கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சி.ஏ., தேர்வு தேதி மாற்றம் - ஜூலையில் நடக்கும் என எதிர்பார்ப்பு...

 


இந்த மாதம் நடத்தப்பட இருந்த, சி.ஏ., தேர்வுகள், ஜூலையில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பான, ஐ.சி.ஏ.ஐ., கூடுதல் செயலர் கார்க் வெளியிட்ட அறிவிப்பு:'ஆடிட்டர்' பணிக்கான சி.ஏ., தேர்வுகள், ஜூலையில் நடத்தப்பட உள்ளன. பழைய மற்றும் புதிய பாட திட்டத்தில், இடைநிலை சி.ஏ., தேர்வு, இறுதி தேர்வு மற்றும் இன்சூரன்ஸ் மற்றும் இடர் மேலாண்மை தேர்வுகள், சர்வதேச வரிகள் மதிப்பீட்டு தேர்வு போன்றவை, இந்த மாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.


அவற்றை, ஜூலை, 5ல் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான கால அட்டவணை, விரைவில் அறிவிக்கப்படும். கூடுதல் விபரங்களை, www.icai.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...