கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2021-22 - மாணவர் சேர்க்கைக்கு தயாராகிறது தொடக்கக் கல்வித்துறை...

 பள்ளிக்கு சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில், ஐந்து வயதுக்கு மேற்பட்டோர் குறித்த, விபரங்களை திரட்ட, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படுத்தப்பட்ட, பல அதிரடி மாற்றங்கள்  காரணமாகவும், கொரோனா பாதிப்பால் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தாலும், கடந்த கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை அதிகரித்தது. 



தனியார் பள்ளிகளில் இருந்து பலர், அரசுப்பள்ளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான பணிகளை, தற்போதே துவங்குமாறு, தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.பள்ளிக்கு அருகே உள்ள குடியிருப்புகளில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் தகவல்களை, சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


வட்டார கல்வி அலுவலர்கள் சிலர் கூறுகையில், ‘அங்கன்வாடிகளில், ஐந்து வயதுக்கு மேற்பட்டோர் விபரங்களை எளிதில் பெறலாம். இது தவிர, மாணவர்களின் உடன் பிறந்தவர்கள், ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனரா என,  பெற்றோரிடம் விசாரிக்குமாறு ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுவதால், ஆசிரியர்கள் நேரடியாக குடியிருப்புகளுக்கு சென்று, குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க, விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாது. எனவே, தொலை தொடர்பு வசதிகள் மூலம், தகவல்கள் திரட்டி, உத்தேச பட்டியல் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை துவங்கும் போது, இப்பட்டியல் பயனுள்ளதாக இருக்கும்’ என்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...