கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - கடகம்

பிலவ வருடம் 2021-2022

அனைவரிடத்திலும் அன்பும், கற்பனை திறனும், எதையும் சிந்தித்து செயலாற்றும் திறன் கொண்ட கடக ராசி அன்பர்களே!!

பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.




கிரக அமைப்புகள் :


ராசிக்கு ஐந்தில் கேதுவும்


ஏழில் சனியும்


எட்டில் குருவும்


ஒன்பதில் புதனும்


பத்தில் சூரியனும், சுக்கிரனும், சந்திரனும்


பதினொன்றில் ராகுவும், செவ்வாயும் அமர்ந்துள்ளனர்.


கிரகப் பார்வைகள்

குரு

5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்

சனி

3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்

செவ்வாய்

4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு

பலன்கள் :


வாக்கு சாதுர்யத்தின் மூலம் பல காரியங்களை சாதித்துக் கொள்ள வாய்ப்புகள் ஏற்படும். எண்ணங்களில் புதுவிதமான மாற்றங்களும், செயல்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்களில் வித்தியாசங்களும் ஏற்படும். இளைய உடன்பிறப்புகளிடம் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். பத்திரம் தொடர்பான விஷயங்களில் பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு முடிவெடுப்பது நன்மையை ஏற்படுத்தும். ஆன்மிக பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு அமையும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவும், அறிமுகங்களும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவு ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கு பிடித்த ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். மனதை குழப்பி கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவான பதில்கள் கிடைக்கும். நீண்டநாள் சேமிப்புகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். உறவினர்களிடத்தில் கோபத்தினை விடுத்து பொறுமையுடன் செயல்பட்டால் காரியசித்தி ஏற்படும். வீடு மற்றும் மனை தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்களை செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.


பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் :


குடும்ப உறுப்பினர்களின் உதவி மற்றும் புதிய நபர்களின் ஆதரவுகள் மூலம் தனவரவுகளில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் குறையும். பேச்சுக்களில் கோபமின்றி பொறுமையுடன் இருப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும்.


உத்தியோகஸ்தர்களுக்கு :


உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் எதிர்பாராத ஒத்துழைப்புகள் மூலம் மேன்மை உண்டாகும். புதிய வேலை மற்றும் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் உபரி வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடன் சார்ந்து இருந்துவந்த பிரச்சனைகள் எதிர்பாராத விதத்தில் அகலும். எதிர்பாலின மக்களிடத்தில் தேவையற்ற விஷயங்களை பகிர்வதை குறைத்து கொள்ளவும்.


மாணவர்களுக்கு :


மாணவர்கள் தேவையற்ற குழப்பங்களை தவிர்த்து உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து செயல்படுவது நல்லது. பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படித்து எழுதி பார்ப்பது மேன்மையை ஏற்படுத்தும். கேளிக்கை தொடர்பான விஷயங்களில் ஆர்வங்களை குறைத்து கொள்வது நல்லது. மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதற்குண்டான அனுபவங்களும், பலன்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.


பெண்களுக்கு :


பெண்களுக்கு மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கவனக்குறைவுகள் மூலம் அவ்வப்போது அவப்பெயர் ஏற்பட்டு மறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை மற்றும் காலதாமதங்கள் அகலும். சிலருக்கு அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். திருமணமான பெண்கள் குழந்தை விஷயத்தில் சற்று பெரியோர்களின் ஆலோசனை மற்றும் மருத்துவர்களின் பரிந்துரையின்படி நடப்பது நல்லது.


வியாபாரிகளுக்கு :


வாகனம் தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபங்களும், புதிய வாய்ப்புகளும் ஏற்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.


அரசியல்வாதிகளுக்கு :


அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் இருப்பவர்கள் கூட்டத்தில் உரையாடும் பொழுது கோபத்தை விடுத்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது. அரசியல் சார்ந்த முடிவுகளில் பெரியோர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது மேன்மையை ஏற்படுத்தும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் சோர்வும், அவ்வப்போது விரக்தியும் ஏற்பட்டு மறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் தூக்கமின்மையும், ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகளும் ஏற்பட்டு மறையும். ஆகவே, உணவு சார்ந்த விஷயங்களிலும், தூக்கத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது.


கலைஞர்களுக்கு :


கலை சார்ந்த துறையில் இருப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு செயல்படுவதை குறைத்து கொள்வது நல்லது. முயற்சிக்கு உண்டான ஊதியமும், அங்கீகாரமும் காலதாமதமாகவே கிடைக்கும். சம்பள விஷயத்தில் சற்று விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. மூத்த கலைஞர்களிடம் விதண்டாவாதங்களை தவிர்ப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். செய்யும் முயற்சிகளில் முழு ஈடுபாட்டோடு செய்வதன் மூலம் மேன்மை உண்டாகும். வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.


வழிபாடு :


வியாழக்கிழமைதோறும் சிவப்பு நிறப்பூக்கள் மூலம் ராகவேந்திரரை வணங்கி வர எண்ணங்களில் தெளிவும், புத்துணர்ச்சியும் கிடைக்கப் பெறுவீர்கள்.


 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Student Threatens to Kill Headmaster - Full Details

  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் - முழு விவரம் Student Threatens to Kill Headmasters - Full Details கேரளாவில் பாலக்காடு அனக...