"கூட்டுறவு" செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறலாம் - தமிழ்நாடு அரசு நடவடிக்கை...
>>> செய்தி வெளியீடு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
"கூட்டுறவு" செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறலாம் - தமிழ்நாடு அரசு நடவடிக்கை...
>>> செய்தி வெளியீடு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
கூட்டுறவு - கூட்டுறவு வங்கிகள் / சங்கங்கள் மூலம் பல்வேறு வகைக் கடன்கள் வழங்குதல் - கடன்களின் உச்சவரம்பினை உயர்த்துதல் - தொடர்பாக - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம், நாள்: 09-01-2024 - Co-operatives - Disbursement of various types of loans by Co-operative Banks / Societies - Raising ceiling on loans - Regarding - Letter from Registrar of Co-operative Societies, dated: 09-01-2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் தனிநபர் கடன் உச்ச வரம்பினை ₹.15 லட்சமாக உயர்த்தி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கடிதம் (Employee Co-operative Credit and Thrift Monetary Societies raising the personal Loan ceiling to ₹ 15 lakhs - Letter of Registrar of Co-operative Societies ) ந.க.எண்: 22477/2019/வ.ஆ.1, நாள்: 27-10-2021...
>>> கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கடிதம் ந.க.எண்: 22477/2019/வ.ஆ.1, நாள்: 27-10-2021...
நகர கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கான கடன் வரம்பு - 6 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தி வழங்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் ந.க.எண்:33372/2021/நவ1, நாள்: 03-08-2021...
>>> கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் ந.க.எண்:33372/2021/நவ1, நாள்: 03-08-2021...
2016 ஆம் ஆண்டு நிலுவையில் இருந்த தள்ளுபடி செய்யப்படாத கடன்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை உத்தரவு...
2021 சட்டமன்ற தேர்தலின் போது விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், விவசாயிகளின் பயிர்க்கடன் மத்திய கால கடன்களாக மாற்றம் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள கடன் விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அசல், வட்டி, அபராதவட்டி, இதர செலவுகளின் விவரங்களை முழுமையாக அனுப்பிவைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் கல்விக்கு கம்ப்யூட்டர் வாங்குவது, திருமணம் உள்ளிட்ட செலவுகளுக்காக, ஆசிரியர்களுக்கு 14 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அவர்களது சம்பளத்தில் பிடித்துக் கொள்ளும் வகையில், அரசின் சார்பில் கடன் உதவி வழங்கப்படும். இதன்படி, நடப்பு நிதியாண்டில் கடன் வழங்குவது குறித்து, பள்ளி கல்வியின் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனர் நரேஷ், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதன் விபரம்: அரசின் நிதித்துறை அனுமதியின்படி, அரசு பணியில் உள்ள ஆசிரியர்கள், தங்களின் திருமண செலவு, கார், 'டூ - வீலர்' போன்ற வாகனங்கள் வாங்குவதற்கு, அரசின் விதிமுறைப்படி கடன்களை பெறலாம்.மேலும், ஆசிரியர்கள் தங்களின் கல்வி பயன்பாட்டுக்காக கணினி வாங்குவதற்கும், கடன் வழங்கப்படும்.
அவரவர் சம்பள விகிதத்துக்கு ஏற்ப, அதிகபட்சம் 14 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதற்கான அரசாணையை ஆசிரியர்கள் பார்த்து கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இரண்டு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் திருமணம் தொடர்பான கடன் தொகைகள் அரசிடமிருந்து பெறும் முறை, அரசாணைகள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் (Proceedings, Government Orders and Application Forms for Government Servants, Teachers Two Wheelers, Four Wheelers and Marriage Loans from Govt.)...
◆Finance [Salaries] Department G.O.Ms.No.27, Dated 20-01-2021...
◆ Finance [Loans and Advances Cell] Department G.O.Ms.No.98, Dated 26-02-2021...
◆FORM OF APPLICATION BY A GOVERNMENT SERVANT FOR AN ADVANCE FOR PURCHASE OF A MOTOR CAR / MOTOR CYCLE / SCOOTER / MOPED...
◆RECOMMENDATION AND CERTIFICATE BY THE HEAD OF OFFICE
◆ The Tamil Nadu Financial Code Vol – 1 –Loans and Advances – 289-371 (Pg – 12 -94)
◆ TNFC- FORMS – 487-502 (Pg – 95-110)
◆ TNFC-REGISTERS – 570-578 (Pg – 111-120)
மாத ஊதியம் /ஓய்வூதியம் பெறுவோர் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 01-04-2021க்குப் பின் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தால் எஸ்.பி.ஐ. வங்கியிலிருந்து ரூ.5 இலட்சம் வரை 8.5% வட்டி வீதத்தில் கடனுதவி பெறலாம்...
SBI KAVACH Personal Loan Scheme
If monthly Salary Person / Pensioners / Family members have been exposed to corona infection after 01-04-2021, You can get a loan up to Rs 5 lakh from SBI bank...
Purpose
For Covid treatment of self or family member who are found Covid Positive on or after 01.04.2021
>>> கடன் திட்டம் குறித்த முழுமையான தகவல்களை அறிய இங்கே சொடுக்கவும்...
கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் உள்ள நகைக்கடன் விரைவில் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு...
கடந்த ஆட்சியில் விவசாயிகள் அல்லாத நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்திருப்பதாக நிறைய புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும், அது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குதல், உர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கூட்டுறவுத்துறை பதிவாளர் சுப்ரமணியன், ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் தென் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு கரோனா நிவாரண நிதி, மளிகைப் பொருட்கள் தொகுப்பு ஆகியவை தடையின்றி விரைவாக சென்றடைவதற்கு தேவையான ஆலோசனைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.
ஆய்வுக்குகூட்டத்திற்கு பிறகு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன்கள் வழங்க ரூ.11,500 கோடிக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு குறைபாடு இல்லாமல் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்குவது தொடர்பாகவும் விவாதித்தோம். இந்த அரசு எல்லா துறைகளில் சிறப்பாக செயல்படுகிறது.
கரோனாவை கட்டுப்படுத்துவதோடு இந்த நெருக்கடியான காலத்திலும் ஏழை எளிய மக்களுக்கு முழுமையாக அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறோம். மழையால் சேதமடையும் விளை பொருட்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு உடனே உரிய நிவாரணம் வழங்கப்படும்.
கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும். கடந்த ஆட்சியில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு தள்ளுபடி கொடுத்து உள்ளதாக நிறைய புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து ஆய்வு செய்து, தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டுறவுப் பணிகளில் சேர்வதற்கான கடந்த ஆட்சியில் நேர்காணல் முடிந்தவர்கள் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து (EPFO) சம்பளதாரர்கள் வட்டியில்லா கடனை பெற்றுக் கொள்ள முடியும். அதை எப்படி பெற்றுக் கொள்வது என்ற எளிய வழிமுறைகள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
வைப்பு நிதி கடன்:
சம்பளதாரர்கள் திருமணம், கல்வி, வீடு கட்ட, வீடு புதுப்பிக்க, மருத்துவ செலவு, ஹோம் லோன் போன்ற காரணங்களுக்காக வட்டியில்லா கடனை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் அடிப்படையில் கடன் தொகைகள் வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகைகளை செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் தொழிலாளர்ளின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் உங்கள் PF கணக்கிலிருந்து இந்த கடன் தொகைகள் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும். இதற்கு வரி விலக்கும் உண்டு.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து (EPFO) சம்பளதாரர்கள் வட்டியில்லா கடனை பெற்றுக் கொள்ள முடியும். அதை எப்படி பெற்றுக் கொள்வது என்ற எளிய வழிமுறைகள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
வட்டியில்லா கடன்:
சம்பளதாரர்கள் திருமணம், கல்வி, வீடு கட்ட, வீடு புதுப்பிக்க, மருத்துவ செலவு, ஹோம் லோன் போன்ற காரணங்களுக்காக வட்டியில்லா கடனை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் அடிப்படையில் கடன் தொகைகள் வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகைகளை செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் தொழிலாளர்ளின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் உங்கள் PF கணக்கிலிருந்து இந்த கடன் தொகைகள் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும். இதற்கு வரி விலக்கும் உண்டு.
அதன்படி கல்விக்கடன் பெற விரும்புபவர்களுக்கு வைப்பு நிதி தொகையில் இருந்து 50% எடுத்துக் கொள்ளலாம். அதற்காக அந்த பணியாளர் 7 வருடம் வரை பணியில் இருக்க வேண்டும். திருமண விசேஷங்களுக்காக கடன் தேவை என்றால் அந்த ஊழியரின் வைப்பு நிதியிலிருந்து 50% வரை எடுத்துக் கொள்ளப்படும். அதற்காக அந்த ஊழியர் 7 வருடம் வரை பணியில் இருக்க வேண்டும். இதேபோல புது வீடு வாங்குவதற்கும், மருத்துவ செலவுகளுக்கும் பல்வேறு நிபந்தனைகளுடன் கடன் தொகை வழங்கப்படுகிறது.
EPF கடன் பெற்றுக்கொள்ள;
முதலில் EPFO போர்டலில் UAN மற்றும் Password பயன்படுத்தி உள்ளே நுழையவும்.
அதில் Online பகுதிக்கு சென்று Claim என்பதை தெரிவு செய்யவும்.
பிறகு புதிய பக்கம் ஒன்று திறக்கும்.
அதில் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், பான் எண், ஆதார் எண், தொலைபேசி எண் போன்றவை கேட்கப்பட்டிருக்கும்.
அவற்றை சரி பார்த்த பிறகு Online Claim Proceed என்பதை தெரிவு செய்யவும்.
அதற்கு கீழ் ஒரு மெனு தோன்றும்.
அதில் PF ADVANCE ல் FORM 31 ஐ தேர்ந்தெடுக்கவும்.
பிறகு கடன் வாங்க விரும்பும் காரணத்தை தேர்வு செய்யவும்.
உங்களுக்கு தேவையான கடன் தொகையை குறிப்பிடவும்.
பிறகு சரியான முகவரியை குறிப்பிடவும்.
பின்பாக அதில் கையொப்பமிட்டு Get Aadhaar OTP என்பதை தேர்வு செய்யவும்.
உங்களுக்கு கொடுக்கப்படும் OTP எண்ணை பதிவு செய்யவும்.
பிறகு Validate OTP and Submit Claim Form என்பதை கிளிக் செய்யவும்.
இதன் பிறகு உங்களுக்கு கடன் வழங்கும் செயல்முறை துவங்கும்.
உமாங் ஆப் மூலம் விண்ணப்பிக்க;
உமாங் ஆப் Home பக்கத்தில் EPFO என்பதை கிளிக் செய்யவும்.
அதில் Employee Centric Services என்ற ஆப்சனில் Raise Claim என்பதை தெரிவு செய்யவும்.
பிறகு உங்கள் UAN மற்றும் OTP எண்ணை கொடுத்து லாகின் செய்து கொள்ளலாம்.
கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று,செலுத்தாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசுப் பள்ளிகள் மற்றும் கல்வித் துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடனை சரிவர திரும்பச் செலுத்தவில்லை என தெரியவருகிறது.
பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒப்புதல்படியே பிற பணியாளர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ஆனால், கடன் தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்ய தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆசிரியர்கள் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் பெரும் நிதி இழப்புஏற்படும் சூழல் உள்ளது என்றுபல்வேறு கூட்டுறவு சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன.
ஆசிரியர்கள் கடன்பெற்ற விவரங்களை ஊதியச் சான்றிதழில் மறைத்து, இதர வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்குவதற்கு தலைமை ஆசிரியர்கள் உதவி செய்வதாகத் தெரிய வருகிறது. இது தவறானது. அரசுப் பணியாளர் நடத்தை விதிகளுக்கு எதிரானதாகும்.
எனவே, அவ்வாறு தவறு செய்தவர்கள் மீது ஒழுங்கு விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அவர்கள் பெற்ற கடன் தொகையை உரிய முறையில் திரும்பச் செலுத்தவும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
அதேபோல, ஆசிரியர்கள் கடன் பெற்ற விவரத்தை மறைத்து, முழு ஊதியம் பெற வழிசெய்த தலைமை ஆசிரியர்கள் மீதும்ஒழுங்கு விதிகளின்கீழ் நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரங்களை அனுப்ப வேண்டும்.
இனிவரும் காலங்களில் கடன்பெற்ற ஆசிரியர்களின் ஊதியத்தில் உரிய தொகையைப் பிடித்தம்செய்து அதை வங்கிக் கணக்கில் செலுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடன்களுக்கு வங்கிகள் எப்படி வட்டிவிகிதம் கணக்கிடுகின்றன தெரியுமா?
7 வங்கிகளில், குறிப்பாக தனியார் வங்கிகளில் அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களில் நீங்கள் கடன் வாங்கும்போது ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது வட்டி விகிதக் கணக்கு.
கடைசி அத்தியாயத்தின் முடிவில், பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் எதில் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி குறைவாக இருக்கும் என்று கேட்டிருந்தோம். இந்தக் கேள்விக்கு சரியான பதிலை அதாவது, பொதுத்துறை வங்கிகள்தான் எனப் பலரும் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். சரியான பதில் சொன்ன அனைவருக்கும் பாராட்டுகள்.
அது மட்டுமல்ல, கடந்த அத்தியாயத்தைப் படித்த மதுக்கூர் மணி என்பவர் ஒரு ஆலோசனை கேட்டிருக்கிறார். அவர் கேட்டிருப்பதாவது...
கடன் வாங்கினேன், திரும்பக் கட்ட முடியவில்லை...
``நான் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது தனியார் வங்கியில் எனது பெயரில் சம்பளத்தின் அடிப்படையில் வேறு எந்த பிணையும் வைக்காமல் தனிநபர் கடன் வாங்கினேன். தற்போது கொரோனாவின் காரணமாகக் கடந்த ஒன்பது மாதமாக வேலையின்றி இருக்கிறேன். இந்த நிலையில, கடன் தவணையைக் கட்ட வேண்டும் என்று வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்கின்றனர். நான் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து கூறுங்கள்!’’ என்று கேட்டிருக்கிறார். அவருக்கான பதில்...
6 மாத காலத்திற்கு ரிசர்வ் வங்கி வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி, கடன் தவணை தள்ளிவைப்பு (Loan Moratorium) வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கொரோனா பிரச்னையின் காரணமாக அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆறு மாத காலம் மாதத் தவணைகளை தள்ளி செலுத்தும் வசதியைக் கொடுக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்குக் கூடுதல் வட்டி வசூலிக்கப்பட்டாலும் சாதாரண வட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசத் தொகையை மத்திய அரசு சலுகையாக வழங்குகிறது. இது கொரோனா காலத்துக்கு முன்பு தாங்கள் கடனை ஒழுங்காக செலுத்தி இருக்கும்பட்சத்தில், ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு வங்கிகள் இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்குத் தருகின்றன. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே நான் அவருக்கு அளிக்கும் பதில்.
ரூ.2 லட்சம் கடனுக்கு எவ்வளவு வட்டி?
சரி, இந்த அத்தியாயத்துக்கு வருவோம். வங்கிகளில், குறிப்பாக தனியார் வங்கிகளில் அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களில் நீங்கள் கடன் வாங்கும்போது ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது வட்டி விகிதக் கணக்கு. உதாரணமாக, தனியார் வங்கி ஒன்றில் தனிநபர் கடன் ரூ.2 லட்சத்துக்கு விண்ணப்பிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்கள் வட்டி விகிதம் 24% எனில் (தற்போதைய சூழ்நிலையில் தனிநபர் கடன் வட்டி விகிதம் 16 சதவிகிதத்திலிருந்து 24% வரை தரப்படுகிறது), நம்மில் பலர் மாதம் இரண்டு வட்டி என்ற முறையில் நம்மிடம் வட்டி பணம் வசூலிக்கிறது என்று நினைக்கிறார்கள்.
