கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - கன்னி

பிலவ வருடம் 2021-2022

கவனம் எதில் இருப்பினும் தன் கடமைகளில் எள்ளளவும் தவறாத கன்னி ராசி அன்பர்களே!!

பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.




கிரக அமைப்புகள் :


ராசிக்கு மூன்றில் கேதுவும்


ஐந்தில் சனியும்


ஆறில் குருவும்


ஏழில் புதனும்


எட்டில் சூரியனும், சுக்கிரனும், சந்திரனும்


ஒன்பதில் ராகுவும், செவ்வாயும் அமர்ந்துள்ளனர்.


கிரகப் பார்வைகள்

குரு

5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்

சனி

3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்

செவ்வாய்

4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு

பலன்கள் :


எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பயணம் தொடர்பான விஷயங்களில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையும், செயல்பாடுகளில் துரிதமும் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறுவீர்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது. வாகனம் தொடர்பான பயணங்களில் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த வழக்கு தொடர்பான விஷயங்களுக்கு தீர்ப்பு கிடைக்கும். புதிய நண்பர்களிடம் பேசும்போது பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். அண்டை, அயலாரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். முக்கியமான முடிவுகளை எடுக்கும்பொழுது பெரியோர்களிடம் கலந்தாலோசித்து எடுப்பது நன்மையை ஏற்படுத்தும்.


பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் :


அரசு தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். தந்தைவழி மற்றும் சம வயதினரின் ஆதரவுகள் மூலம் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.


பெண்களுக்கு :


பெண்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை ஏற்படுத்தும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமற்ற சூழ்நிலைகள் உண்டாகும். புதுவிதமான முயற்சிகளின் மூலம் பாராட்டுகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். திருமணமான தம்பதியர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவுகள் கிடைக்கும்.


மாணவர்களுக்கு :


மாணவர்கள் தேவையற்ற சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளை தவிர்ப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களை பெற இயலும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் நேர்மையுடன் இருப்பது உங்களுக்கு மேன்மையையும், பாராட்டுகளையும் பெற்று தரும். ஆராய்ச்சி சார்ந்த பணிகள் மற்றும் வெளியூர் தொடர்பான பயணங்களை எதிர்பார்த்தவர்களுக்கு சிறு சிறு அலைச்சல்கள் மூலம் சோர்வு ஏற்பட்டாலும் ஆதரவான பலன் கிடைக்கப் பெறுவீர்கள்.


உத்தியோகஸ்தர்கள் :


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், எதிர்பாராத இடமாற்றங்களும் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு மூலம் முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். நுட்பமான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி பயிற்சி செய்து பிறகு முடிவுகளை வெளியிடுவது நல்லது. உயரதிகாரிகளிடம் மற்றவர்களை பற்றி குறை கூறுவதை குறைத்து கொள்ளவும். உபரி வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.


வியாபாரிகளுக்கு :


வியாபாரம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடனும், சிந்தித்து செயல்படுவதன் மூலமும் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். மேலும், தொழில் ஆதாரத்தை நிலைநிறுத்தவும் முடியும். வேலையாட்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பயணம் நிமிர்த்தமான வியாபாரங்களில் அலைச்சல்களும், விரயங்களும் ஏற்படும். மென்பொருள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் எதிர்பாராத மாற்றங்களும், லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள்.


அரசியல்வாதிகளுக்கு :


அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் இருப்பவர்கள் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிய மனை மற்றும் வீடு தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்பட்டால் நன்மையை ஏற்படுத்தும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்களை அறிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கட்சி நிமிர்த்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.


கலைஞர்களுக்கு :


கலை சார்ந்த துறையில் இருப்பவர்கள் புதுவிதமான எண்ணங்களையும். சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை கிடைக்கப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதற்கான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். போட்டிகளில் பங்கேற்று பரிசு, பாராட்டுகளை பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் மற்றும் தடைகளை தகர்த்தெறிவீர்கள்.


வழிபாடு :


வெள்ளிக்கிழமைதோறும் வெள்ளைநிற பூக்களின் மூலம் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர எதிர்பார்த்திருந்த உதவிகளும், அதிர்ஷ்டங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Student Threatens to Kill Headmaster - Full Details

  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் - முழு விவரம் Student Threatens to Kill Headmasters - Full Details கேரளாவில் பாலக்காடு அனக...