கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - மகரம்

பிலவ வருடம் 2021-2022

மற்றவர்களின் மனம் அறிந்து செயல்பட்டு தனது காரியத்தை வெற்றியாக்கி கொள்ளும் மகர ராசி அன்பர்களே!!

பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.




கிரக அமைப்புகள் :


ராசியில் ராசியின் அதிபதியான சனியும்


இரண்டில் குருவும்


மூன்றில் புதனும்


நான்கில் சூரியனும், சுக்கிரனும், சந்திரனும்


ஐந்தில் ராகுவும், செவ்வாயும்


பதினொன்றில் கேதுவும் அமர்ந்துள்ளனர்.


குரு

5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்

சனி

3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்

செவ்வாய்

4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு

பலன்கள் :


குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலைகள் காணப்படும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் அகலும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்பட்டால் லாபங்கள் ஏற்படும். மூத்த சகோதர வகையில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தாய்வழி உறவினர்களிடத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வீட்டை விரிவுப்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும்.


பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் :


உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகளால் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். வருவாய் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமத நிலை நீங்கி தெளிவுகளும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். ஜென்ம சனி நடைபெறுவதால் எதிர்பாராத செய்திகளின் மூலம் வரவுக்கேற்ற செலவுகளும் அவ்வப்போது ஏற்பட்டு கொண்டே இருக்கும்.


மாணவர்களுக்கு :


மாணவர்களுக்கு எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளும், ஒருவிதமான பதட்டமும் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படித்து எழுதி பார்ப்பது நன்மையை ஏற்படுத்தும். பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக நேரத்தை செலவழிப்பதை குறைத்து கொள்ளவும். உயர்கல்வியில் ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அதிக முயற்சிகளின் அடிப்படையில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். மேல்நிலை கல்வியில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் காலம் தவறி கிடைக்கும். பொறுமையுடன் முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.


பெண்களுக்கு :


பெண்களுக்கு மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆனால், செயலளவில் அதை கொண்டு வரும்பொழுது காலதாமதமும், கவனக்குறைவினால் சிறுசிறு அவப்பெயர் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அலைச்சல்களுக்கும், விரயங்களுக்கும் பின்பே ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த பாகப்பிரிவினைகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வீடு மற்றும் சொகுசு வாகனங்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்களும், அதற்கான கடனுதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கேற்ப செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். விதண்டாவாத சிந்தனைகளை தவிர்ப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.


உத்தியோகஸ்தர்களுக்கு :


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்கள் மத்தியில் ஆதரவான சூழ்நிலையும், செல்வாக்கும் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த சம்பள பாக்கிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத புதிய வாய்ப்புகளும், சாதகமான இடமாற்றமும் சிலருக்கு அமையும்.


வியாபாரிகளுக்கு :


இணையம் சார்ந்த வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் லாபகரமான சூழ்நிலைகள் அமையும். வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். கட்டுமான பொருட்கள் மற்றும் கனரக வாகன பொருட்களின் வழியாக லாபங்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கான உதவிகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.


அரசியல்வாதிகளுக்கு :


அரசியல் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் தேவையற்ற கோபங்களையும், பிடிவாத குணத்தையும் குறைத்து கொள்வது நல்லது. வார்த்தைகளில் கடினத்தன்மை இன்றி பொறுமையுடன் செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வாரிசுகள் மூலம் எதிர்பார்த்த ஆதரவு மற்றும் உதவிகள் காலதாமதமாகவே கிடைக்கப் பெறுவீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். நண்பர்கள் மற்றும் கட்சி தொடர்பான உயரதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும்.


கலைஞர்களுக்கு :


கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு புதுவிதமான யோசனைகளும், சிந்தனைகளும் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் மனதில் கவலைகள் ஏற்படும். மனதில் இருக்கும் ரகசியங்களை எவரிடத்திலும் பகிராமல் இருப்பது நன்மையை ஏற்படுத்தும். உங்களின் மீதான சிறுசிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். தனவரவுகளில் இருந்துவந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கடின உழைப்புக்கான அங்கீகாரங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.


வழிபாடு :


சனிக்கிழமைதோறும் நீலநிற பூக்களினால் சனீஸ்வரரை வழிபாடு செய்துவர எண்ணத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.


 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Internet Service Charges for Schools - Releasing Funds - State Project Director's Order

பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் - நிதி விடுவிப்பு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு Internet Service Charges for Schools - Releasing ...