அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
Proceedings of the Director of School Education for Conducting Practical Exams for Half Yearly Examination
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
Proceedings of the Director of School Education for Conducting Practical Exams for Half Yearly Examination
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
SSLC தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்தல் தொடர்பான செய்திக் குறிப்பு (Application for Enrollment to Practical Training Classes for the SSLC Public Examination for the April-2024)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2023-2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - நேரடி தனித்தேர்வர்கள் - அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் (2023-2024 - 10th Standard Public Examination - Direct Individual Candidates - Apply for Science Practical Exam - Directorate of State Examinations)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
இன்னும் முடிக்கப்படாமல் உள்ள செய்முறை பயிற்சி தேர்வு உள்ளிட்ட பணிகளை, அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், வரும் 28க்குள், 'ஆன்லைன்' வாயிலாக பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் தேர்ச்சி குறித்த விபரங்களை இறுதி செய்யும் பணிகளில், சி.பி.எஸ்.இ., வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அனைத்து பாடங்களும் ஆன்லைன் வகுப்புகள் வாயிலாகவே நடந்து முடிந்துள்ள நிலையில், செய்முறை பயிற்சி தேர்வுகள் குறித்த பணிகளை அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப முடிப்பதில் ஆசிரியர்களுக்கு சிரமம் நிலவுகிறது. இந்நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும், டில்லியிலிருந்து, சி.பி.எஸ்.இ., சார்பில், அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளிகளில் செய்முறை பயிற்சி தேர்வு மற்றும் 'இன்டர்னல் அசெசஸ்மென்ட்' பணிகள் முடிக்கப்படாமல் இருந்தால், அவை அனைத்தையும் ஆன்லைன் வாயிலாக நடத்தி முடிக்க வேண்டும்.
சில பாடங்களுக்கு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படாமல் இருக்கக்கூடும். அப்படிப்பட்ட நிலையில், அந்த பள்ளி ஆசிரியரே இந்த தேர்வுகளை நடத்தலாம். இந்த நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைனில் உள்ளன. தாங்கள் அளிக்கும் மதிப்பெண் விபரங்களையும், அதற்கென உள்ள இணைப்பில் சென்று பதிவேற்ற வேண்டும். செய்முறை தேர்வு முடிந்ததும், காலதாமதம் ஏதும் இன்றி உடனடியாக மதிப்பெண்களை பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது சரியான மதிப்பெண்களை மட்டுமே குறிப்பிட வேண்டும். செய்முறை பயிற்சி தேர்வு உள்ளிட்ட பணிகளை, அனைத்து பள்ளிகளும், வரும் 28க்குள் இறுதி செய்து, அதற்கான மதிப்பெண்களை பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - செய்முறைத் தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும்...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிதீவிரமாக அதிகரித்து வருவதால் மாணவர்கள் நலன்கருதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் செய்முறைத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்.
சுகாதாரத்துறை, தலைமைச் செயலாளருடன் முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே CBSE, ICSE மற்றும் சில மாநிலங்களும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஒத்திவைத்த நிலையில் தமிழக அரசும் இந்த முடிவை எடுத்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 16ம் தேதி திட்டமிட்டபடி செய்முறை தேர்வு நடத்தப்படும்' என, பள்ளிக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 தவிர மற்ற மாணவர்களுக்கு, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், வரும், 5ம் தேதி பொதுத் தேர்வு துவங்க உள்ளது. மே, 31 வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மே, 3ல் நடக்கவிருந்த மொழிப் பாடத் தேர்வுகள், மே, 31க்கு மாற்றப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும், 16ம் தேதி செய்முறை தேர்வு நடத்தப் படுகிறது. இதற்காக, செய்முறை பயிற்சி வகுப்புகளை, நாளை கட்டாயம் நடத்த வேண்டும் என, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:
பிளஸ் 2 மாணவர்களுக்கு திட்டமிட்டபடி, மே, 5ல் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. செய்முறை தேர்வு, வரும், 16ம் தேதி முதல், திட்டமிட்ட காலத்தில் நடத்தப்படும். கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில், பள்ளி ஆய்வகங்களில் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி, மாணவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்.
தலைமை ஆசிரியர் மற்றும் பிற பாட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்கி, மாணவர்களின் செய்முறை தேர்வை, எந்த வித புகார்களுக்கும் இடமின்றி நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Government Examinations- HSE-II Year - 2020–21 - Conduct of Practical Examinations – Guidelines issued based on the Standard Operating Procedure issued by the Government –communicated –regarding...
கொரனா தொற்று அதிகரித்து நிலையில் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுக்காக 21 வகையான நிலையான வழிமுறைகள் அடங்கிய உத்தரவை கல்வி துறை வெளியிட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர்களுக்கு வகுப்புகளும் நடைபெறவில்லை. ஆனால் பொதுத்தேர்வு இருப்பதால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும், தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே கூறியிருந்தது.அதன்படி மே மாதம் 3ஆம் தேதி +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.
இதனிடையே கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.ஆனால் வைரஸ் பாதிப்பு இருந்தாலும் கூட +2 தேர்வுகள் ரத்து செய்யப்படாது எனவும் தமிழக அரசு அறிவித்தது. பொதுத்தேர்வுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்கேள இருப்பதால் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் +2 மாணவர்களின் செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் கிருமிநாசினிமற்றும் குடிநீர் பாட்டில்கள் தனியாக வைத்துக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர். சானிடைசர் பயன்படுத்திய பிறகு தீயால் உபயோகிக்கும் பொருட்களை பயன்படுத்த கூடாது, நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதிபடுத்தவேண்டும் போன்றவை வழிமுறைகளில் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற 21 வகையான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
12ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் 16.04.2021முதல் 23.04.2021வரை நடத்தப்பட உள்ளது - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு...
>>> அரசுத் தேர்வுகள் இயக்கக அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...