கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

EPFல் வட்டியில்லா கடன் – எளிய முறையில் பெறுவது எப்படி?

 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து (EPFO) சம்பளதாரர்கள் வட்டியில்லா கடனை பெற்றுக் கொள்ள முடியும். அதை எப்படி பெற்றுக் கொள்வது என்ற எளிய வழிமுறைகள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

வைப்பு நிதி கடன்:

சம்பளதாரர்கள் திருமணம், கல்வி, வீடு கட்ட, வீடு புதுப்பிக்க, மருத்துவ செலவு, ஹோம் லோன் போன்ற காரணங்களுக்காக வட்டியில்லா கடனை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் அடிப்படையில் கடன் தொகைகள் வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகைகளை செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் தொழிலாளர்ளின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் உங்கள் PF கணக்கிலிருந்து இந்த கடன் தொகைகள் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும். இதற்கு வரி விலக்கும் உண்டு.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து (EPFO) சம்பளதாரர்கள் வட்டியில்லா கடனை பெற்றுக் கொள்ள முடியும். அதை எப்படி பெற்றுக் கொள்வது என்ற எளிய வழிமுறைகள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

வட்டியில்லா கடன்:

சம்பளதாரர்கள் திருமணம், கல்வி, வீடு கட்ட, வீடு புதுப்பிக்க, மருத்துவ செலவு, ஹோம் லோன் போன்ற காரணங்களுக்காக வட்டியில்லா கடனை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் அடிப்படையில் கடன் தொகைகள் வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகைகளை செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் தொழிலாளர்ளின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் உங்கள் PF கணக்கிலிருந்து இந்த கடன் தொகைகள் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும். இதற்கு வரி விலக்கும் உண்டு.

அதன்படி கல்விக்கடன் பெற விரும்புபவர்களுக்கு வைப்பு நிதி தொகையில் இருந்து 50% எடுத்துக் கொள்ளலாம். அதற்காக அந்த பணியாளர் 7 வருடம் வரை பணியில் இருக்க வேண்டும். திருமண விசேஷங்களுக்காக கடன் தேவை என்றால் அந்த ஊழியரின் வைப்பு நிதியிலிருந்து 50% வரை எடுத்துக் கொள்ளப்படும். அதற்காக அந்த ஊழியர் 7 வருடம் வரை பணியில் இருக்க வேண்டும். இதேபோல புது வீடு வாங்குவதற்கும், மருத்துவ செலவுகளுக்கும் பல்வேறு நிபந்தனைகளுடன் கடன் தொகை வழங்கப்படுகிறது.

EPF கடன் பெற்றுக்கொள்ள;

முதலில் EPFO போர்டலில் UAN மற்றும் Password பயன்படுத்தி உள்ளே நுழையவும்.

அதில் Online பகுதிக்கு சென்று Claim என்பதை தெரிவு செய்யவும்.

பிறகு புதிய பக்கம் ஒன்று திறக்கும்.

அதில் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், பான் எண், ஆதார் எண், தொலைபேசி எண் போன்றவை கேட்கப்பட்டிருக்கும்.

அவற்றை சரி பார்த்த பிறகு Online Claim Proceed என்பதை தெரிவு செய்யவும்.

அதற்கு கீழ் ஒரு மெனு தோன்றும்.

அதில் PF ADVANCE ல் FORM 31 ஐ தேர்ந்தெடுக்கவும்.

பிறகு கடன் வாங்க விரும்பும் காரணத்தை தேர்வு செய்யவும்.

உங்களுக்கு தேவையான கடன் தொகையை குறிப்பிடவும்.

பிறகு சரியான முகவரியை குறிப்பிடவும்.

பின்பாக அதில் கையொப்பமிட்டு Get Aadhaar OTP என்பதை தேர்வு செய்யவும்.

உங்களுக்கு கொடுக்கப்படும் OTP எண்ணை பதிவு செய்யவும்.

பிறகு Validate OTP and Submit Claim Form என்பதை கிளிக் செய்யவும்.

இதன் பிறகு உங்களுக்கு கடன் வழங்கும் செயல்முறை துவங்கும்.

உமாங் ஆப் மூலம் விண்ணப்பிக்க;

உமாங் ஆப் Home பக்கத்தில் EPFO என்பதை கிளிக் செய்யவும்.

அதில் Employee Centric Services என்ற ஆப்சனில் Raise Claim என்பதை தெரிவு செய்யவும்.

பிறகு உங்கள் UAN மற்றும் OTP எண்ணை கொடுத்து லாகின் செய்து கொள்ளலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...