கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

BANK லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
BANK லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழ்நாடு அரசின் அனைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கிளைகளிலும் UPI வசதி அறிமுகம் (Introduction of UPI facility in all District Central Co-operative Bank Branches of Tamilnadu Government)...



தமிழ்நாடு அரசின் அனைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கிளைகளிலும் UPI வசதி அறிமுகம் (Introduction of UPI facility in all District Central Co-operative Bank Branches of Tamilnadu Government)...


 தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...


தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் யுபிஐ வசதி அறிமுகம்..


கூட்டுறவு வங்கிகளின் 922 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் மிகுந்த பயனடைவார்கள்...


ஏற்கனவே 22 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் யுபிஐ வசதி அறிமுகம்.


இறுதியாக காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலும் யுபிஐ வசதி.


தனியார், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக வங்கிச் சேவைகளை வழங்க நடவடிக்கை.


கூட்டுறவு வங்கிகள் மூலம் NEFT, RTGS உள்ளிட்ட அனைத்து வசதிகளை பெற முடியும் என விளக்கம்.


>>> ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது என்ன? (What is Unified Payments Interface (UPI))?






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆன்லைன் மற்றும் ஓ.டி.பி. கொடுப்பதன் மூலம் உங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் பறிபோனால், உடனே 155260 என்ற எண்ணை அழையுங்கள். 24 மணி நேரத்திற்குள் போன் செய்தால் உங்கள் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு (If your bank account is debited by making a payment in Online and OTP, Call 155260 immediately. If you call within 24 hours you can get your money back)...



ஆன்லைன் மற்றும் ஓ.டி.பி. கொடுப்பதன் மூலம் உங்களுடைய வங்கிக் கணக்கில் பணம்   பறிபோனால், உடனே 155260 என்ற எண்ணை அழையுங்கள். 24 மணி நேரத்திற்குள் போன் செய்தால் உங்கள் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு (If your bank account is debited by making a payment in Online and OTP, Call 155260 immediately. If you call within 24 hours you can get your money back)...


வங்கிக் கணக்கில் மோசடி; வாடிக்கையாளர் பணத்தை மீட்க ‘155260’ ஹெல்ப் லைன் அறிமுகம்: சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை...



வங்கிக் கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை நூதன முறையில் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ‘‘வங்கியில் இருந்து மேலாளர் பேசுகிறேன். உங்களது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு காலாவதியாகப் போகிறது. உடனே புதுப்பிக்காவிட்டால், கார்டு செயலிழந்து விடும்’’ என்று கூறி, வாடிக்கையாளர்களின் கார்டு எண், ரகசிய எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொள்வார்கள்.


பிறகு, போலி கார்டு தயாரித்து,வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை சுருட்டி விடுவார்கள். இதுகுறித்துபாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் போலீஸாரிடம் புகார் அளித்தாலும், இழந்த பணத்தை திரும்ப பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது.


இதை தடுக்க சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, ‘155260’ என்ற உதவி எண் (ஹெல்ப்லைன்) சைபர் க்ரைம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து சைபர் க்ரைம்காவல் ஆய்வாளர் கார்த்திகேயன்கூறும்போது, "வங்கி வாடிக்கையாளர்களின் பணம் பறிபோகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணத்தை இழந்தவர்கள்ஹெல்ப் லைன் எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தால், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டு விடலாம்" என்றார்.





நபார்டு வங்கியில் பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு வளர்ச்சி உதவியாளர் பணி (173 பணியிடங்கள்) - விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-10-2022 (NABARD BANK - Development Assistant Jobs (173 Posts) for Bachelor's degree Graduates - Last Date to Apply: 10-10-2022)...


>>> நபார்டு வங்கியில் பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு வளர்ச்சி உதவியாளர் பணி (173 பணியிடங்கள்) - விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-10-2022 (NABARD BANK - Development Assistant Jobs (173 Posts) for Bachelor's degree Graduates - Last Date to Apply: 10-10-2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


குறிப்பிட்ட எண்களிலிருந்து அழைப்பு வந்தால் SBI வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் - KYC புதுப்பிப்புகளுக்கான ஃபிஷிங் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் - பாரத ஸ்டேட் வங்கி எச்சரிக்கை (Do not engage with these numbers, & don't click on #phishing links for KYC updates as they aren't associated with SBI. #BeAlert & #SafeWithSBI) ...

 


State Bank of India @TheOfficialSBI ·Apr 20

Do not engage with these numbers, & don't click on #phishing links for KYC updates as they aren't associated with SBI. #BeAlert & #SafeWithSBI


இந்த எண்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம், மேலும் KYC புதுப்பிப்புகளுக்கான ஃபிஷிங் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம், ஏனெனில் அவை SBI உடன் தொடர்புடையவை அல்ல. #எச்சரிக்கையாக இருங்கள்



CID Assam @AssamCid · Apr 20

SBI Customers are getting calls from two nos. -+91-8294710946 & +91-7362951973 asking them to click on a phishing link for KYC update. 

Requesting all SBI customers not to click on any such phishing/suspicious link.

#BeAlert#BeSafe# 

@CMOfficeAssam @DGPAssamPolice




06-10-2021 & 09-10-2021 ஆகிய தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை - வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு...

06-10-2021 மற்றும் 09-10-2021 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு...



வங்கிக் கணக்குகளில் ஆட்டோ டெபிட் செய்ய புதிய விதிமுறைகள் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்(New rules for auto debit in bank accounts come into effect from October 1st)...

 


வங்கிக் கணக்குகளில் ஆட்டோ டெபிட் செய்ய புதிய விதிமுறைகள் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்(New rules for auto debit in bank accounts come into effect from October 1st)...


வங்கிகளில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஆட்டோ டெபிட் செய்யப்படுவதற்கான புதிய கட்டுப்பாடுகள் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஓடிடி, செல்போன் மற்றும் பிற பயன்பாட்டிற்கான கட்டணத்தை இங்கு பலர் மாதாந்திர முறையில் செலுத்தி வருகின்றனர். ஒருவேளை குறிப்பிட்ட தேதிக்கு மேல் இந்த பணத்தை செலுத்த தவறிவிட்டால், கார்டில் உள்ள பணம் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே ஆட்டோ-டெபிட் செய்யப்படும்.



சில சமயங்களில், அவசர தேவைக்கு பணம் இருப்பு வைக்கப்பட்ட அடுத்த நிமிடத்திலேயே, ஆட்டோ டெபிட் மூலம் தொகை எடுக்கப்பட்டிருக்கும். இந்த சூழலில் ஆட்டோ டெபிட் முறையில் இனி வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் பணம் எடுக்கப்படாது எனும் புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது.



அதன்படி ஒரு சேவை முடியப்போகிறது என்றால், 24 மணி நேரத்திற்கு முன்பாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலமாகவோ அல்லது இ-மெயில் மூலமாகவோ notification சென்றடையும். notification-ல் வாடிக்கையாளின் பெயர், கட்டண விவரம், எதற்கான தொகை என்பது போன்ற விவரங்கள் இருக்கும்.



இந்த notification-க்கு வாடிக்கையாளர் அனுமதி வழங்கும்பட்சத்திலேயே அந்த பணபரிவர்த்தனையை வங்கிகள் செயல்படுத்த முடியும். 5 ஆயிரம் ரூபாய்க்கு கீழே உள்ள பணபரிவர்த்தனைக்கு மட்டும், ஆர்.பி.ஐ-யால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



5 ஆயிரம் ரூபாய் மேல் பரிவர்த்தனை இருக்கும்பட்சத்தில், OTP எனும் One Time Password மூலம் வாடிக்கையாளர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டியிருக்கும்.



கடந்த மார்ச் மாதம் இந்த கட்டுப்பாடுகளை ஆர்.பி.ஐ விதித்த நிலையில், வங்கிகள் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட ஆர்.பி.ஐ. ஆறு மாதம் கால அவகாசம் கொடுத்த நிலையில், தற்போது அக்டோபர் 1ம் தேதிமுதல் விதிமுறை அமலுக்கு வருகிறது.


ஊரக வங்கிகளில் 10729 காலியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) மூலம் நிரப்பப்பட உள்ளது - விண்ணப்பிக்க கடைசி நாள்: 28-06-2021...



 ஊரக வங்கிகளில் 10729 காலியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection) ஊரக வங்கிகளில்  கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


மொத்த காலியிடங்கள்: 10729


1.பணி: Office Assistant (Multipurpose)


கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 18 - 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.


2.பணி: Officer Scale I


கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


3.பணி: Officer Scale II


கல்வித்தகுதி:


(Assistant Manager): ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.


Officer Scale-II General Banking Officer(Manager): ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்புடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


Officer Scale-IISpecialist Officers(Manager): 


Information Technology Officer: Electronics / Communication / Computer Science / Information Technology பிரிவில் பட்டப்படிப்புடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


Chartered Accountant: CA


Law Officer: சட்டப்பிரிவில் பட்டப்படிப்புடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


Treasury Manager: CA/MBA பட்டப்படிப்புடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


Marketing Officer: MBA பட்டப்படிப்புடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


Agricultural Officer: Agriculture/ Horticulture/ Dairy/ Animal Husbandry/ Forestry/ Veterinary Science/ Agricultural Engineering/ Pisciculture பிரிவில் பட்டப்படிப்புடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 21- 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.


4.பணி: OfficerScale-III (Senior Manager)


கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்புடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 21 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பட்டியலினத்தவர்/ பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ முன்னாள் படை வீரர்/ இதர பிற்படுத்தப்பட்டோர்  பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.


தேர்ந்தெடுக்கும் முறை:


இணையவழி தேர்வு


விண்ணப்பக்கட்டணம்:


Officer (Scale I, II & III):


பட்டியலினத்தவர்/ பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ முன்னாள் படை வீரர் : ₹175. 


பொது/இதர பிற்படுத்தப்பட்டோர்: ₹850


Office Assistant (Multipurpose):


பட்டியலினத்தவர்/ பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ முன்னாள் படை வீரர் : ₹175. 


பொது/இதர பிற்படுத்தப்பட்டோர்: ₹850


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியானவர்கள் https://www.ibps.in என்ற இணையதளம் மூலம் இணைய வழியில்  விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.06.2021


மேலும் விவரங்களுக்கு : https://www.ibps.in/wp-content/uploads/Advt-_CRP-RRB-X_final_final.pdf


பொதுத்துறை வங்கிகளின் இணையவழி சேவை வாடிக்கையாளர் பராமரிப்பு எண்கள்...



 பொதுத்துறை வங்கிகளின் இணையவழி சேவை வாடிக்கையாளர் பராமரிப்பு எண்கள்...



வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், நாங்கள் இணையவழி சேவைகளை வழங்குகிறோம் என முழு ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் சேவைகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.



நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் சேவைகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 



நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களை முக்கிய தேவைகளை தவிர வங்கிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனால் பல வங்கிகள் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களை வழங்கியுள்ளன மற்றும் அவற்றின் ஆன்லைன் சேவைகளை புதுப்பித்துள்ளன, இதனால் வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளைப் பெறுவதற்காக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.



ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), கனரா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா (பிஓபி) ஆகியவை தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.



ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) இரண்டு வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களை வழங்கியுள்ளது. “வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், நாங்கள் இணையவழி சேவைகளை வழங்குகிறோம். இது உங்கள் அவசர வங்கி தேவைகளுக்கு உதவும். எங்கள் கட்டணமில்லா எண்ணை 1800 112 211 அல்லது 1800 425 3800 ஐ அழைக்கவும்” என்று SBI வங்கி ட்வீட் செய்துள்ளது.



கனரா வங்கி வாடிக்கையாளர் சேவைக்காக 1800 425 0018, 1800 208 3333, 1800 103 0018, மற்றும் 1800 3011 3333 என்ற பராமரிப்பு எண்களை வழங்கியுள்ளது. இதனால் வங்கியின் வாடிக்கையாளர்கள் எந்த சிரமமும் இல்லாமல் வங்கி சேவைகளைப் பெற முடியும். வாடிக்கையாளர்கள் நேரடியாக வங்கிக்கு வராமல் இணையவழி சேவையை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.



பாங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர் சேவைக்காக 1800 1213721 மற்றும் 1800 1037188 என்ற வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களையும் பாங்க் ஆஃப் பரோடா வழங்கியுள்ளது. பாங்க் ஆப் பரோடா, பணத்தை பெறுவதற்கு வங்கிகளில் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்த்து. பாதுகாப்பான முறையில் உங்கள் பணத்தை இணையவழியில் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ட்வீட் செய்துள்ளது.



பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர் சேவைக்காக 1-800-180-2222 மற்றும் 1-800-103-2222 என்ற எண்களை வழங்கியுள்ளது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் இணைய வழியில், காசோலை புத்தகம், கட்டண ஆர்டர்கள், வரைவு, வாழ்க்கை சான்றிதழ், டி.டி.எஸ் / படிவம் 16 சான்றிதழ், 15 ஜி / எச் படிவங்கள் மற்றும் கணக்கு அறிக்கை போன்ற வசதிகளை பெறலாம் என்று தனது அதிகாரபூர்வ அறிக்கையில் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.





14-06-2021 வரை வங்கிகள் மதியம் 2 மணி வரை செயல்படும் - தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம்...

 14-06-2021 வரை வங்கிகள் மதியம் 2 மணி வரை செயல்படும் - தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம்...



தமிழகத்தில் நாளை (24-05-2021) முதல் வங்கிகள் செயல்பாடுகளில் மாற்றம் - மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு...



 தமிழகத்தில் 24-05-2021 முதல் வங்கிகள் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 வரை மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படும் - மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு...


Business Hours of the Banks in Tamilnadu.(24.05.2021 to 30.05.2021)...


>>> Click here to Download State Level Banker's Committee - Tamilnadu Announcement...


டெபிட்- கிரெடிட் கார்டுகள் பண பரிவர்த்தனை முறையில் புதிய மாற்றம்...

 டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்து வரும் பழைய முறையில், புதிய மாற்றமாக கூடுதல் காரணி அங்கீகாரம் (Additional Factor Authentication) முறையினை ரிசர்வ் வங்கி இணைத்துள்ளது. இந்த மாற்றம்  ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.



நாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில், மக்கள் பெரும்பாலும் போக்குவரத்து கட்டணம் முதல் காய்கறி உள்ளிட்ட அத்தியவாசியப் பொருட்களை வாங்குவதற்கும் கூட G-pay, Paytm உள்ளிட்ட ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செயலிகளை பயன்படுத்தி Cashless Transaction முறையை அதிகமாக பின்பற்றி வருகிறார்கள்.


மேலும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இ- வாலட், UPI, PPI உள்ளிட்ட ஆன்லைன் பேமண்ட் முறைகளை பயன்படுத்தி வீட்டின் மின்சாரம் கட்டணம், மொபைல் ரீசார்ஜ் ஆகியவைகளையும் நாம் செலுத்தி வருகிறோம்.


இந்நிலையில் நாளை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த எல்லா வகையான ஆன்லைன் பேமெண்டுகளை பயன்படுத்தி, பணப் பரிவர்த்தனை செய்ய, கூடுதல் காரணி அங்கீகாரம் (Additional Factor Authentication) முறையை ரிசர்வ் வங்கி இணைத்துள்ளது. இதன் மூலம் பழைய ஆட்டோமேடிக் ரெக்கரிங் பேமெண்ட் முறை ரத்து செய்யப்படுகிறது.


அதன்படி, பழைய ஆட்டோ டெபிட் முறையில் வாடிகையாளர்களுக்கு இஎம்ஐ கட்டணத்தை வங்கிகள், அவர்கள் கணக்கில் இருந்து மாதம்தோறும் எடுத்துக் கொள்ளும். மேலும் அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களின் துறையினரும் மாதம் சந்தாவினை, வாடிகையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக எடுத்து வந்தது. இனிமேல் வாடிகையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து எந்த வங்கி பணம் எடுக்க வேண்டுமானாலும் அவர்களின் அனுமதி அவசியமாகும்.


