கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Aided School லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Aided School லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பள்ளிக்குழு புதுப்பித்தல் காலதாமதம் - ஆசிரியர்களுக்கு ஊதியம் நிறுத்தம் செய்யக் கூடாது - இயக்குநரின் செயல்முறைகள்



அரசு உதவிபெறும் பள்ளிகளில் பள்ளிக்குழு புதுப்பித்தல் சார்பாக ஏற்படும் காலதாமதம் மற்றும் அங்கீகாரம் பெறப்படாமை சார்பாக ஏற்படும் கால தாமதத்தை குறிப்பிட்டு ஆசிரியர்களுக்கு ஊதியம் நிறுத்தம் செய்யக் கூடாது என்பதற்கான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் கடிதம்


Proceedings letter from the Director of Elementary Education stating that teachers' salaries should not be withheld due to delays in reconstituting school committees or delays in obtaining recognition for government-aided schools.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Govt Aided School - P.G. Teacher Vacancy

 

 

 அரசு உதவி பெறும் பள்ளி - முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடம் - வேலைவாய்ப்புகள்


Government Aided School - Post Graduate Teacher Vacancy - Job Notification



ஸ்ரீ ஜீ.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி


திருவாரூர்.610001


முதுகலை ஆசிரியர் தேவை


இப்பள்ளியில் ஏற்பட்டுள்ள கீழ்கண்ட நிரந்தர முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடத்தை நிரப்பிட தகுதி பெற்ற ஆசிரியர் (பெண்கள்) விண்ணப்பிக்கலாம்.


வரிசை எண்    : 1


காலிப்பணியிடம் விபரம்  : முதுகலை ஆசிரியர் (இயற்பியல்)


கல்வித் தகுதி   :  எம்.எஸ்ஸி., (இயற்பியல்) + பி.எட்


இன சுழற்சி   :   பொதுப்போட்டி (பெண்கள் மட்டும்)


Pay and Allowances: As per Govt Norms


மேற்குறிப்பிட்ட தகுதி படைத்தவர்கள் அனைத்து வகை சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு பதிவு தபாலில் மட்டுமே கிடைக்குமாறு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 25-05-2026


செயலர்


ஸ்ரீ ஜீ.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி


திருவாரூர் - 610001






Government Aided School - Graduate Teacher Vacancy - Job Notification

 


 அரசு உதவி பெறும் பள்ளி - பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடம் - வேலைவாய்ப்புகள்


Government Aided School - Graduate Teacher Vacancy - Job Notification 


ஆசிரியர் தேவை


(நிரந்தரப்பணியிடம்)


இப்பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


ஊதியம் அரசு விதிகளின்படி, 

இனச்சுழற்சி : MBC/DNC, 

தகுதி: B.A., B.Ed., மற்றும் TET - II தேர்ச்சி


விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 15.05.2026


விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெறும் நாள்: 16.05.2026 சனிக்கிழமை


செயலர்

ஜி.ஆர்.வி.மேல்நிலைப்பள்ளி

மயிலாடும்பாறை, ஆண்டிபட்டி வட்டம், தேனி மாவட்டம்-625 579





Government Aided School - B.T. Assistant Vacancies

 

 அரசு உதவி பெறும் பள்ளி - பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் - வேலைவாய்ப்புகள்


Government Aided School - Graduate Teacher Vacancies - Job Notification 


நிரந்தர ஆசிரியர்கள் தேவை


ஆசிரியர்கள் தேவை (நிரந்தரப் பணியிடம்)


பணியிடம்


1) பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) 

SC - 01

B.Sc., B.Ed., TET Paper-II (கணிதம்)


2) பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்)

MBC/DNC - 01

B.A., B.Ed., TET Paper-II (ஆங்கிலம்)


அரசு விதிகளின்படி


தகுதியுடைய பணிநாடுநர்கள் 06.03.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெறும் நேர்காணலில் உரிய அசல் கல்விச்சான்றுகளுடன் கலந்து கொள்ளவும்.


செயலர்

ஜி.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி

மயிலாடும்பாறை-625579, ஆண்டிப்பட்டி வட்டம், தேனி மாவட்டம்.



அரசு உதவிபெறும் பள்ளி - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்

 

 

அரசு உதவிபெறும் பள்ளி - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - அறிவிப்பு


Job Notification



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



WANTED 

1.BT Social with B.A (History) B.Ed, 

2. BT (English), 

3. BT(Tamil), 

4. Computer Teacher,

5.PGT Hindi with M.A (Hindi) B.Ed 

for Govt. Aided School. 

Send Resume to mfsdhssrecruit@gmail.com, 

Ph,: 044-25382972, Mobile: 8610524778


பணி நிரவல் கலந்தாய்வு - CEO Proceedings


பணி நிரவல் கலந்தாய்வு - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு - தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


//மின்னஞ்சல் வழியாக//
தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை ஆணை

திருவள்ளுவராண்டு 2056/விசுவாவசு வருடம்/ஆனி -19

ந.க.எண்.4812/ஆ4/2024 , நாள் .03.07.2025


பொருள் : தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - அரசு மற்றும் நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 01.08.2024 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயன் செய்து ஆசிரியருடன் உபரி பட்டியல்-கலந்தாய்வில் கலந்து கொள்ள அறிவுறுத்துதல் - தொடர்பாக.

பார்வை : 

1. அரசாணை எண்.525 பள்ளிக்கல்வித்துறை, நாள் : 29.12.1997.


2. அரசாணை எண்.46 பள்ளிக்கல்வித்துறை நாள்.14.05.2004.


3. அரசாணை எண்.231 பள்ளிக்கல்வித்துறை நாள்.11.08.2010.


4. அரசாணை எண்.180 பள்ளிக்கல்வித்துறை நாள்.17.07.2012.


5. அரசாணை எண்.217 பள்ளிக்கல்வித்துறை நாள்.20.06.2019.


6. அரசாணை எண்.176 பள்ளிக்கல்வித்துறை நாள்.17.12.2021.


7. அரசாணை எண்.12 பள்ளிக்கல்வித்துறை நாள்.03.02.2022,


8. அரசுக் கடித எண் .3835/1.5.5 (1) 12024-1., நாள் 29.04.2024.


9. சென்னை-06, பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்.048350/சி3/இ1/2024, நாள் : 05.08.2024.


10. சென்னை-06, பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்.037584/சி3/இ1/2025, நாள் : 26.06.2025.


=========


தருமபுரி மாவட்டத்தில் அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் 2024-2025 ஆம் கல்வியாண்டின் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுவதற்கு பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் பெறப்பட்டு 01.08.2024 நிலவரப்படி பார்வை(1) முதல் பார்வை(7) வரை உள்ள அரசாணைகள் மற்றும் பார்வை(9)-இல் காணும் செயல்முறைகளை பின்பற்றி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.
01.08.2024 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டதில்
ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு நடத்துவது சார்ந்து பார்வை(10)-இல் காணும் 26.06.2025 நாளிட்ட செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் சம்மந்தப்பட்ட உபரி ஆசிரியர்களின் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பணி நிரவல் குறித்த தொடக்கக் கல்வி இயக்குநரகச் செய்தி


பணி நிரவல் குறித்த தொடக்கக் கல்வி இயக்குனரகச் செய்தி (வாட்ஸ் அப் தகவல்)


இன்று மற்றும் நாளை (03 & 04/07 / 2025/ இடைநிலை ஆசிரியர்க்கான பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற உள்ளது, பணி நிரவல் கலந்தாய்வில் பணி நிரவலுக்குட்பட்ட ஆசிரியர்களை விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி  ஆணை பெறுமாறு வற்புறுத்தக்கூடாது. அது போல் வற்புறுத்தி பணிநிரவல் ஆணை ஏதேனும் வழங்கப்பட்டதாக புகார் பெறப்படின் சார்ந்த DEO மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது. நேற்றைய முன்தினம் மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் இது சார்ந்து குறிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டதை கவனத்தில் கொள்ளுமாறும் DEO's கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் declaration form எதுவும் பெற வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.


தொடக்கக் கல்வி இயக்குனர்


Deployment of surplus teachers - DSE Proceedings


2024-2025ஆம் கல்வி ஆண்டு பணியாளர் நிர்ணயத்தின் படி அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் -  பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 050640/ டி1/ இ4/ 2024, நாள் : 06-05-2025 வெளியீடு


அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை மே மாதத்திற்குள் பணி நிரவல் செய்ய பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு


Deployment of surplus teachers in government aided schools as per the staff fixation for the academic year 2024-2025 - Instructions issued - Proceedings of the Director of School Education Rc. No.: 050640/ D1/ E4/ 2024, Dated: 06-05-2025 Released 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Govt Aided School - Permanent PG Teacher Post - Last Date to Apply: 17-03-2025


அரசு உதவிபெறும் பள்ளி - முதுகலை ஆசிரியர் நிரந்தர பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 17-03-2025



Government Aided School - Permanent Post Graduate Teacher Post - Last Date to Apply: 17-03-2025



>>> அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Not withheld salary of teachers for delay in renewal of government aided school recognition - DEE Proceedings

 

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி குழு மற்றும் பள்ளியின் அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு ஏற்படும் கால தாமதத்திற்கு பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தம் செய்யக் கூடாது - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 9533 / எச்2 / 2015, நாள் : 23-04-2015


No suspension of salary of teachers for delay in renewal of government aided school recognition - Director of Elementary Education Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Government aided schools face problem in getting salaries due to lack of allocation of funds



 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லாததால் சம்பளம் பெறுவதில் சிக்கல் - நாளிதழ் செய்தி 


Government aided schools face problem in getting salaries due to lack of allocation of funds - Daily News 



அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களின் ஜனவரி மாத சம்பள பட்டியலை பதிவேற்றும்போது 'நிதி ஒதுக்கீடு இல்லை' என வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் 9000 அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு மாதந்தோறும் சம்பளப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வட்டார கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் கருவூலத்துறைக்கு அனுப்பப்படும்.


அங்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை இணையதளம் IFHRMS Website மூலம் சம்பள பட்டியல் தயார் செய்து பதிவேற்றம் செய்யப்படுகிறது.


அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாதந்தோறும் சம்பள பட்டியல் பள்ளி தாளாளர், செயலாளர் கையெழுத்து பெற்று அந்தந்த வட்டார கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.


அங்கிருந்து மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகங்களில் சரி பார்க்கப்பட்டு கருவூலத்துறையின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.


ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிக்குள் சம்பள பில்லை பதிவேற்றம் செய்வார்கள்.


சம்பள பட்டியலை பதிவேற்றம் செய்யும் போது 'சம்பள மானியம்' என்ற பகுதியில் உள்ளீடு செய்யும் போது 'நிதி ஒதுக்கீடு இல்லை' என்று தகவல் வருகிறது.


இதனால் ஜனவரி மாத சம்பளம் கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Powers given to Government Aided School Correspondents to pay Teachers

 


அனைத்து வகை அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற முழு அதிகாரமும் பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கி உத்தரவு


The order gives full powers to school Correspondents to pay teachers in government aided schools


ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு உதவி பெறும் பள்ளி தாளாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது


அனைத்து வகை அரசு நிதி உதவி பெறும் பள்ளி தாளாளர்கள்/ செயலாளர்கள்/ நிர்வாகிகள்


*ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற  முழு அதிகாரமும் பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


*அதற்காக தாங்கள் உடனடியாக DSC விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும்


*முதல் கட்டமாக தாளாளரே DDO ஆக 1-3-2025 முதல் செயல்படுவார்



Commissioner of Treasuries and Accounts Proceedings Letter 

  >>> Click Here to Download...



Guideline for DSC  

>>> Click Here to Download...

Guidelines for Approval of Appointment of Teacher Posts in Government Aided Elementary and Middle Schools - Government Secretary's Letter

 

அரசு நிதி உதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌  ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ நியமன ஒப்புதல்‌ வழங்க வழிகாட்டு நெறிமுறைகள்‌ - பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர்‌ செயல்முறைகள் கடிதம், நாள்: 10-05-2024


Guidelines for Approval of Appointment of Teaching Posts in Government Aided Primary and Middle Schools - Education Department Government Secretary's Proceedings Letter, Dated: 10-05-2024


 அரசுக் கடிதம் எண் 4132/தொ.க.2(1)/2024, பள்ளிக்கல்வித்துறை நாள்: 10.05.2024-ல் அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நியமன ஒப்புதல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வருத்து ஆணையிடப்பட்டுள்ளது. இதில், சிறுபான்மைப் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் நியமனங்களுக்கும் பதவி உயர்வுகளுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.


பள்ளிக்கல்வித்துறை

தலைமைச் செயலகம்

சென்னை 9


Efile கடிதம் எண் 4132/தொ.க.2(1)/2024, பள்ளிக்கல்வித்துறை நாள்: 10.05.2024


அனுப்புநர்‌
திரு. ஜெ.குமரகுருபரன்‌, இ.ஆ.ப....
அரசு செயலாளர்‌.

பெறுநர்‌

தொடக்கக்கல்வி இயக்குநர்‌.
சென்னை -6.

அய்யா,

பொருள்‌: பள்ளிக்‌ கல்வி - உதவி பெறும்‌ பள்ளிகள்‌ - அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ உள்ள தலைமை ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ நியமன ஒப்புதல்‌ அளிக்க அறிவுரைகள்‌ வழங்கப்பட்டதை தொடர்ந்து ஏனைய பிற ஆசிரியர்‌ நியமனங்களுக்கும்‌ - நியமன ஒப்புதல்‌ வழங்க வழிகாட்டு நெறிமுறைகள்‌ வெளியிடுதல்‌ - தொடர்பாக.


பார்வை. 1. மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‌ கிளையில்‌ தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு WA(MD)No.76 of 2019etc. batches. இடைக்கால தீர்ப்பாணை நாள்‌.09.04.20%9.

2. அரசாணை (நிலை) எண்‌ 185.பள்ளிக்‌ கல்வித்துறை, நாள்‌.17.09.2019

3. மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‌ கிளை வழக்கு, WA(MD)No.76 of 2019etc, batches, தீர்ப்பாணை நாள்‌.3103.2021.

4. மாண்பமை புதுதில்லி உச்சநீதிமன்ற சிறப்பு அனுமதி மனு SLP (c) No.15702of 2021, தீர்ப்பாணை நாள்‌.16.02.2024.

5. மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‌ கிளையில்‌ தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகள்‌ WA(MD) Nos. 320 of 2023 and 689of 2022 தீர்ப்பாணை நாள்‌.20:11.2023.

6. பள்ளிக்‌ கல்வி ஆணையர்‌ மற்றும்‌ தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ இணை செயல்முறைகள்‌ ந.க. எண்‌. 34116/ டி1/ இ4/ 2013, நாள்‌.29-03-2023.

7. தொடக்கக்கல்வி இயக்குநரின்‌ கடித நக.எண்‌. 004126/எச்/ஜி/2024, நாள்‌ 08.05.2024.


பார்வை 7ல்‌ காணும்‌ கடிதத்தில்‌ தொடக்ககல்வி இயக்குநர்‌, தூத்துக்குடி மாவட்டம்‌, கோவில்பட்டி சரகம்‌, வெங்கடாசலபுரம்‌, புனித ஜார்ஜ்‌ இனிகோ தொடக்கப்பள்ளியின்‌ இடைநிலை ஆசிரியை திருமதி 1, இருதய அமலி என்பவரின்‌ நியமனம்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலரால்‌ ஒப்புதல்‌ அளிக்கப்படாத நிலையில்‌, மேற்படி ஆசிரியர்‌ தணது. நியமனத்திற்கு ஒப்புதல்‌ கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‌ கிளையில்‌ தொடரப்பட்ட வழக்கு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பாணையில்‌, கீழ்க்காணுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



>>> அரசுக் கடிதம் எண் 4132/தொ.க.2(1)/2024, பள்ளிக்கல்வித்துறை நாள்: 10.05.2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Aided Schools Correspondents / Administrators / Headmasters should not collect monthly amount from government aided school teachers for any reason - District Education Officer orders


அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களிடம், நிர்வாகிகள் / தலைமை ஆசிரியர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் மாத மாதம் பணம் வசூலிக்கக்கூடாது - மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு


Aided Schools Correspondents / Administrators / Headmasters should not collect monthly amount from government aided school teachers for any reason - District Education Officer Proceedings 



 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களிடம் பணம் வசூல் - நடவடிக்கை எடுக்கப்படும் என்று  பள்ளி நிர்வாகிகளுக்கு சென்னை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) சுற்றறிக்கை



அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்படும் செலவினங்களை ஆசிரியர்களிடம் வசூல் செய்யக்கூடாது - சென்னை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 3898/ ஆ2/ 2024, நாள் : 14-11-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் பணியிட மாறுதல் செய்தல் - பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண் : 146, நாள்: 28-06-2024 வெளியீடு...

 


G.O. Ms. No. 146, Dated: 28-06-2024 


அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் பணியிட மாறுதல் செய்தல் - பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண் : 146, நாள்: 28-06-2024 வெளியீடு...


அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் மாவட்டத்திற்கு உள்ளேயும் அதன் பின்னரும் உபரி ஆசிரியர் இருந்தால் மாவட்டத்திற்கு வெளியேயும் பணியிட மாறுதல் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு...



