கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வழிகாட்டு நெறிமுறைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வழிகாட்டு நெறிமுறைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை - முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதல்கள்...



பள்ளிகளில்  தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை - முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதல்கள்...


1. பள்ளி வளாகத்தினுள் எக்காரணத்தை முன்னிட்டும் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது.


2. அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்,  முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோரும் கூட வகுப்பறைகளில் மாணவர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேச அனுமதிக்க கூடாது.


3. அரசுத்துறை சாராத மருத்துவர்கள் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்க கூடாது.


4. முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி இன்றி எந்தவொரு கல்வி சாரா நிகழ்ச்சியோ விழாவோ பள்ளியில் நடைபெற கூடாது.


5. RBSK  மருத்துவ குழுவினர் மட்டுமே மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும்.


6. எக்காரணத்தை முன்னிட்டும் மாணவர்களை வெளியில் அழைத்துச் செல்ல கூடாது.  


7. போட்டிகள் முதலிய நிகழ்ச்சிகளுக்கு  மாணவர்களை அழைத்து செல்வதாக இருப்பினும் முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும்.


8. வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்படுகிறது. முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்று வருமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


9. வகுப்பறையில் பாடம் நடத்த எக்காரணத்தை முன்னிட்டும் வெளி நபர்களைப் பயன்படுத்தக் கூடாது.  நிரந்தர ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவால் நியமனம் செய்யப்பட்டு அரசால் ஊதியம் பெற்று வரும் தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே பள்ளியில் பாடம் நடத்த அனுமதிக்கப்பட வேண்டும்.  வேறு நபர்கள் பள்ளியில் பாடம் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தால் சார்ந்த ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


10. EMIS பணிகளை AIs மூலம் செய்ய வேண்டும். ஆசிரியர்களை EMIS பணிகள் செய்யப் பயன்படுத்தக் கூடாது.


11. பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் மதிய உணவிற்காக பள்ளியை விட்டு வெளியே செல்லக் கூடாது.


12. மாணவர்களிடம்நேர்மறையான சிந்தனைகளை விதைக்கும் வண்ணம் ஆசிரிய ர்களின் பேச்சு இருக்க வேண்டும்.  எதிர்மறையான பேச்சுகள், இரட்டை அர்த்தமுள்ள பேச்சுகள் முதலியவற்றை கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.


13. ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்கள் அல்லது மாணவிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவதை தவிர்க்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களிடம் மட்டுமே தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர்கள் வருகை புரியாததற்கான காரணம் முதலியவற்றைக் கேட்டு அறிய வேண்டும்.


14. விடுமுறை நாட்களில் பள்ளியில் எந்த ஒரு வெளி நிகழ்ச்சியும் நடக்க அனுமதிக்க கூடாது.


15. அரசுத்துறை சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக இருப்பினும் முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும்.


16. துறை சார்ந்த வல்லுநர்கள், பேராசிரியர்கள், அறிஞர்கள் ஆகியவர்களை பள்ளிக்கு அழைத்து மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தால், அவர்கள் பேச உள்ள பொருள் குறித்து முன்னரே முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவித்து முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.


17. எக்காரணத்தை முன்னிட்டும் மாணவர்களிடம் சாதி, மதம் தொடர்பான கருத்துக்களை ஆசிரியர்கள்  பேசுதல் கூடாது.


18. அரசியல்வாதிகள் யாரையும் பள்ளியில் அனுமதிக்க கூடாது 


19. தலைமையாசிரியர்கள் அனைத்து அறிவுரைகளையும் புரிந்து கொண்டு பள்ளியில் பிரச்சனை  இல்லாமல் வகையில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது 


மேற்காணும் முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவது சார்ந்த வழிகாட்டுதல்கள் - `நாள்:02.09.2024 - 03.00 P.M...



 கலைத் திருவிழா போட்டிகள் 2024-2025 - வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு...


கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவது சார்ந்த வழிகாட்டுதல்கள் - `நாள்:02.09.2024 - 03.00 P.M...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கையடக்க கணினி மூலம் இணைய வழியில் மாணவர்கள் கற்றல் ஆய்வு திட்டம் (தொடக்கப் பள்ளிகள்) - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

 


கையடக்க கணினி மூலம் இணைய வழியில் மாணவர்கள் கற்றல் ஆய்வு திட்டம் (தொடக்கப் பள்ளிகள்) - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... 


 மாணவர்களை இணைய வழியில் சென்னையில் இருந்த நேரடியாக மதிப்பீடு செய்வார்கள். ஒவ்வொரு மாணவரும் அவர்களுக்கு வரும் கேள்விகளை அவர்களே படித்து விடை அளிக்க வேண்டும்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தனியார் பள்ளிகளில் வாகனங்களில் செல்லும் மாணவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் - தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க எண்.8787/ஆ3/2023, நாள் .04.2024...



 தனியார் பள்ளிகளில் வாகனங்களில் செல்லும் மாணவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் - தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க எண்.8787/ஆ3/2023, நாள் .04.2024...


Guidelines regarding safety of students traveling in vehicles in private schools - Tamil Nadu Director of Private Schools Proceedings Rc.No.8787/A3/2023, Dated .04.2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தனியார் பள்ளிகள் இயக்ககம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:

தனியார் பள்ளிகளில் மாணவ மாணவியருக்காக இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் கட்டாயமாக பெண் உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் நியமிக்க வேண்டும். பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்களை இயக்கும் ஓட்டுநரின் உரிமத்தை பள்ளி நிர்வாகம் அவ்வப்போது சரிபார்த்து அவை காலாவதியாவதற்கு முன்பே அவற்றை புதுப்பிக்க அறிவுறுத்த வேண்டும்.

பள்ளி வாகனங்களில் உதவியாளர்களை நியமிக்கும் போது அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான போலீசார் சான்று சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவரிடம் மருத்துவ சான்று சமர்ப்பிக்க வேண்டும். அந்த உதவியாளருக்கு போக்குவரத்து துறையால் அளிக்கப்படும் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு நாள் புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும். தினமும் சுவாச சோதனை மேற்கொள்ள வேண்டும். அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும். சிசிடிவி தரவுகள் அனைத்தும் குறைந்த படசம் 6 மாதம் பராமரிக்கப்பட வேண்டும். பின்னர் காவல் துறையில் ஒப்படைக்க வேண்டும். போக்கு வரத்து துறையிட மிருந்து பள்ளி வாகனம் என்பதற்கான அனுமதி பெறப்பட்டு இயக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாகனத்துக்கும் தரச்சான்று புதுப்பிக்கப்பட வேண்டும். பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி கண்டிப்பாக வைக்க வேண்டும்.


தீயணைப்பு கருவி பொருத்தப்படுவதுடன், அதை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும். பள்ளிகளின் தொலைபேசி எண்கள் வாகனங்களில் எழுதப்பட வேண்டும். பள்ளி வாகனங்களில் முன், பின் சக்கரங்களின் இடையே பாதுகாப்பு தடுப்பு கண்டிப்பாக பொருத்த வேண்டும். காலாவதியான வாகனங்களை கண்டிப்பாக இயக்க கூடாது. அவசரகாலங்களில் பயன்படுத்தும் வகையில் அவசரகால பொத்தான் பொருத்த வேண்டும். வாகனங்களின் உட்புறத்தில் மாணவ மாணவியர் அறியும் வகையில் அவசர கால உதவி எண்களான 14417, 1098 ஆகியவை எழுதப்பட வேண்டும்.


எந்த ஒரு பள்ளி வாகனத்திலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் மாணவ மாணவியரை அழைத்துச் செல்லக் கூடாது. குழந்தைகள் ஏறும்போதும், இறங்கிச் செல்லும் போதும் வாகனத்துக்கு அருகிலோ, பின்புறத்திலோ குழந்தைகள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே வாகனங்களை இயக்க வேண்டும். குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வந்த பிறகு அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் குழந்தைகளை ஒப்படைத்தபிறகே வாகனத்தை அங்கிருந்து நகர்த்த வேண்டும்.


அதேபோல, வாகனங்களில் பயணம் செய்யும் மாணவ மாணவியர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி வெளிப்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் மனசுப் பெட்டியை வாகனத்தில் பொருத்த வேண்டும். பள்ளித் தலைமை ஆசிரியர், பள்ளி முதல்வர் மற்றும் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த 2 நபர்கள் உடனடியாக இந்த புகார் பெட்டியில் பெறப்படும் புகார்களின் மீது 24 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரம் ஒரு முறை மாணவ மாணவியருக்கு சாரண சாரணியர் அமைப்புகளில் உள்ள பெண் ஆசிரியர்களை கொண்டு கூட்டம் நடத்தி மாணவர்களிடம் இ ருந்து கருத்துகளை பெற வேண்டும். அந்த கூட்டத்தல் பாலியல் குற்றங்கள் மட்டும் அல்லாமல் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுகிறதா, வாகனம் ஓட்டும் போது செல்பேசியை ஓட்டுநர் பயன்படுத்துகிறாரா, தவறான வழியில் வாகனம் இயக்குவது, வாகனத்தில் புகைபிடிப்பது, போன்ற நிகழ்வுகள் குறித்தும் கேட்கப்பட்டு பள்ளி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.


நீட், ஜே.இ.இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு...



நீட், ஜே.இ.இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு - GUIDELINES FOR REGULATION OF COACHING CENTER...


வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய கல்வி அமைச்சகம்


"16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பயிற்சி மையங்களில் அனுமதி இல்லை"


மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் படி பாடம் நடத்தக் கூடாது


குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்ய தடை


விதிமுறைகளை மீறும் பயிற்சி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும்- மத்திய கல்வி அமைச்சகம்


விதிமீறும் பயிற்சி நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்...



>>> GUIDELINES FOR REGULATION OF COACHING CENTER - Click Here to Download...



6-12ஆம் வகுப்புகளுக்கு மாநில அளவிலான அரையாண்டு பொதுத் தேர்வு நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம் - இணைப்பு: 6-12ஆம் வகுப்புகள் தேர்வு கால அட்டவணை & வினாத்தாள் பதிவிறக்கம் - வழிகாட்டு நெறிமுறைகள் (State Project Director Letter for Conducting State Level Half Yearly Public Examination for Classes 6-12 - Attachment: Class 6-12 Exam Time Table & Question Paper Download - Guidelines)...


6-12ஆம் வகுப்புகளுக்கு மாநில அளவிலான அரையாண்டு பொதுத் தேர்வு நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம் - இணைப்பு: 6-12ஆம் வகுப்புகள் தேர்வு கால அட்டவணை & வினாத்தாள் பதிவிறக்கம் - வழிகாட்டு நெறிமுறைகள் (State Project Director Letter for Conducting State Level Half Yearly Public Examination for Classes 6-12 - Attachment: Class 6-12 Exam Time Table & Question Paper Download - Guidelines)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள அரையாண்டு தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியாகி உள்ளது.


இது குறித்து பள்ளிகல்வி துறை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் (2023-24) டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளன. 


மாணவர்கள் நலன் கருதி, அதற்கான உத்தேச கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி தேர்வுகள் முடிவடைகின்றன. 


அதேபோல் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. 


சிறப்பு குழு சார்பில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் இரண்டு விதமான கேள்வித் தாள்களை இந்த குழுவானது தயாரிக்கும்.


மேலும் இம்முறை மாநிலம் முழுவதும் ஒரே கேள்வித் தாள்காளக இருக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வசதிகளும் செய்யபட்டுள்ளன.


6 முதல் 10 ஆம் வகுப்பு:


நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி தேர்வு தொடங்க உள்ளது.


இதற்கான கால அட்டவணை:


11-ஆம் தேதி அன்று தமிழ்,(மொழிப்பாடம்)


12-ஆம் தேதி அன்று விருப்பட்ட மொழி பாடம்


13-ஆம் தேதி அன்று ஆங்கிலம்


15-ஆம் தேதி அன்று அறிவியல்


18-ஆம் தேதி அன்று கணிதம்


20-ஆம் தேதி அன்று சமூக அறிவியல்


21-ஆம் தேதி அன்று உடற்கல்வி 


என 6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை நடைபெறுகிறது.


இதில் 6ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், 9, 10 வகுப்புகளுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4.30 வரையிலும் தேர்வானது நடைபெறவுள்ளது.


/இதேப்போல் 11, 12-ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கிறது. 


7ஆம் தேதி அன்று மொழி பாடம் 


8 ஆம் தேதி அன்று ஆங்கிலம், 


11ஆம் தேதி அன்று கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங் (பொது). 


13ஆம் தேதி அன்று ஆங்கில தொடர்புடையல், இந்திய கலச்சாரம் மற்றும் கொள்கைகள், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்படுத்தபட்ட மொழிப்பாடம் (தமிழ்), மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழிற்கல்வி), அடிப்படை மிண்ணணு பொறியியல். 


16ஆம் தேதி அன்று இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் தொழில் நுட்பம், வேலை வாய்ப்பு திறன்கள் 


19ஆம் அன்று வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல் 


22ஆம் தேதி அன்று உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னனு பொறியியல் , அடிப்படை கட்டுமான பொறியியல், அடிப்படை வாகன பொறியியல், அடிப்படை இயந்திர பொறியியல், துணிநூல் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலகதண்மை ஆகியவை ஆகும். 


மேலும் 12-வகுப்புக்கு காலை 09.30 மணியில் இருந்து மதியம் 12.45 வரையிலும், இதில் காலை 9.30 மணி முதல் 09.40 வரையிலான 10 நிமிடங்கள் வினாத் தாள்களை படிக்கவும், 09.40 முதல் 09.45 வரையிலான 5 நிமிடங்கள், விடைத்தாளை பூர்த்தி செய்யவும், அதன் பிறகு 09.45 மணியில் இருந்து மதியம் 12.45 வரை தேர்வானது நடைபெறும்.


இதேப்போல் 11ஆம் வகுப்புகளுக்கு மதியம் 01.15 முதல் மாலை 4.30 வரை தேர்வு நடைபெறும். இதில் 1.15 முதல் 1.30 வரை வினாத் தாள்களை படிக்கவும், விடைத்தாளை பூர்த்தி செய்யவும் நேரம் தனியாக ஒதுக்கப்பட்டு உள்ளது.


2023-24ஆம் கல்வியாண்டு முதல் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (CMBFS) - அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: நிலையான வழிகாட்டு செயல்முறைகள் (Chief Minister's BreakFast Scheme (CMBFS) from academic year 2023-24 – State Project Director's Proceedings Regarding implementation in all Primary / Middle Schools – Attachment: Standard Operating Guideline Processes)...


>>> 2023-24ஆம் கல்வியாண்டு முதல் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (CMBFS) - அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: நிலையான வழிகாட்டு செயல்முறைகள் (Chief Minister's BreakFast Scheme (CMBFS) from academic year 2023-24 – State Project Director's Proceedings Regarding implementation in all Primary / Middle Schools – Attachment: Standard Operating Guideline Processes)...


அரசுப் பள்ளி மாணவர்கள் ( 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வரை ) காலை உணவு திட்டம் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு....


பள்ளித் தலைமையாசிரியர் குழுவின் தலைவராக செயல்படுவார்...


9 வகையான பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்.


இத்திட்டத்திற்கு என்று தனியாக Mobile App...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


கோவிட்19 அதிகரிப்பு - வழிகாட்டுதல்கள் தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலச் செயலாளர் அனைத்து மாநிலங்களின் முதன்மைச் செயலாளர்களுக்கும் கடிதம் (Union Secretary for Health & Family Welfare & Secretary, DG, ICMR addressed Letter to all Addl. Chief Secretary/ Principal Secretary/Secretary of all State's/UT's regarding gradual but sustained in trajectory of COVID19 cases since mid-February 2023 & issued guidelines)..


>>> கோவிட்19 அதிகரிப்பு - வழிகாட்டுதல்கள் தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலச் செயலாளர் அனைத்து மாநிலங்களின் முதன்மைச் செயலாளர்களுக்கும் கடிதம் (Union Secretary for Health & Family Welfare & Secretary, DG, ICMR addressed Letter to all Addl. Chief Secretary/ Principal Secretary/Secretary of all State's/UT's regarding gradual but sustained in trajectory of COVID19 cases since mid-February 2023 & issued guidelines)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்- மத்திய அரசு.


கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஸ் பூஷன் அறிவுறுத்தல்.


கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சுவாசப் பிரச்சனை அதிகம் உள்ளது.


கேரளா, மராட்டியம், குஜராத், கர்நாடகா, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.


மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.


அரசாணை (நிலை) எண்: 269, உயர்கல்வித் (ஜி1) துறை, நாள்: 25-11-2022 - அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர் பணியமர்த்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் (G.O. (Ms) No: 269, Higher Education (G1) Department, Dated: 25-11-2022 - Guidelines for Recruitment of Guest Lecturer in Government Arts, Science and Education Colleges)...


>>> அரசாணை (நிலை) எண்: 269, உயர்கல்வித் (ஜி1) துறை, நாள்: 25-11-2022 - அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர் பணியமர்த்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் (G.O. (Ms) No: 269, Higher Education (G1) Department, Dated: 25-11-2022 - Guidelines for Recruitment of Guest Lecturer in Government Arts, Science and Education Colleges)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



கலைத் திருவிழா (Kalai Thiruvizha) - திருத்தியமைக்கப்பட்ட சுற்றறிக்கை - பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவிய போட்டி போன்ற போட்டிகள் தலைப்புகளுடன் வழங்கப்பட்டுள்ளது (Art Festival - Revised Circular - Competitions such as Speech Competition, Essay Competition, Painting Competition etc. are provided with titles)...


>>> கலைத் திருவிழா - திருத்தியமைக்கப்பட்ட சுற்றறிக்கை - பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவிய போட்டி போன்ற போட்டிகள் தலைப்புகளுடன் வழங்கப்பட்டுள்ளது (Art Festival - Revised Circular - Competitions such as Speech Competition, Essay Competition, Painting Competition etc. are provided with titles)...



>>>  பள்ளிக்கல்வித்துறை - கலைத் திருவிழா 2022-2023 (Kalai Thiruvizha) - போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் (முன்னதாக வெளியிடப்பட்டது) (Department of School Education - Art Festival 2022-2023 - Guidelines for Conducting Competitions)...



>>> 2022-23ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் கலைத் திருவிழா பயிற்சிகள் மற்றும் போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - பள்ளிக் கல்வி ஆணையர், தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநிலத் திட்ட இயக்குநரின் இணைச் செயல்முறைகள்...



>>>  2022-23ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்துதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




பள்ளிக்கல்வித்துறை - கலைத் திருவிழா 2022-2023 (Kalai Thiruvizha) - போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் (Department of School Education - Art Festival 2022-2023 - Guidelines for Conducting Competitions)...



>>> பள்ளிக்கல்வித்துறை - கலைத் திருவிழா 2022-2023 (Kalai Thiruvizha) - போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் (Department of School Education - Art Festival 2022-2023 - Guidelines for Conducting Competitions)...



