இடுகைகள்

சஞ்சாயிகா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறுசேமிப்பு பணம் ரூ.10,135ஐ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய அரசுப் பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவன்...

படம்
 கொரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளுடைய வாழ்க்கை வீடு எனும் சிறு கூட்டிற்குள் அடங்கிவிட்டது. பள்ளி பாடங்களைத் தொடர்வதற்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு பிரதானமாக ஐபோன், Tab, கணினி ஆகியவை அவசியமாகிவிட்டது. குறிப்பாகக் கிராமப்புற பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு இணைய வசதியுடன் கூடிய தொழில்நுட்பங்கள் அத்தியாவசிய தேவையாகும். இந்நிலையில் வேதாரண்யம் அடுத்த தகட்டூர் பகுதியை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவர் சுஹாஷன் தன்னுடைய ஆன்லைன் படிப்பிற்காக சஞ்சாய்கா திட்டத்தின் கீழ் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து பல மாதங்களாக சிறுக சிறுக பணம் சேர்த்து வைத்துள்ளார். சிறுவனின் சிறுசேமிப்பு இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதி வழங்க அனைவரும் முன்வரவேண்டும் எனப் பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்தார். முதல்வரின் இந்த கோரிக்கை வசதிபடைத்தவர்களிடம் சென்றடைந்ததை விட சுஹாஷன் போன்ற சாதாரண ஏழை குழந்தைகளிடம் மனதில் இடம்பிடித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் - கீதா தம்பதியரின் மகன் சுஹாஷன். ராம கோவிந்தன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...