கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

+2 செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

 கொரனா தொற்று அதிகரித்து நிலையில் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுக்காக 21 வகையான நிலையான வழிமுறைகள் அடங்கிய உத்தரவை கல்வி துறை வெளியிட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர்களுக்கு வகுப்புகளும் நடைபெறவில்லை. ஆனால் பொதுத்தேர்வு இருப்பதால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும், தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே கூறியிருந்தது.அதன்படி மே மாதம் 3ஆம் தேதி +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.



இதனிடையே கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.ஆனால் வைரஸ் பாதிப்பு இருந்தாலும் கூட +2 தேர்வுகள் ரத்து செய்யப்படாது எனவும் தமிழக அரசு அறிவித்தது. பொதுத்தேர்வுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்கேள இருப்பதால் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் +2 மாணவர்களின் செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மாணவர்கள் கிருமிநாசினிமற்றும் குடிநீர் பாட்டில்கள் தனியாக வைத்துக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர். சானிடைசர் பயன்படுத்திய பிறகு தீயால் உபயோகிக்கும் பொருட்களை பயன்படுத்த கூடாது, நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதிபடுத்தவேண்டும் போன்றவை வழிமுறைகளில் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற 21 வகையான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Anna University has withdrawn the notification of 'Professors appointment in Consolidated Pay'

 'தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம்' என்ற அறிவிப்பை திரும்ப பெற்றது அண்ணா பல்கலைக்கழகம் Anna University has withdrawn the ...