டெபிட் கார்டு மூலம் ஐந்தாயிரம் ரூபாய்க்கும் மேல் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டுமானால் ஒன் டைம் பாஸ்வார்டு முறையை பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை அனைத்து வகையான ஆன்லைன் பேமெண்ட் முறைகளுக்கும் பொருந்து எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் குறித்த தகவல்களை வங்கி வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கும்படி அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.


ஏப்ரல் 2021 - மாதத்தில் உள்ள வங்கி விடுமுறை நாட்கள்...

 


விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதால், முக்கியமான வங்கி பணிகளை முடிக்க திட்டமிடும் முன் இதை செய்வது அவசியம்.


வங்கிகளில் முக்கியமான வேலைகளை முடிக்க திட்டமிடும் மக்கள் அதற்கு முன் வங்கிக்கு விடுமுறை நாட்கள் என்றெல்லாம் வருகின்றன என்பதை சரிபார்த்து திட்டமிட வேண்டும். 


மற்ற மாதங்களை காட்டிலும் இந்த எப்ரல் மாதத்தில் வங்கிகள் அதிக நாள் விடுமுறையால் மூடப்பட உள்ளது. பாபு ஜக்ஜீவன் ராமின் பிறந்த நாள், பிஹு, புனித வெள்ளி, ராம் நவ்மி, தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட சில பண்டிகைகள் வங்கி விடுமுறைகளுக்கு காரணமாக உள்ளன. ஏப்ரல் மாத துவக்கமே அதாவது 1-ம்- தேதி வங்கிகளுக்கு விடுமுறை நாளாக தான் துவங்குகிறது. வணிகளின் முழுவருட கணக்கு மூடப்படுவதால் இன்று விடுமுறை அதேசமயம் மீதமுள்ளவை வழக்கமான விடுமுறை நாட்கள்.


ஏப்ரல் 2 ஆம் தேதி கிறிஸ்துவ பண்டிகையான புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான வங்கிகள் நாளையும் மூடப்பட்டிருக்கும். இருப்பினும் புனித வெள்ளிக்கு சில மாநிலங்கள் விடுமுறை அளிக்கவில்லை. எனவே இந்த விடுமுறை இல்லாத மாநிலங்களில் இருக்கும் சில வங்கிகள் வேலை செய்யும். அதன் பின் ஏப்ரல் 3-ஆம் தேதி வங்கிகளுக்கு வேலை நாள் என்றாலும் கூட அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 4-ம் தேதி மீண்டும் வங்கிகள் மூடப்படும். ஏனென்றால் அன்று வார விடுமுறையான ஞாயிற்று கிழமை ஆகும். ஏப்ரல் 6 அன்று தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால் நம் மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


 பின்னர் பிஜு விழா / போஹாக் பிஹு / சீரோபா / டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி / தமிழ் புத்தாண்டு தினம் / விஷு உள்ளிட்டவை காரணமாக பல மாநிலங்களில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை  நாளாகும். ஏப்ரல் 15 - இமாச்சல தினம் / பெங்காலி புத்தாண்டு தினம் காரணமாக அம்மாநில வங்கிகளுக்கு விடுமுறை. இதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் 21 ராம் நவ்மி / காரியா பூஜை காரணமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை நாள்.


எனினும் வங்கி விடுமுறைகள் பல மாநிலங்களில் வேறுபடுகின்றன, அந்தந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் அல்லது அந்த மாநிலங்களில் சில சந்தர்ப்பங்களின் அறிவிப்பை பொறுத்து இவற்றில் மாற்றங்கள் காணப்படுகின்றன. அதே போல ஏப்ரல் 10 மற்றும் 24-ம் தேதிகளில் மாதத்தின் இரண்டாது மற்றும் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...