கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் நிர்ணயம் - உயர்நீதிமன்றம் உத்தரவு...

அரசு உதவி  பெறும் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரத்தை நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.




தமிழகத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத சில பள்ளிகளில் அனுமதியளிக்கப்பட்ட காலிப் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் கோரப்பட்டது. அதே பள்ளி நிர்வாகத்தின் கீழ் உள்ள பிற பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணிபுரிவதை சுட்டிக்காட்டி, பள்ளிக் கல்வித்துறை ஒப்புதல் அளிக்க மறுத்தது.



அதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தாக்கலாகின. நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.சுரேஷ்குமார் அமர்வு உத்தரவு: 

கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரத்தை 1:30 அல்லது 1:35 என்ற அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும். ஒரு கல்வி நிறுவன ஏஜன்சி அல்லது கூட்டு மேலாண்மை அல்லது கார்ப்பரேட் நிர்வாகத்தின் கீழ் பள்ளி இருந்தாலும், தனித்த ஒரு பள்ளியை மட்டுமே தனி அலகாக (யூனிட்டாக) கொண்டு அலுவலர்கள் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டும்.



கல்வி நிறுவனம் முழுவதையும் தனி அலகாகக் கருதக்கூடாது. குறிப்பிட்ட கல்வியாண்டில் ஆசிரியர் பணியிடத்தை நிர்ணயித்த பின், கூடுதலாக இருந்தால் பள்ளிக் கல்வித்துறை அடையாளம் காண வேண்டும். அதை பள்ளி நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். கூடுதல் ஆசிரியர்களை தேவையான பள்ளிகளில் பணி நிரவல் அடிப்படையில் நியமிக்க வேண்டும். அவ்வாறு வேறு பள்ளியில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டால், குறித்த காலத்திற்குள் பணியில் சேர வேண்டும்.


 

1991-92 கல்வியாண்டிற்கு முன் துவங்கப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி கூடுதலாக தமிழ் அல்லது ஆங்கில வகுப்புகள் துவங்கப்பட்டிருந்தால், அதில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு 2021-22 கல்வியாண்டு முதல் சம்பளத்திற்கான நிதியை அரசு வழங்க வேண்டும். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்கு முறை) சட்டம் 2018ன்படி ஒருங்கிணைந்த விதிமுறைகளை விரைவில் அரசு கொண்டுவர வேண்டும்.


 


அதுவரை இந்நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் நவம்பரில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதில் தேவையற்ற வழக்குகள் தாக்கலாவதைத் தவிர்க்க நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடம், கூடுதலாக உள்ள அலுவலர்களை அடையாளம் காணுதல், தேவையான பள்ளிகளில் பணி நிரவல் மூலம் நியமித்தல், பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதி உட்பட பல்வேறு விஷயங்களை இந்நீதிமன்றம் கண்காணிக்கும் என்றனர்.


>>> உபரியாக உள்ள ஆசிரியர்களை காலியாக உள்ள தேவைப்படும் பள்ளிக்கு அக்டோபர் -15க்குள் பணி மாறுதல் செய்ய உத்தரவு - உயர்நீதிமன்ற மன்ற தீர்ப்பு நகல்..


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns