கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - மிதுனம்

பிலவ வருடம் 2021-2022

சூழ்நிலைக்கேற்ப காரியத்தை செய்து முடிக்கும் திறமை கொண்ட மிதுன ராசி அன்பர்களே!!

பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.




கிரக அமைப்புகள் :


ராசிக்கு ஆறாம் இடத்தில் கேதுவும்


எட்டாம் இடத்தில் சனியும்


ஒன்பதாம் இடத்தில் குருவும்


பத்தாம் இடத்தில் புதனும்


பதினொன்றாம் இடத்தில் சூரியனும், சுக்கிரனும், சந்திரனும்


பனிரெண்டாம் இடத்தில் ராகுவும், செவ்வாயும் அமர்ந்துள்ளனர்.


கிரகப் பார்வைகள்

குரு

c 5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்

சனி

3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்

செவ்வாய்

4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு

பலன்கள் :


குருவின் பார்வை அனைத்து ராசிக்கும் கிடைக்கப் பெற்று இருப்பதினால் மனதில் நினைத்த காரியங்கள் யாவற்றையும் செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிறுதூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றமும், புத்துணர்ச்சியும் கிடைக்கப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். புதிய நபர்களிடம் உரையாடும் பொழுதும், பெரியவர்களிடத்தில் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் போதும் வார்த்தைகளில் கவனம் வேண்டும். அஷ;டம சனி நடைபெற்று கொண்டிருப்பதனால் செய்யும் பணிகளில் அலட்சியம் இல்லாமல் கவனத்தோடு இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். தந்தைவழி உறவினர்களை எதிர்பார்த்து சில காரியங்களை செய்யும் பொழுது முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் மூலம் பொருளாதார மேன்மைகள் உண்டாகும். திட்டமிட்ட செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வாரிசுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.


பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் :


தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறைந்து சுபிட்சம் மலரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகங்கள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வாகன பயணங்களில் வேகத்தைவிட விவேகத்தை கடைபிடிப்பது நல்லது.


உத்தியோகஸ்தர்களுக்கு :


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழ்நிலைகளும் சாதகமாக அமையும். சிறு வாய்ப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் அதில் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கையும், பாராட்டுகளும் அதிகரிக்கும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கிறதே என்று கவலைப்படாமல் முழு கவனத்தோடு ஈடுபட்டால் செய்யும் வேலைக்கு உண்டான பலன்கள் உரிய காலத்தில் கிடைக்கப் பெறுவீர்கள்.


பெண்களுக்கு :


பெண்களுக்கு மனதில் இருந்துவந்த குழப்பங்கள், பயம் முதலியவை நீங்கி தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பல விஷயங்களை பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். தனவரவுகள் மேன்மையடையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத மாற்றமும், முன்னேற்றமும் உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை பகிர்வதை குறைத்து கொள்வது நல்லது. சிறுதொழில் செய்வது பற்றிய சிந்தனை உள்ளவர்களுக்கு அதற்குண்டான உதவிகளும், வாய்ப்புகளும் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான சுபவிரயங்கள் ஏற்படும்.


வியாபாரிகளுக்கு :


வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். இதுவரை தொழிலில் தேங்கியிருந்த பொருட்களை விற்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய வியூகங்களை அமைப்பீர்கள். தொழில் அபிவிருத்தி தொடர்பான செயல்பாடுகளில் நிபுணர்களின் ஆலோசனை பெற்று மேற்கொள்வது நல்லது. வித்தியாசமான முயற்சிகள் மற்றும் தொழில்நுட்ப சந்தை விளம்பரங்களின் மூலம் மேன்மைகள் உண்டாகும். இணையம், வர்த்தகம் சார்ந்த வியாபாரத்தில் புதுமையான வாய்ப்புகளின் மூலம் லாபங்கள் மேம்படும்.


மாணவர்களுக்கு :


மாணவர்களுக்கு வெளியூர் சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். மேல்நிலைகல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மூலம் தெளிவு ஏற்படும். விளையாட்டு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் கிடைக்கும்.


அரசியல்வாதிகளுக்கு :


அரசியல் மற்றும் சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் காலதாமதமாக கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த தயக்கங்கள் நீங்கி தெளிவுடன் செயல்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கட்சி நிமிர்த்தமான உயரதிகாரிகளின் ஆலோசனைகள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எதிர்பாராத கட்சி நிமிர்த்தமான பயணங்கள் அடிக்கடி மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.


கலைஞர்களுக்கு :


கலை சார்ந்த துறையில் இருப்பவர்கள் முன்கோபத்தை விடுத்து பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தேவையான இடங்களில் குறைந்த அளவு பேசுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிக்க கால அவகாசம் அதிகமாகும். பயணங்கள் செல்வது தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். உடனிருப்பவர்களின் பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அறிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.


வழிபாடு :


புதன்கிழமைதோறும் துளசி இலைகளினால் சயனகோலத்தில் இருக்கக்கூடிய பெருமாளை வழிபாடு செய்துவர முயற்சி மற்றும் உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் ஏற்படும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Student Threatens to Kill Headmaster - Full Details

  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் - முழு விவரம் Student Threatens to Kill Headmasters - Full Details கேரளாவில் பாலக்காடு அனக...