>>> 2022-23ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் கலைத் திருவிழா பயிற்சிகள் மற்றும் போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - பள்ளிக் கல்வி ஆணையர், தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநிலத் திட்ட இயக்குநரின் இணைச் செயல்முறைகள்...



>>>  2022-23ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்துதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் - தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் (Ennum Ezhuthum Scheme Guidelines - Proceedings of the Director of Elementary Education and the Director of the State Council of Educational Research and Training) ந.க.எண்: 2411/ ஈ2/ 2022, நாள்: 23-06-2022...



>>> எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் - தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் (Ennum Ezhuthum Scheme Guidelines - Proceedings of the Director of Elementary Education and the Director of the State Council of Educational Research and Training) ந.க.எண்: 2411/ ஈ2/ 2022, நாள்: 23-06-2022...


💥 1-3 வகுப்புகள் - கால அட்டவணை (Time Table)...


💥 பாடக்குறிப்பு படிவம் - மாதிரி (Lesson Plan - Model)...


💥 கற்பிக்கப்பட வேண்டிய அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத் தலைப்புகள் (Topics to be taught in Science / Social Science)...


💥 வளரறி மதிப்பீடு (அ) செயல்பாடுகள் (பாட வாரியாக) - FA(b) Activities(Subject wise)...


💥 குறுவள மைய செயல்பாடுகள் (CRC Activities)...


💥 குறுவள மைய நாட்கள் (CRC Days)...


💥 எண்ணும் எழுத்தும் சின்னம் (Ennum Ezhuthum Logo)...


💥 எண்ணும் எழுத்தும் திட்ட இலக்கு / குறிக்கோள் (Ennum Ezhuthum Scheme Goal / Objective)...



>>> எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் - தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் (Ennum Ezhuthum Scheme Guidelines - Proceedings of the Director of Elementary Education and the Director of the State Council of Educational Research and Training) ந.க.எண்: 2411/ ஈ2/ 2022, நாள்: 23-06-2022...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...




26-01-2022 அன்று பள்ளிகளில் 73வது குடியரசு தின விழா கொண்டாடுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Celebrating the 73rd Republic Day in schools on 26-01-2022 - SOP and Proceedings of the Commissioner of School Education)...



>>> 26-01-2022 அன்று பள்ளிகளில் 73வது குடியரசு தின விழா கொண்டாடுதல் - வழிகாட்டு நெறிமுறைகள்(Celebrating the 73rd Republic Day in schools on 26-01-2022 - SOP)...


>>> 26-01-2022 அன்று பள்ளிகளில் 73வது குடியரசு தின விழா கொண்டாடுதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Celebrating the 73rd Republic Day in schools on 26-01-2022 - Proceedings of the Commissioner of School Education)...

பள்ளிகளில் சுகாதாரத்தை நிலை நிறுத்துவதற்கான நிலையான வழிகாட்டு முறைகள் (SOP) (WASH) பெறப்பட்ட அறிவுரைகள் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Standard Guidelines for the Maintenance of Hygiene in Schools (SOP) (WASH) - Suggestions received - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 016354/ஜெ2/2021, நாள்: 20-11-2021...



>>> பள்ளிகளில் சுகாதாரத்தை நிலை நிறுத்துவதற்கான நிலையான வழிகாட்டு முறைகள் (SOP) (WASH) பெறப்பட்ட அறிவுரைகள் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Standard Guidelines for the Maintenance of Hygiene in Schools (SOP) (WASH) - Suggestions received -  Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 016354/ஜெ2/2021, நாள்: 20-11-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Information about e_EPIC

e_EPIC பற்றிய தகவல்  1. e_EPIC என்பது தேர்தலின் நோக்கத்திற்கான அடையாளச் சான்றாகும். 2. EPICஐ வைத்திருப்பது வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்ப...