கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சிறுசேமிப்பு பணம் ரூ.10,135ஐ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய அரசுப் பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவன்...

 கொரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளுடைய வாழ்க்கை வீடு எனும் சிறு கூட்டிற்குள் அடங்கிவிட்டது. பள்ளி பாடங்களைத் தொடர்வதற்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு பிரதானமாக ஐபோன், Tab, கணினி ஆகியவை அவசியமாகிவிட்டது. குறிப்பாகக் கிராமப்புற பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு இணைய வசதியுடன் கூடிய தொழில்நுட்பங்கள் அத்தியாவசிய தேவையாகும்.


இந்நிலையில் வேதாரண்யம் அடுத்த தகட்டூர் பகுதியை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவர் சுஹாஷன் தன்னுடைய ஆன்லைன் படிப்பிற்காக சஞ்சாய்கா திட்டத்தின் கீழ் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து பல மாதங்களாக சிறுக சிறுக பணம் சேர்த்து வைத்துள்ளார்.


சிறுவனின் சிறுசேமிப்பு

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதி வழங்க அனைவரும் முன்வரவேண்டும் எனப் பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்தார்.



முதல்வரின் இந்த கோரிக்கை வசதிபடைத்தவர்களிடம் சென்றடைந்ததை விட சுஹாஷன் போன்ற சாதாரண ஏழை குழந்தைகளிடம் மனதில் இடம்பிடித்துள்ளது.


நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் - கீதா தம்பதியரின் மகன் சுஹாஷன். ராம கோவிந்தன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவரான இவர் டேப் வாங்குவதற்காகத் தந்தையிடம் பணம் வாங்கி, சஞ்சாய்கா திட்டத்தில் சிறுக சிறுக சேர்த்து வந்துள்ளார்.


இந்நிலையில் கொரோனா நிவாரண நிதி வழங்க அனைவரும் முன்வரவேண்டும், என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து, தனது பள்ளி ஆசிரியர் அறிவுரைப்படி தான் சேர்த்து வைத்திருந்த ரூபாய் 10 ஆயிரத்து 135 பணத்தை கொரோனா நிதியாக வழங்கியுள்ளார்.


பெற்றோருடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சிறுவன் சுஹாசன் 3 ஆண்டுகளாக சிறுகச் சிறுக சேர்த்த 10 ஆயிரத்து 135 ரூபாய்க்கான காசோலையை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரிடம் வழங்கினார்.


சென்னை போன்ற நகர பகுதியில் Tab போன்ற தொழில்நுட்ப எளிதில் கிடைத்துவிடும். ஒரே வீட்டில் தனித்தனியாகப் பலர் இந்த சாதனத்தைப் பயன்படுத்துவார்கள். ஆனால் கிராமப்புறத்தைச் சேர்ந்த சுஹாஷன் தன்னுடைய ஆன்லைன் வகுப்பிற்காக ஆசை ஆசையாக tab வாங்க சேர்த்துவைத்த பணத்தை முதல்வர் கொரோனா நிதிக்கு வழங்கியுள்ளார்.


தான் சேர்த்துவைத்த தொகையைக் கொடுப்பதால் தனக்கு tab வாங்க இன்னும் பல நாட்கள் ஆகும் என்பது சுஹாஷனுக்கு தெரியும். ஆனால் இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிர் காக்க உதவிக்கரம் நீட்டிய சிறுவனின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...