கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அமைச்சர்களும், துறைகளும் (அமைச்சரவையில் 19 முன்னாள் அமைச்சர்கள்; 15 புதுமுகங்கள்; 2 பெண்கள் - முழு விவரம் வெளியீடு)...

1. முதல்வர் ஸ்டாலின் - பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, மாற்றுத் திறனாளிகள் நலன்.

2. துரை முருகன் - சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.

3. கே.என். நேரு - நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல் 

4. இ. பெரியசாமி - கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்.

5. பொன்முடி - உயர்கல்வித் துறை, தொழிற்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்

6. எ.வ. வேலு - பொதுப் பணிகள் (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்

7. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் - வேளாண்மை, கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை

8.கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் - வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை

9.தங்கம் தென்னரசு - தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை, தொல்பொருள்

10. எஸ். இரகுபதி - சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம்

11. சு. முத்துசாமி - வீட்டுவசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்.

12. கே.ஆர். பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சி, ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள்.

13. தா.மோ. அன்பரசன் - ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உள்பட சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரியம்.

14. மு.பெ. சாமிநாதன் - செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்.

15. பி. கீதா ஜீவன் - மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்

16. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் - மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம், கால்நடை பராமரிப்பு

17. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் - போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கஊர்தி சட்டம்

18. கா. ராமச்சந்திரன் - வனத்துறை

19. அர. சக்கரபாணி - உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு

20. வி. செந்தில் பாலாஜி - மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை

21. ஆர். காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல்

22. மா. சுப்பிரமணியம் - மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்

23. பி. மூர்த்தி - வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம்,

24. எஸ்.எஸ். சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்

25. பி.கே. சேகர் பாபு - இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை

26. பழனிவேல் தியாகராஜன் - நிதித்துறை திட்டம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை

27. சா.மு.நாசர் - பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி

28. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை

29. அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித் துறை

30. சிவ.வீ. மெய்யநாதன் - சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை

31. சி.வி.கணேசன் - தொழிலாளர் நலன்,திறன் மேம்பாட்டுத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி.

32. த.மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத் துறை

33. மா.மதிவேந்தன் - சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத் துறை




தமிழக சட்டசபையின் புதிய அமைச்சரவையின் பட்டியலில் புதிய முகங்கள் 15 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள்.

இதில் 19 பேர் முன்னாள் அமைச்சர்களாவர்.

ஸ்டாலின், துரைமுருகன், கே என் நேரு, ஐ பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்ஆர்கே பன்னீர் செல்வம், கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், தாமோ அன்பரசன், வெள்ளக்கோவில் சாமிநாதன், கீதா ஜீவன் ஆகியோர் ஏற்கெனவே 2006 இல் அமைச்சர்களாக இருந்தவர்கள். 

அது போல் திமுக ஆட்சியில் வேறு காலங்களிலும் அதிமுக ஆட்சியிலும் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்தவர்கள் என்றால் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், செந்தில் பாலாஜி ஆகியோராவர்.

 ஆர் காந்தி, மா சுப்பிரமணியன், பி மூர்த்தி, சிவசங்கர், பி.கே சேகர் பாபு, செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ், மெய்யநாதன், சிவி கணேசன், மனோ தங்கராஜ், மதிவேந்தன், கயல்விழி, நாசர், பழனிவேல் தியாகராஜன், சக்கரபாணி ஆகியோர் அந்த புதுமுகங்களாவர்.

அமைச்சரவையில்  கீதா ஜீவன், கயல்விழி செல்வராஜ் ஆகிய இரண்டு பெண் அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இதில் கீதா ஜீவன் ஏற்கனவே அமைச்சராக இருந்தவர். கயல்விழி செல்வராஜ் புதியவர் ஆவார். இவர், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனை, தாராபுரம் தொகுதியில் தோற்கடித்தவர். 

அதனாலேயே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கி கவுரவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கயல்விழி செல்வராஜூக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ள க.ராமசந்திரன் வனத்துறை அமைச்சராகியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற கா.ராமசந்திரன் கூடலூர் தொகுதியில் 2006-ம் ஆண்டு முதன்முறையாக வெற்றி பெற்று, கதர் வாரியத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

இரண்டாம் முறையாக 2011-ம் ஆண்டு குன்னூர் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றார். 

இந்நிலையில், 2016-ம் ஆண்டு இவருக்குப் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை.

தற்போது 2021-ம் தேர்தலில் மூன்றாம் முறையாக வெற்றி பெற்ற கா.ராமசந்திரன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் கப்பச்சி டி.வினோத்தை 4,105 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

2006 இல் கதர் வாரியத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவருக்கு தற்போது வனத்துறை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. 

2000 முதல் 2014-ம் ஆண்டு வரை நீலகிரி மாவட்டச் செயலாளராக இருந்தவர். தற்போது தேர்தல் பணிக்குழுச் செயலாளராக உள்ளார்.

பியுசி பிடித்த க.ராமசந்திரன், மனைவி பேபி, மகன் ஆர்.மதுசூதன் ஆகியோருடன் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள எடப்பள்ளி கிராமத்தில் வசித்து வருகிறார்.

முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த  இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற கீதா ஜீவனுக்கு சமூக நலன்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரித்துறை ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...