கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சட்டமன்றத் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை ஊதியம் நிர்ணயம் -தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்...

 சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை ஊதியம் நிர்ணயம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் வரும் 6 ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ம் தேதி நடக்கிறது. அதற்காக தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு முதற் கட்டம் மற்றும் 2 ஆம் கட்ட தேர்தல் பயிற்சிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேர்தல் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை ஊதியம் நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது. 


இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது : 


சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தல் பணியில் லட்சக்கணக்கான மத்திய , மாநில அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக தனியாக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . அதன்படி வாக்குப் பதிவு தலைமை அலுவலர் , வாக்கு எண்ணிக்கை சூப்பர்வைசர் , அறை சூப்பர்வைசர் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு 350ம் , வாக்குப்பதிவு அலுவலர் , எண்ணிக்கை உதவி அலுவலர் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு 250 ம் மற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு 150ம் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு உணவு படிக்கு 150 ம் , வீடியோ கண்காணிப்புகுழு , வீடியோ பார்வையிடும் குழு , கணக்கு குழு , தணிக்கை கண்காணிப்பு குழு , தேர்தல் கண்காணிப்பு அறை , தகவல் மைய ஊழியர் கள் , மீடியா சான்றிதழ் குழு , கண்காணிப்பு குழு , பறக்கு படை குழு , நிலை யான கண்காணிப்பு குழு , செலவின கண்காணப்பு குழு உள்ளிட்ட குழுக்க ளில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு ₹ 1200 , 1000 மற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு 720 ம் வழங்கப்படுகிறது. நுண்ணறிவு பார்வையாளர்களுக்கு 1000 ம் , உதவி தேர்தல் செலவின பார்வையாளர்களளுக்கு 17.500 ம் வழங்கப்படுகிறது. இதுதவிர தேர்தல் பணிக்காக பயிற்சிக்கு செல்லும் போதும் 4 நாட்களும் , தேர்தலின் வாக்குப்பதிவுக்கு வாக்குச்சாவடிக்கு செல்லும் போது 2 நாடகளும் தேர்தல் பணி செய்த நாட்களுக்கும் ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இவ்வாறு அதிகாரிகள் கூறினர்,


 

>>> தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - ஏப்ரல் 2021 - தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கான மதிப்பூதியம்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...