கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

டெபிட்- கிரெடிட் கார்டுகள் பண பரிவர்த்தனை முறையில் புதிய மாற்றம்...

 டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்து வரும் பழைய முறையில், புதிய மாற்றமாக கூடுதல் காரணி அங்கீகாரம் (Additional Factor Authentication) முறையினை ரிசர்வ் வங்கி இணைத்துள்ளது. இந்த மாற்றம்  ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.



நாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில், மக்கள் பெரும்பாலும் போக்குவரத்து கட்டணம் முதல் காய்கறி உள்ளிட்ட அத்தியவாசியப் பொருட்களை வாங்குவதற்கும் கூட G-pay, Paytm உள்ளிட்ட ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செயலிகளை பயன்படுத்தி Cashless Transaction முறையை அதிகமாக பின்பற்றி வருகிறார்கள்.


மேலும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இ- வாலட், UPI, PPI உள்ளிட்ட ஆன்லைன் பேமண்ட் முறைகளை பயன்படுத்தி வீட்டின் மின்சாரம் கட்டணம், மொபைல் ரீசார்ஜ் ஆகியவைகளையும் நாம் செலுத்தி வருகிறோம்.


இந்நிலையில் நாளை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த எல்லா வகையான ஆன்லைன் பேமெண்டுகளை பயன்படுத்தி, பணப் பரிவர்த்தனை செய்ய, கூடுதல் காரணி அங்கீகாரம் (Additional Factor Authentication) முறையை ரிசர்வ் வங்கி இணைத்துள்ளது. இதன் மூலம் பழைய ஆட்டோமேடிக் ரெக்கரிங் பேமெண்ட் முறை ரத்து செய்யப்படுகிறது.


அதன்படி, பழைய ஆட்டோ டெபிட் முறையில் வாடிகையாளர்களுக்கு இஎம்ஐ கட்டணத்தை வங்கிகள், அவர்கள் கணக்கில் இருந்து மாதம்தோறும் எடுத்துக் கொள்ளும். மேலும் அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களின் துறையினரும் மாதம் சந்தாவினை, வாடிகையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக எடுத்து வந்தது. இனிமேல் வாடிகையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து எந்த வங்கி பணம் எடுக்க வேண்டுமானாலும் அவர்களின் அனுமதி அவசியமாகும்.


டெபிட் கார்டு மூலம் ஐந்தாயிரம் ரூபாய்க்கும் மேல் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டுமானால் ஒன் டைம் பாஸ்வார்டு முறையை பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை அனைத்து வகையான ஆன்லைன் பேமெண்ட் முறைகளுக்கும் பொருந்து எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் குறித்த தகவல்களை வங்கி வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கும்படி அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...