கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - துலாம்

பிலவ வருடம் 2021-2022

உடன் இருப்பவர்களை எளிதில் புரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல் செயல்படும் துலாம் ராசி அன்பர்களே!!

பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.




கிரக அமைப்புகள் :


ராசிக்கு இரண்டில் கேதுவும்


நான்கில் சனியும்


ஐந்தில் குருவும்


ஆறில் புதனும்


ஏழில் சூரியனும், சுக்கிரனும், சந்திரனும்


எட்டில் ராகுவும், செவ்வாயும் அமர்ந்துள்ளனர்.


கிரகப் பார்வைகள்

குரு

5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்

சனி

3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்

செவ்வாய்

4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு

பலன்கள் :


மனதில் நேர்மையும், செயல்பாடுகளில் வேகமும் அதிகரிக்கும். உடல் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளாலும், அனைவரையும் அனுசரித்து செல்லும் குணங்களின் மூலமும் பலரால் விரும்பப்படுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த வம்பு, வழக்கு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பத்திரம் மற்றும் கொடுக்கல்-வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். மனை மற்றும் கட்டிய வீட்டை வாங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அது தொடர்பான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கனரக வாகனம் தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் ஏற்படுத்தும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள்கள் உண்டாகும். ஆடம்பர செலவுகள் மற்றும் பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். எதிர்பாராத வெளியூர் பயணம் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கேளிக்கை தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.


உடல் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் :


உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவதன் மூலம் சேமிப்பை அதிகப்படுத்த இயலும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகளால் சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.


மாணவர்களுக்கு :


கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகளும், ஆசிரியர்களின் ஆலோசனைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். தாயின் அரவணைப்பும், ஆறுதலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் மனதை காயப்படுத்தும் படியான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. உயர்கல்வியில் அலைச்சல்களும், சிறுசிறு குழப்பங்களும் ஏற்பட்டு நீங்கும். சமூக மற்றும் பொருளியல் தொடர்பான கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.


பெண்களுக்கு :


பெண்களுக்கு உடன்பிறந்தவர்களின் மூலம் அலைச்சல்களும், கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகளில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த பொறுப்புகள் படிப்படியாக குறையும். வாழ்க்கை துணைவருடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் பொருளாதார உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் மலரும். சிறு மற்றும் குறு தொழில் புரிபவர்கள் கடன் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்.


உத்தியோகஸ்தர்களுக்கு :


உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமிர்த்தமான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சக ஊழியர்களிடம் கோபமான பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பதன் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்பார்த்திருந்த பயணம் தொடர்பான விஷயங்கள் காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள். உபரி வருமானம் கிடைத்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். உங்களின் உழைப்பு மற்றவர்களுக்கு சாதகமாக அமையும். பொறுமையுடன் இருப்பதன் மூலம் செய்த முயற்சிக்கான பலன்கள் கிடைக்கும். நிதானமான பேச்சுக்களின் மூலம் உயரதிகாரிகளிடம் காரிய சித்திகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.


வியாபாரிகளுக்கு :


வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். இணைய வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் லாபங்கள் மேம்படும். வேலையாட்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சிறுதொழில் முனைவோருக்கு ஆதரவான சூழ்நிலைகள் அமையும். நெருப்பு சார்ந்த வியாபார பணிகளில் இருப்பவர்களுக்கு லாபமும், மேன்மையும் உண்டாகும். விவசாய பணிகளில் கிழங்கு சார்ந்த விளைச்சல்களின் மூலம் அனுகூலம் உண்டாகும்.


அரசியல்வாதிகளுக்கு :


அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செயல்பாடுகளின் மூலம் நன்மைகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கட்சி நிமிர்த்தமான உயரதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சாதகமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். தனவரவும், சேமிப்பும் அதிகரிக்கும் காலக்கட்டங்கள் ஆகும். பயணம் தொடர்பான விஷயங்களில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படும். செய்கின்ற புதிய முயற்சிகளில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.


கலைஞர்களுக்கு :


கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான, வித்தியாசமான சிந்தனைகள் ஏற்படும். தனவரவுகளால் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வீடு மற்றும் வாகனம் தொடர்பான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஆதரவு சற்று கால தாமதமாகவே கிடைக்கும்.


வழிபாடு :


செவ்வாய்க்கிழமைதோறும் செவ்வரளி பூக்களினால் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர சுபகாரியம் தொடர்பான செயல்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Internet Service Charges for Schools - Releasing Funds - State Project Director's Order

பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் - நிதி விடுவிப்பு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு Internet Service Charges for Schools - Releasing ...