அதாவது, வருடத்துக்கு 24% வட்டி என்றால் மாதத்துக்கு 2% வட்டி என்று கணக்கிடுகிறார்கள். இது தவறு. ரூ.2 லட்சத்துக்கு 24% வட்டிக்கு மூன்று வருடங்களுக்கு மாதாந்தரத் தவணை ரூ.7,847 என்று வரும். அப்படி மூன்று வருடங்களுக்குச் செலுத்தினால், மொத்த வட்டி செலுத்திய தொகை ரூ.82,476 என்று வரும்.
இதுவே நாம் நடைமுறையில் பேசும் இரண்டு வட்டி என்று கணக்கிட்டால், நாம் செலுத்த வேண்டிய மொத்த வட்டி தொகை மூன்று வருடங்களுக்கு ரூ.1.44 லட்சம் (ரூ.4,000 மாத வட்டி x 36 மாதங்கள்) என்று வரும். இதிலிருந்து நாம் சாதாரணமாக வட்டி கணக்கிடுவதற்கும் வங்கிகள் வட்டி கணக்கிடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணரலாம்.
கடன் வரலாற்றைப் பொறுத்தே வட்டி
இதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் வட்டியை மட்டும் செலுத்திவிட்டு, அசலை எப்போது வேண்டுமானாலும் பகுதி பகுதியாகவோ, மொத்தமாகவோ செலுத்தும் வசதி இருக்கிறது. அவ்வாறு பகுதி பகுதியாகச் செலுத்தும்போது அதற்கு ஏற்றவாறு வட்டித் தொகை குறையும். இத்தகைய கடன் திட்டம் பெரும்பாலும் தங்க நகைக் கடன்களில் வழங்கப்படுகிறது.
ஒரே விதமான கடனுக்கு, வட்டி விகிதம் என்பது ஒவ்வொரு வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு இடையே மாறுபடலாம். மேலும், ஒவ்வொரு நபருக்கும் மாறுபடலாம். ஒருவரின் தனிப்பட்ட அல்லது நிறுவனத்தின் வயது, கல்வித்தகுதி, தொழில், வருமானம், கூடுதல் வருமானம், சொத்து மதிப்பு, கடன் தகவல் அறிக்கையில் எந்த பாதகமான விஷயங்களும் இடம்பெறாதது ஆகியவற்றைக் கொண்டு வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. மேற்சொன்ன அம்சங்கள் உங்களுக்கு சாதகமாக இருந்தால், வட்டி விகிதம் குறைவாக இருக்கும்.
ஆப்ஸ் மூலம் கடனா, ஜாக்கிரதை!
மேற்சொன்ன அம்சங்கள் மட்டுமல்லாமல், இப்போது வந்திருக்கும் ஃபின்டெக் (Fintech) நிறுவனங்கள் தங்களின் சமூகத்தொடர்புக் கணக்குகள், கடன் அட்டை பயன்பாடுகள், வெளிநாட்டு பயணங்கள், கடன் தேவையின் அவசரம் ஆகியவற்றைக் கொண்டு தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய கடன் அளவையும் வட்டி விகிதத்தையும் தீர்மானிக்கின்றன. ஆகவே, நீங்கள் எந்த வங்கியிலோ, வங்கிசாரா நிதி நிறுவனத்திலோ கடன் வாங்குவதற்கு முன்னால், அந்த வட்டி விகிதம்தான் தங்களுக்கு கிடைக்கக்கூடிய குறைந்த வட்டி விகிதம் என்று உறுதிப்படுத்திக் கொண்டு எடுப்பது நல்லது. ஆப்ஸ் மூலம் கடன் தரும் நிறுவனங்களிலிருந்து முடிந்தவரை கடன் பெறாமலே இருப்பது நல்லது.
இப்போது மாதாந்தரத் தவணை கணக்கீட்டு முறையையும் வட்டி விகிதங்கள் பற்றியான தகவல்களையும் பற்றி ஓரளவுக்கு தெளிவடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி: விகடன்
குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பா? - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் Did the Tamil Nadu ...