கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்ச்சி பெற்றவர்களுக்கும் மறுதேர்வு இன்ஜினியரிங் கல்லூரிகள் மீது புகார்...

 


தேர்ச்சி பெற்ற பாடங்களுக்கு மீண்டும் தேர்வு எழுதும்படி, இன்ஜினியரிங் கல்லுாரிகள் கட்டாயப்படுத்துவதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, பிப்ரவரியில் 'ஆன்லைன்' வழி தேர்வு நடந்தது. மாணவர்கள் ஆன்லைனில் இருந்தபடி, மொபைல்போன் மற்றும் 'லேப்டாப்' வாயிலாக தேர்வு எழுதினர்.

 

ஆன்லைனில் மாணவர்களின் முகம் மற்றும் கண் அசைவுகள், அப்போது கேட்கும் ஒலி ஆகியவை பதிவாகும் வகையில், 'சாப்ட்வேர்' பயன்படுத்தப் பட்டது.



அறிவிப்பு

இந்த தேர்வில், பல மாணவர்களின் கண் அசைவுகள் மற்றும் அருகில் கேட்ட சத்தங்களின் அடிப்படையில், பலர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், காப்பி அடித்ததாகவும், சாப்ட்வேர் பதிவு செய்தது. அதனால், 30 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.


இது குறித்து, மாணவர்கள் தரப்பில் பரவலாக புகார் எழுந்ததால், மறு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மறு தேர்வு, ஜூன் 14ல் துவங்க உள்ளது.'ஏற்கனவே நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், விருப்பம் இருந்தால், மீண்டும் மறு தேர்வு எழுதலாம்; அவர்களுக்கு மறு தேர்வு கட்டாயமில்லை. மற்ற மாணவர்கள் கட்டாயம் மறுதேர்வில் பங்கேற்க வேண்டும்' என, அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார்.


கோரிக்கை

இந்நிலையில், பல தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள், தங்கள் மாணவர்கள், ஏற்கனவே நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், மீண்டும் தேர்வை எழுதும்படி கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்தன.புதிய மாணவர் சேர்க்கை நடக்க உள்ளதால், தங்கள் மாணவர்களின் மதிப்பெண்ணை உயர்த்தி காட்டுவதற்காக, மீண்டும் தேர்வு எழுத வற்புறுத்துவதாக, பெற்றோரும் குற்றம் சாட்டுகின்றனர்.


இது குறித்து, உயர் கல்வித் துறை சார்பில், கல்லுாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மறு தேர்வுக்கு கட்டாயப்படுத்தும் கல்லுாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...