கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் கவனத்தில் கொள்ள புதிய வழிகாட்டு நெறிமுறை - மத்திய சுகாதாரத்துறை..



கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் கவனத்தில் கொள்ள புதிய வழிகாட்டு நெறிமுறை - மத்திய சுகாதாரத்துறை


மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.


மத்திய அரசின் நெறிமுறைகள்:

கொரோனாவை எதிர்ப்பதற்கு தடுப்பூசி ஒன்று தான் சிறந்த ஆயுதம் என்று மத்திய அரசு மக்களுக்கு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான விழிப்புணர்வுகளையும் பல வழிகளில் மேற்கொண்டு வருகிறது. பிரபலமானவர்கள் மற்றும் திரை நட்சத்திரங்களை வைத்து கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வுகள் அனைத்து மாநிலங்களிலும் அரசு வெளியிட்டு உள்ளது.


உற்பத்தி குறைபாடு காரணமாக முன்னர் முன்னுரிமை அடிப்படையில் போடப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசிகள் தற்போது தகுதி வாய்ந்த அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.


அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதங்களுக்கு பிறகுதான் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 


முதல் தவணை மட்டும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், தொற்றினால் பாதிக்கப்பட்டால் குணமடைந்த 3 மாதம் கழித்து தான் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும். 


தடுப்பூசி போட்டவர்கள் 14 நாட்களுக்கு பின்னர் ரத்த தானம் செய்யலாம்.


பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள எந்தவித தடையும் இல்லை. 


கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தி வருவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...