கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Google Pay & Pay Tm போன்ற மொபைல் வேலெட்களில் புதிய மாற்றங்கள் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு...

 டிஜிட்டல் சேவைகளிலும், பண பரிவர்த்தனைகளிலும் அதிகமாக பயன்படுத்தப்படும் மொபைல் வேலெட் சேவைகளில் தற்போது புதிய மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதாக ரிசர்வ் வங்கி புதிய முடிவினை வெளியிட்டு உள்ளது.



இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் சேவைகளிலும், பண பரிவர்தனை பணிகளில் அதிகமாக Google Pay & Pay Tm மொபைல் வேலெட் சேவைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மொபைல் ரீசார்ஜ், ஆன்லைன் டாக்ஸி புக்கிங், ஆன்லைன் பேமெண்ட் சேவை போன்ற பணிகளில் மிக முக்கிய சேவை பயன்பாடாக மொபைல் வேலெட் உள்ளது.


ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புகள் :

ஒரு வாடிக்கையாளர் மொபைல் வேலெட்-ல் இருந்து பணத்தை வங்கிகளுக்கு அனுப்பவும், ஒரு மொபைல் வேலெட்-ல் இருந்து பிற நிறுவனத்தின் மொபைல் வேலெட்-களுக்கு பணம் அனுப்பவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.


இது வரை 1 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே வேலெட், ப்ரீபெய்டு கார்டு போன்ற ப்ரீபெய்டு இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்-க்கு இருப்புத் தொகை வைத்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.


அதனை தற்போது ரூ.2 லட்சம் வரை உயர்த்தியுள்ளதாக RBI வங்கி அறிவித்து உள்ளது.


RTGS மற்றும் NEFT போன்ற பண பரிவர்த்தனை மற்றும் பரிமாற்ற முறையினை பயன்படுத்திக் கொள்ள மொபைல் வேலெட் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


இந்த மொபைல் வேலெட்டினை பயன்படுத்தி ஏடிஎம் களில் பணம் எடுத்திடவும் மாற்றம் கொண்டு வர ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.


இப்புதிய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் வங்கி கணக்கு திறக்க வேண்டிய தேவை இல்லை. இந்த சேவைகளின் மூலமாகவே அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns