதா

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய ஊதிய குறியீடு மசோதாவில் மக்களுக்குப் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது, குறிப்பாகத் தற்போது இருக்கும் 9 மணிநேர வேலை நேரத்தை 12 மணிநேரம் உயர்த்துவது குறித்து ஊழியர்கள் மட்டத்தில் அச்சம் எழுந்துள்ளது.



4 நாட்கள் மட்டுமே வேலை

உலக நாடுகளில் பல நிறுவனங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை அமல்படுத்திப் பெரிய அளவிலான வர்த்தக மாற்றத்தைச் செய்துள்ளது. இது ஊழியர்களுக்கும் சரி, நிறுவனங்களுக்கும் சரி அதிகளவிலான லாபம் அளிப்பதாக ஆய்வுகள் கூறும் நிலையில், இந்தியாவிலும் இதுபோன்ற முறையை அமல்படுத்த நிறுவனங்களுக்கு இந்தப் புதிய ஊதிய குறியீடு மசோதா மூலம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.



12 மணிநேரம் வேலைக்கு அனுமதி

தற்போது நடைமுறையில் தினமும் 9 மணிநேரம் வேலை என்பதில் எவ்விதமான மாற்றமும் இல்லை, ஆனால் ஒரு நிறுவனம் விரும்பினால் ஒரு நாளுக்கு 12மணிநேரம் ஊழியர்களைப் பணியில் அமர்த்தலாம். அப்படி அமர்த்து போதும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலைநாட்களாக இருக்க வேண்டும் என்பதையும் இந்த மசோதாவில் தெளிவுபடுத்தியுள்ளது.



ஊழியர்களுக்குச் சாதகமானது

இதன் மூலம் நிறுவனங்களுக்குக் கூடுதலாகத் தினமும் 3 மணிநேரம் ஊழியர்களின் பணிகளைப் பெற முடியும், அதேநேரத்தில் ஊழியர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை பெற முடியும். இதனால் ஊழியர்களின் Work Life Balance மேம்படும்.



30 நிமிடம் இடைவேளை கட்டாயம்

இதே ஊதிய குறியீடு மசோதா கொள்கையில் ஊழியர்களின் நலனுக்காக 5 மணி நேரத்திற்குக் கட்டாயம் 30 நிமிடம் இடைவேளை அளிக்க வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் 5 மணிநேரத்திற்கும் அதிகமான தொடர் வேலை செய்யும் முறையைத் தடை செய்துள்ளது.



ஓவர்டைம் கணக்கீடு

மேலும் தற்போது நடைமுறையில் 15 முதல் 30 நிமிடத்திற்குள் கூடுதலாக வேலை செய்தால் ஓவர்டைம் கணக்கிடப்படாது. 30 நிமிடத்திற்கு அதிகமாக வேலை செய்தால் மட்டுமே கூடுதல் பணிநேரம் கணக்கிடப்படும்.



இப்புதிய ஊதியக் குறியீடு மசோதாவில் 15 நிமிடத்திற்கு அதிகமாக ஒரு நிமிடம் பணியாற்றினாலே 30 நிமிடத்திற்கான ஓவர்டைம் கணக்கிடப்பட வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.



அடிப்படை சம்பள கணக்கீடு

மேலும் ஒரு ஊழியரின் மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமான தொகையை அடிப்படை சம்பளமாகக் கணக்கிடப்பட வேண்டும் எனப் புதிய உத்தரவை புதிய ஊதிய குறியீடு மசோதாவில் அறிவிக்கப்பட்டு உள்ளது.



Take Home Salary அளவு குறையும்

இந்தச் சம்பள கணக்கீட்டு முறையில் ஏற்பட்டு உள்ள மாற்றத்தால் ஊழியர்களுக்கான பிஎப் மற்றும் கிராஜுவிட்டி ஆகியவை அதிகரிக்கும். இது ஓய்வுபெற்றும் போது பெரிய அளவில் உதவும், ஆனால் அதேவேளையில் பிஎப் மற்றும் கிராஜுவிட்டிக்கு அதிகப் பணம் பிடித்தம் செய்யப்படுவதால் டேக் ஹோம் சேலரி அளவீட்டில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும்.



ஏப்ரல் 1 முதல் அமலாக்கம்

இப்புதிய கொள்கை மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட வேண்டும், ஆனால் மாநில அரசுகளும், நிறுவனங்களும் முழுமையாகத் தயாராக நிலையிலும், கொரோனா பாதிப்பால் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ள சூழ்நிலையிலும் கால தாமதம் ஆகி வருகிறது.


தமிழகத்தில் அஞ்சலகங்கள் செயல்படும் நேரம் குறைப்பு...



 தமிழகத்தில் அஞ்சலகங்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என தபால் துறை அறிவிப்பு...


In continuation of this office letter cited above , the following additional guidelines are hereby issued :


All Post office counters in the Circle will function up to 2pm and a notice board may be kept at Post Offices about the revised timings and this may be given wide publicity among public...


>>> Click here to Download the Assistant Director Letter...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...