>>> அரசாணை (நிலை) எண் : 146, நாள்: 28-06-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பள்ளிக் கல்வி - அரசு உதவிபெறும் பள்ளிகள் - 2023-2024ஆம் கல்வி ஆண்டிற்கான பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உபரிப் பணியிடங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வி - அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2023- 2024 ஆம் ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயத்தின்படி, உபரியாகப் பணிபுரிந்துவரும் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் / மாற்றுப்பணி வழங்க அனுமதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண்: 139, நாள்: 19-06-2024 வெளியீடு...


பள்ளிக் கல்வி - அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2023-2024ஆம் ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயத்தின்படி, உபரியாகப் பணிபுரிந்துவரும் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் / மாற்றுப்பணி வழங்க அனுமதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண்: 139, நாள்: 19-06-2024 வெளியீடு...


School Education - Permission and guidelines for Deployment / deputation of surplus Secondary Grade / Graduate Teachers in government aided primary and middle schools as per staff fixation schedule for the year 2023-2024 - G.O.Ms.No. 139, Dated: 19-06-2024 Released...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு நிதயுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமன ஒப்புதல் விதிமுறைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை அரசுச் செயலாளர் கடிதம் எண்: 4132/ தொக 2(1)/ 2024, நாள்: 10-05-2024...



 உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமன விதிமுறைகள் (Appointment Procedures)...


Rules for Approval of Appointment of Teachers in Government Aided Schools - Guidelines - Government Secretary, School Education Department Letter No: 4132/ Elementary Education 2(1)/ 2024, Dated: 10-05-2024...


 அரசு நிதயுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமன ஒப்புதல் விதிமுறைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை அரசுச் செயலாளர் கடிதம் எண்: 4132/ தொக 2(1)/ 2024, நாள்: 10-05-2024...


 

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான சமையல் கூடங்கள் - மதிப்பீட்டுத் தொகை - மாணவர்கள் எண்ணிக்கை வாரியாக...


 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான சமையல் கூடங்கள் - மதிப்பீட்டுத் தொகை - மாணவர்கள் எண்ணிக்கை வாரியாக...


அனைவருக்கும் வணக்கம் 🙏,

இன்று சென்னை, ஊ.வ.இயக்குநர் அவர்களால் கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

அதன்படி,

ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான சமையல் கூடங்கள் முதன்மையாக அந்தஅந்த பள்ளியின் சொந்த நிதியிலிருந்து பழுது நீக்கம் செய்து கொள்ள வேண்டும் அல்லது புதிய கட்டடம் கட்டிக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் தங்கள் பகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்களை அணுகி புதிய கட்டடங்கள் கோரி பெறலாம்... 


அல்லது


நமக்கு நாமே திட்டத்தில் மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பகுதியினை செலுத்தி நிர்வாக அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என அறிவுரைகள் இன்று வழங்கப்பட்டது. 


 மதிப்பீட்டு தொகை...


2023-24 SoRன்படி ( அலகு தொகை) ரூ. இலட்சத்தில்...


100 க்கும் குறைவான மாணவர்கள் - ரூ.7.43


200 க்கும் குறைவான மாணவர்கள் - ரூ.8.29


300 க்கும் குறைவான மாணவர்கள் - ரூ.8.90


400 க்கும் குறைவான மாணவர்கள் - ரூ.9.40


400 க்கும் மேல் உள்ள மாணவர்கள் - ரூ.9.82


        இதனை பள்ளி நிர்வாகத்திற்கு தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன். மேலும், இவ்வலுவலத்திலிருந்து  முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.


👆மேற்கண்ட செய்தி மாவட்ட ஆட்சியரின் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  (சத்துணவு) அவர்களிடமிருந்து வந்துள்ளது.


அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2023 - 2024ஆம் ஆண்டுக்கான கற்பிப்பு மானியம் கணக்கீடு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 008684/ சி1/ 2023, நாள்: 23-01-2024...


அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2023 - 2024ஆம் ஆண்டுக்கான கற்பிப்பு மானியம் கணக்கீடு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 008684/ சி1/ 2023, நாள்: 23-01-2024...



>>> தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 008684/ சி1/ 2023, நாள்: 23-01-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐁𝐢𝐠 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 திரைப்படம் குறித்த தகவல்

𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐁𝐢𝐠 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 திரைப்படம் குறித்த தகவல்  மாற்றங்கள் மலர்ந்தே தீரும் * அது ஒரு தனியார் சர்வதேசப் பள்ளி, அங்கே 100க்கு 2 மதி...