கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரியர் தேர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரியர் தேர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2001-2002ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு - அண்ணா பல்கலைக்கழகம்(Arrear Re-examination opportunity for students who failed in engineering course from the academic year 2001-2002 - Anna University)...

 2001-2002ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு.


செமஸ்டர் தேர்வு நடைபெறும் போது தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பொறியியல் அரியர் தேர்வு எழுத மாணவர்களுக்கு சலுகை...

இன்ஜினியரிங் மாணவர்களில் 'அரியர்' உள்ளவர்கள் இன்னும் மூன்று செமஸ்டர் தேர்வுகளை கூடுதலாக எழுதி கொள்ளலாம் என அண்ணா பல்கலை அனுமதி அளித்துள்ளது.




அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு பதிவாளர் கருணாமூர்த்தி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படித்த மாணவர்களில் குறித்த காலத்தில் அரியர் தேர்வுகளை முடிக்காதவர்கள் தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.




இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் 2020 ஜூலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் '1990 முதல் படிப்பில் சேர்ந்தவர்களுக்கு இன்னும் மூன்று முறை அரியர் தேர்வை எழுத அவகாசம் வழங்கலாம்' என முடிவானது. இதையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்ட அண்ணா பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில் அவகாசம் முடிந்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஆக. - செப். தேர்வு அடுத்த ஆண்டு பிப். - ஆக. தேர்வு ஆகியவற்றில் பங்கேற்க சிறப்பு அனுமதி தர முடிவானது.




அதன்படி அண்ணா பல்கலையின் சென்னை வளாகத்தில் 1990 முதல் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் சேர்ந்தவர்களும்; அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில் 2001ம் ஆண்டின் மூன்றாவது செமஸ்டர் மற்றும் 2002 முதல் செமஸ்டர் முதலும் சேர்ந்த மாணவர்கள் கூடுதல் அவகாச சலுகையை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரியர் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்...

  •  அரியர் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

  • தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி அடைய முடியாது  - தமிழக அரசு

  • அரியர் தேர்வு ரத்து அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு தகவல்

  • அரியர் மாணவர்களுக்கு மே 17ஆம் தேதி முதல் தேர்வு நடத்தப்படும் - தமிழக அரசு


ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் - தமிழக அரசு


கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதில் அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தனும் உயர்நீதிமனத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அரியர் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக் கொள்ள இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், ஏதேனும் தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்கள்.


இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அரியர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் எனவும் அந்த தேர்வை எழுதாதவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படமாட்டார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்தது. இதை ஏற்ற நீதிமன்றம் 8 வாரத்திற்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் இதுகுறித்த அறிக்கையை ஜூலை 2வது வாரத்திற்கு பிறகு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.



அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த அரசின் உத்தரவை ஏற்க இயலாது - உயர்நீதிமன்றம்...

 அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த அரசின் உத்தரவை ஏற்க இயலாது என சென்னை உயர்நீதிமன்றம்  தெரிவித்துள்ளது. அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. 


கல்வியின் புனிதத்தில் சமரசம் செய்யாமல் எந்த மாதிரியான தேர்வு நடைமுறையை மேற்கொள்ளலாம்? யூஜிசி,  தமிழக அரசு கலந்து ஆலோசிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரியர் தேர்வுகளை ரத்து செய்து, தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.


இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடக்கத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. இதனால் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வைத் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது.


அதேபோல் கல்லூரியில் இறுதி செமஸ்டரை தவிர்த்து மற்ற செமஸ்டரில் அனைவரும் தேர்ச்சி என அறிவித்தது. மேலும், அரியர் தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.


மாணவர்களிடையே இதற்கு வரவேற்பு இருந்தது. ஆனால் எதிர்ப்பும் கிளம்பியது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது. தேர்வுகளை நடத்த தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கோர்ட் தெரிவித்துள்ளது.


மேலும், தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்?, தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை பேர்? என்பதை பல்கலைக்கழகங்கள் வாரியாக தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கு வருகிற 15-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.



🍁🍁🍁 அரியர் தேர்வு முடிவு வெளியீட்டில் தொடரும் இழுபறி - உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் பாதிப்பால் மாணவர்கள் தவிப்பு...

 அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி வழங்குவதில் நிலவும் இழுபறி காரணமாக கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்துசெய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். அதன்பின் அரியர் பாடத்தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தியுள்ள மாணவர்களுக்கும் தேர்வு எழுவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

ஏஐசிடிஇ எதிர்ப்பு

இந்த அறிவிப்பு அரியர் வைத்திருந்த 8 லட்சம் மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி வழங்கும் பணிகளை உயர்கல்வித் துறைதீவிரப்படுத்தியது. இந்நிலையில் அரியர்பாடங்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும், அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. எனவே, அரியர் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வருகின்றன. இதனால் மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:

இளநிலை பட்டப்படிப்பு முடித்தமைக்கான சான்றிதழ்களை சமர்ப்பித்தால்மட்டுமே முதுநிலை படிப்புக்கான சேர்க்கைக்கு மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்பது உயர்கல்வித் துறை பின்பற்றும் விதியாகும். இதன் காரணமாக வெவ்வேறு பருவங்களில் அரியர் வைத்துள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர முடியாத சூழல் நிலவுகிறது.

அதேபோல், முதுநிலை பட்டப்படிப்புகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் பிஎச்.டி உட்பட தங்களின் உயர்கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவை மாணவர்களிடம் கடும் மன உளைச்சலையும், அடுத்தகட்ட முடிவுகளை மேற்கொள்வதில் குழப்பத்தையும் உருவாக்கியுள்ளது.

மேலும், பல்வேறு பல்கலைக்கழகங்கள் இறுதி பருவத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ,எம்இ, எம்.ஆர்க் போன்ற பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகள் மற்றும்முதுநிலை கலை, அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

விதிகளில் திருத்தம்

அதேநேரம் அறிவித்தபடி அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி வழங்குவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. ஆனால்,உயர் நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு வரும்வரைஇந்த விவகாரத்தில் தெளிவான முடிவுகளை மேற்கொள்ள முடியாது. இதற்கு தற்காலிக தீர்வாக நடப்பு ஆண்டு மட்டும் விதிகளில் திருத்தம் செய்து பட்டப்படிப்பு முடித்தமைக்கான சான்றிதழ்கள் இல்லாமல் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளஅரசு அனுமதிக்க வேண்டும். மேலும், தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின் சான்றிதழ்களை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து கல்வியாளர்கள் செல்வக்குமார், ஜெயபிரகாஷ் காந்தி ஆகியோர் கூறியதாவது: அரியர் தேர்வு முடிவு நிறுத்திவைப்பால் உயர்கல்வி  மட்டுமின்றி வளாக நேர்காணலில் வேலைவாய்ப்புகளை பெற்றிருந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பணிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் மாணவர்கள் பாதிப்பு

தற்போதைய சூழலில் வாய்ப்பிருந்தும் மாணவர்கள் தங்களுக்கான மாத வருவாயை பெறமுடியாத தவிப்பில் உள்ளனர். இவை பொருளாதாரரீதியாக அவர்கள் குடும்பங்களுக்கு பெரிதும் பின்னடைவாக அமைந்துள்ளது. மேலும்,பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டுபடிக்கும் மாணவர்கள் பலரின் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

இதற்கிடையே பல்வேறு வெளிமாநில பல்கலை.களில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால், தேர்வு முடிவுகள் வெளியிடப்படாதால் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை நிலவுகிறது.

எனவே, கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் நலன் கருதி அரியர் மற்றும் பருவத்தேர்வில் நிலவும் சிக்கல்களைக் களைந்து அவர்களின் எதிர்காலத் திட்டங்களை நோக்கி பயணிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.

அதேபோல், தேர்வில் காப்பி அடித்ததாகக் கூறி பல்வேறு இறுதி ஆண்டு மாணவர்களின் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்திவைத்துள்ளது. இம்முடிவை பல்கலை. மறுபரிசீலனை செய்வதுடன், குறைந்தது அந்த மாணவர்களுக்கான மாற்று தேர்வுகளையாவது விரைவாக நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...