கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பிக்ஸட் டெபாசிட் வட்டியைக் கூடுதலாகத் தரும்-'Immune India deposit scheme'- மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் நடவடிக்கை...

 கொரோனா வைரஸ் பரவலில் இரண்டாம் அலை, மிகத் தீவிரமாகி வருகிறது. கொரோனா தடுப்பூசிக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அதைப் போட்டுக்கொள்வதில் மக்களுக்கு அச்சமும், ஏராளமான குழப்பங்களும் இருந்து வருகின்றன. இதனாலேயே மக்களில் பலர், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வருவதில்லை.


கடந்த திங்கள்கிழமையன்று புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 1,68,912-ஆக இருந்தது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,35,27,717-யைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான், மக்கள் அனைவரையும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அரசாங்கம் அறிவுறுத்தி வருகிறது.



மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய அரசு சில நடவடிக்கை எடுத்து வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வங்கி பிக்ஸட் டெபாசிட் வட்டியைக் கூடுதலாகத் தரும் விதமாக 'சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா' புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது.


இந்த அறிவிப்பின்படி, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்காக பிரத்யேகமாக 'Immune India deposit scheme' என்கிற புதிய சேமிப்புத் திட்டத்தை இந்த வங்கி அறிமுகம் செய்திருக்கிறது. மற்ற பிக்ஸட் டெபாசிட் போலத்தான், இந்த பிரத்யேக டெபாசிட் திட்டமும் செயல்படும் என்றாலும், 1,111 நாள்கள் முதிர்வுக் காலம் கொண்ட இந்த பிக்ஸட் டெபாசிட் சேமிப்புத் திட்டத்தில், வழக்கமான வட்டி விகிதத்தைவிட கூடுதலாக 0.25% வட்டியை வாடிக்கையாளர்கள் பெறலாம்.


மூத்த குடிமக்கள் 0.50% வட்டியை கூடுதலாகப் பெறமுடியும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வாடிக்கையாளர்கள் இந்த சேமிப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியாது. இந்த சலுகையானது குறிப்பிட்ட நாள்களுக்கு மட்டும்தான் என 'சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா' வங்கியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns