கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்- விருச்சிகம்

பிலவ வருடம் 2021-2022

போராட்ட குணமும், மனப்பக்குவமும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!!

பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.




கிரக அமைப்புகள் :


ஜென்ம ராசியில் கேதுவும்


மூன்றில் சனியும்


நான்கில் குருவும்


ஐந்தில் புதனும்


ஆறில் சூரியனும், சுக்கிரனும், சந்திரனும்


ஏழில் செவ்வாயும், ராகுவும் அமர்ந்துள்ளனர்.


கிரகப் பார்வைகள்

குரு

5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்

சனி

3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்

செவ்வாய்

4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு

பலன்கள் :


பல துறைகள் பற்றிய விழிப்புணர்வும், அறிவும் கிடைக்கப் பெறுவீர்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். செய்யும் காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இளைய உடன்பிறப்புகளின் மூலம் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சிறு வருவாய் ஆனாலும் அதை சேமிப்பது எவ்விதம் என்பது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்களை பற்றிய வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். மனதில் தேவையற்ற சிந்தனைகள் மற்றும் குழப்பங்கள் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். தாயின் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.


பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் :


குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். இதுவரை இருந்துவந்த நெருக்கடிகள் குறைந்து மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் ஆதரவு மற்றும் ஆலோசனைகளின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவீர்கள். வாகனம் தொடர்பான பயணங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். தொண்டை வலி தொடர்பான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும்.


மாணவர்களுக்கு :


மாணவ, மாணவியர்கள் கல்வி தொடர்பான பணிகளில் அலட்சியம் இல்லாமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை எழுதி பார்ப்பது நன்மையை ஏற்படுத்தும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சலுக்கு பின்பு ஆதாயம் உண்டாகும்.


பெண்களுக்கு :


பெண்கள் புதிய முடிவுகளை எடுக்கும் பொழுது பெரியோர்களிடம் கலந்தாலோசித்து எடுப்பது நல்லது. பேச்சுக்களில் பொறுமை வேண்டும். புதிய முயற்சிகள் மற்றும் இடமாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் காலதாமதத்திற்கு பின்பு சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறுசிறு இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். சிறு தொழில் புரிவோருக்கு எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கப் பெறுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவுகள் மேம்படும்.


உத்தியோகஸ்தர்களுக்கு :


உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், மறைமுகமான சில எதிர்ப்புகளும், தடைகளும் ஏற்பட்டு நீங்கும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். உயரதிகாரிகளிடம் எதிர்பார்த்த ஆதரவுகள் காலதாமதமாக கிடைக்கும். ஆனால், சக ஊழியர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தும். வேலையில் இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற ரகசியங்களை பகிர்வதை தவிர்ப்பது நல்லது.


வியாபாரிகளுக்கு :


வியாபாரம் தொடர்பான விஷயங்களில் அபிவிருத்தியான வாய்ப்புகள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். புதிய கிளைகள் தொடங்குவது தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாடிக்கையாளர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபார ஸ்தலங்களை மாற்றுவது தொடர்பான முயற்சிகள் கைகூடும்.


அரசியல்வாதிகளுக்கு :


அரசு மற்றும் சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுகமான தடைகளை தகர்த்தெறிவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களின் விவரங்களை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உயரதிகாரிகளின் மூலம் சில முன்னேற்றமான காரியங்களை செய்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும்.


கலைஞர்களுக்கு :


கலைத்துறையில் இருப்பவர்களுக்கு படைப்புகள் வெளிப்பட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். வாகனம் தொடர்பான பயணங்களில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். வேகத்தை விட விவேகத்துடன் கூடிய முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கும்.


வழிபாடு :


செவ்வாய்க்கிழமைதோறும் நரசிம்மரை வழிபாடு செய்துவர நெருக்கடியான சூழ்நிலைகள் மறைந்து மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.


 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Student Threatens to Kill Headmaster - Full Details

  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் - முழு விவரம் Student Threatens to Kill Headmasters - Full Details கேரளாவில் பாலக்காடு அனக...